அட்லஸ்

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

மங்கை பசுபதி


எல்லாம், உலகிலுள்ள எல்லாம்
உன் ஆதிக்கத்தில்தானா ஐயா ?
சிவன்மிதித்த பாதத்தின்
பெருவிரலின் அடியில் நெருக்கப்பட்டு
முனகலையே சாமகான வேதமாக
சமர்ப்பித்த ராவணனா நாங்களெல்லாம் ?
ராவணனும் இல்லை!
மண்டோதரியும் இல்லை!
வள்ளத்தோள் படைத்தளித்த
‘சிந்தாவிஸ்டயாய சீதா ‘வும் அல்ல நாங்கள்!
‘ ‘அட்லஸ் காம்ப்ளெக்ஸ் ‘ ‘
ஆபத்தானது ஐயா;
நீ தூக்கியுள்ள உலகம்
அதன்மேல் ஒரு
சிவபெருமானைப் பெற்றிருக்காது
என்பது என்ன நிச்சயம் ?
****
mangai_pasu@hotmail.com

Series Navigation

மங்கை பசுபதி

மங்கை பசுபதி