This entry is in the series 20080703_Issue

கவிதா நோர்வே


இந்த சீதைகள் கடத்தப்;படுவதில்லை

விலைபோகிறார்கள்

ராமன்களோ விற்கப்படுகிறார்கள்

நாடுகளே காடுகளானபின்

ஆயுள் யாத்திரை

முன் வாசலுக்கும்

பின் வாசலுக்கும்

அசோகவனம்

இருக்கிறது

மறைவாய்

ஒவ்வொரு வீட்டின் பின்முற்றத்திலும்

முன்வாசலில் உலா வரும் ராமன்கள்

பின் முற்றத்தில் இராவணன்கள்

மீட்புப் போராட்டம்

சீதைக்கும் இராமனுக்கும்

எதிர்காலத் தீபிளம்பில்

தள்ளிவிடப்படுறார்கள்

லவனும் குசனும்

இதில் மீண்டு வந்து

தன்னை நிரூபித்துக்காட்டுகிறது

காசு.


kavithai1@hotmail.com

Series Navigation