அதற்காக….

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்


அழகாய் இருக்கும் மயில்கள் ஆடும்
ஆட்டம் மட்டும் பார்க்கலாம் – அது
பழகியதென்று பாடச் சொன்னால்
பாட்டை எப்படி ஏற்கலாம் ?

பாட்டுக் குயிலைப் பார்த்தால் பிடித்துப்
பாடச் சொல்லிக் கேட்கலாம் – அது
ஆட்டம் போட நினைத்தால் பாவம்
அனுமதி தந்திட மறுக்கலாம்

பொன்னில் அணிகலன் அணிந்தால் அழகு
போட்டுக் கொண்டால் பெருமைதான் – நம்
கண்ணில் தைக்கக் கொடுத்தால் ஊசியைக்
கொள்வது யார்க்கும் சிறுமைதான்

ஒளியாய் வெளிச்சம் தருகிற விளக்கின்
ஒளியில் உலகம் தெரியுமாம் – அந்த
ஒளியின் மூலம் நெருப்பை வளர்த்தால்
ஊரே ஒருநாள் எரியுமாம்

சித்திரம் வாங்க வருவோர் விலையைச்
சொன்னால் மிகவும் நல்லது – நாம்
இத்தனை விலைக்குப் பதிலாய் இங்கே
இருவிழி கேட்பது தீயது

thiruv@pc.jaring.my

Series Navigation

ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்