அன்புள்ள ஆசிரியர்

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

நந்திதா


அன்புள்ள ஆசிரியர்
வணக்கம்
திண்ணையில் வண்ணக் கட்டுரைகளை வழங்கி வரும் எனது பெருமதிப்புக்குரியவர்களான திரு ஜெயபாரதன் அவர்களுக்கும் திருமுடிக்காரி பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதிய திரு தமிழ நம்பி அவர்களுக்கும் என் வணக்கங்கள்.

திரு ஜெயபாரதன் அவர்களின் கட்டுரைகள் என் போன்ற விஞ்ஞான அறிவற்றவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

திரு தமிழ நம்பி அவர்களின் கட்டுரை திரு முடிக்காரி பற்றி இது வரை அறியப் படாத வரலாற்றினை தமிழ் மக்களுக்கு வழங்கி உள்ளது.ஆண்களில் சிறந்தவரை நம்பி என்றழைப்பது தமிழர் தம் வழக்கம். தமிழர்களில் சிறந்தவராகிய அவருக்கு அந்தப் பெயர் முற்றிலும் பொருந்தும்

இந்த இருவரையும் வாழ்த்த எனக்குத் தகுதியில்ல, வணங்குகிறேன். இருவரும் பல்லாண்டு வாழ்ந்து தமிழுலகுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும்.
அதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்

இலாப நோக்கு இல்லாது தமிழுலகுக்குத் திண்ணை செய்து வரும் தொண்டுக்கு ஈடுமில்லை இணையுமில்லை.
மீண்டும் அனைவருக்கும் என் வணக்கங்கள்
அன்புடன்
நந்திதா

nandhithak@yahoo.com

Series Navigation

நந்திதா

நந்திதா