அதுவரை பயணம்.

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

செண்பக ஜெகதீசன்ஆனந்தம் அளிக்கிறது
அறிவியல் வளர்ச்சி,
அச்சம் அளிக்கிறது
அமைதியின் வீழ்ச்சி..,
பாரெலாம்
நடுங்குது பயத்தில்,
நனைகிறது கண்ணீரில்,
கேட்கிறது கூக்குரல்கள்,
அது
தெருச் சண்டையாலா,
வாய்பிளக்கும்
வன்முறையாலா,
வலியவரும் போராலா..?
மாறித்தான் விட்டான்
மனிதன் –
மனத்தில் சுமையால்,
வென்றிடும் வெறுப்பால்,
புகைந்திடும் பகையால்..
பலன்-
வீதியில்
விழுந்திடும் பிணங்களாய்..
ஓடிடும் இரத்தமாய்.. !

எங்கே
போய்க் கொண்டிருக்கிறோம்..?
எங்கோ
தொலைத்து விட்டோம்
அமைதியை,
அதைத் தேடித்தான்
அடுத்து நம் பயணம்,
ஆனால்
அருகில் இல்லையே அமைதி,
அதிக தூரமென்றாலும்
அயராது தொடர்வோம்-
அடையும்வரை இலக்கை !

செண்பக ஜெகதீசன்

Series Navigation

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்