This entry is in the series 20040603_Issue

பா.தேவேந்திரபூபதி


வேண்டித் தவித்து
நிறையப் பேர்கள்
காத்துகிடந்த போதும்
வேண்டாத யாருக்கோ
விரையமாகிறது
நெடுநாளைக்கு பின்னாலான
சமர்ப்பணங்கள்!

ஒவ்வொருவருக்காகவும்
தினம் தினம் கதவைத் தட்டுகிறார்கள்
அவர்களுக்கான போதும்
அறியப் படாத செய்திகளை
உள்ளடக்கி காத்துக் கிடக்கின்றன
வீசியெறியப்பட்ட
சில பிரிக்கப் படாத
தபால் உறைகள்
—-
kousick2002@yahoo.com

Series Navigation