அத்தை மகள்!
கரு.திருவரசு

எடுப்பு
அத்தை மகளே அந்த நிலவு – அவள்
அசைந்துவந்தால் எங்கும் அழகு! – அத்தை
தொடுப்பு
மெத்தை மெத்தையாய் மேகங்களே!
மேகங்கள் அசைவில் மோகங்களே! – அத்தை
கண்ணிகள்
முத்துச் சுடர்கள் அந்த நட்சத்திரங்கள்
முல்லைச் சிரிப்பில் சிந்தும் விசித்திரங்கள்!
குத்து விளக்காய் நல்ல குலமகளாய்க்
கோலம் செய்வாள் அந்த நிலவுமகள்! – அத்தை
பத்து வயதில் அவள் பால்நிலவு!
பருவம் வந்தால் சுவைத் தேன்நிலவு!
பித்துக் கவிஞன் மன மேடையிலே
பின்னிப் பின்னி நடக்கும் பெண்நிலவு! – அத்தை
thiruv@pc.jaring.my