அச்சம்

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

அருண்பிரசாத்


சாரல்புகை படிந்த
குன்றின் மேல்
நீர் சொட்டும் கொடிகளின்
ஸ்பரிசங்கள்.

நெகிழ்ந்து கசிகிறது
மண்
ஊடுருவும் வேர்களுக்கு
மடியை விரித்தபடி.

மெலிதாய் அச்சம் தருபவை
பெருங்கற்கள்
என்றேனும்
சிற்பங்களாய் உறைந்துவிடலாம்.

—-
everminnal@yahoo.com

Series Navigation

அச்சம்

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

சித்தார்த் வெங்கடேசன்


ஆயுதங்கள் போர் நிறுத்தம் ஆரம்பித்த முதல் நாள் காலை….
காஷ்மீரத்திலோ, பாலஸ்தீனத்திலோ
இலங்கையிலோ, போஸ்னியாவிலோ
அல்லது மரணம் ஓர் சாதாரனமாகிவிட்ட ஏதோ ஓர் இடத்தில்

அவரவர் கொள்கையே அவர்கட்கு உயிராய்
திகழும் இரு போராளிகள்
ஒருவர்பால் ஒருவர் துப்பாக்கி ஏந்த
விசையுரு பந்தாய் பழக்கப்பட்ட விரல்
மூலையை முந்திக்கொண்டு விசையை அழுத்த….

மெளனம்.
கனத்த மெளனம்.

மெளனத்தின் அதிற்ச்சியில் கண்கள் சந்திக்க

ஒன்று புரிந்தது, இருவருக்கும்.

இன,
மொழி,
மத,
நிற
சட்டைகளை திறந்து பார்த்தால்

மரணமும் அதை சார்ந்த அச்சமும் மட்டும்
பொது.
***
siddhu_venkat@yahoo.com

Series Navigation