அணைப்பு

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

அனந்த்


அணையென்றேன் அயர்வதற்கோர் அணைதந்தாள் அதன்மேலும்

அணையென்றேன் ஆங்கிருந்த அகலணைத்தாள் அடிபெண்ணே!

அணையென்றேன் அன்பிற்கே(து) அணையென்றாள் ஐயோ!நீ

அணையென்றேன் அவளணைத்தாள் அம்மம்மா! அதன்சுகமே!

(அயர்வுக்குச் சோர்வு போக உன்மத்தம், மனக்கவர்ச்சி என்ற பொருள்களும் உண்டு! முதலில் தலையணை, பின் விளக்கணைத்தல், அதன்பின் அன்புமொழி, இறுதியில் அணைப்பு… குறும்புக்காரப் பெண்தான்!)

Series Navigation