அக்டோபர் 14,2004

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

அசுரன்


அன்புடன் திரு. காசி. ஆறுமுகம் அவர்களுக்கு,

வணக்கம். யுனிக்கோடு ி தொடர்பான துரைப்பாண்டியின் நேர்காணலில் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பவை இடைச்செருகல்கள் அல்ல. மேற்கோள்கள், விளக்கங்கள்.

யுனிக்கோடு என்றால் என்ன ?, இன்றைய யுனிக்கோடு வடிவமைப்பின் ஆதரவாளர்களின் கருத்துகள் என்ன ?, எதிர்காலத்திற்கு இன்றையக் கட்டமைப்பே போதுமா அல்லது மாற்றப்படவேண்டுமா ? ஆகிய வினாக்களை முன்வைத்து விவாதத்திற்கான ஒரு வரைவு நூலை வெளியிட விரும்பி செய்திகளைத் தொகுத்திருந்தேன். ஆனால் அதன் பக்க அளவு (உங்கள் கட்டுரை உள்ளிட்டவை) திகைப்பூட்டுமளவுக்கு அதிகமாக இருந்தது. அதை அச்சில் ஏற்ற இயலாது என்ற நான் முடிவெடுத்ிதேன்.

இந்நிலையில்…

எதிர்வரும் தமிழ் இணைய மாநாட்டைக் கருத்தில் கொண்டு யுனிக்கோடு தொடர்பான சிக்கலை ஒரு பரவலான தளத்திற்கு எடுத்துச்செல்ல விரும்பினேன். அதற்காக நண்பர் துரைப்பாண்டியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அதையே நேர்காணலாக எழுதலானேன். அப்போது திரு. முத்து நெடுமாறன் குறிப்பிட்டிருந்த கருத்துகள், எழுத்துரு பயன்பாடு குறித்து நீங்கள் குறிப்பிட்டிருந்த கருத்துகள் போன்றவை மேற்கோள்களாக, விளக்கங்களாக அமைக்கப்பட்டன.

ஆனால், அச்சிதழ்களுக்கேயான வரையறுக்கப்பட்ட பக்க அளவு, வடிவமைப்பு போன்ற காரணங்களுக்காக அந்த நேர்காணல் சுருக்கப்பட்டபோதுதான் மேற்கோள்கள் இடைச்செருகல்களாகிவிட்டன.(அப்படியும் அது புதிய பார்வையில் 3 பக்கச் செய்தியாகிவிட்டது.) அதை அப்படியே திண்ணையிலும் வெளியிட்டது உங்களை வருத்தப்பட வைத்துவிட்டது.

(மேலும், அந்த அறிவியல் ரீதியிலான விளக்கத்தை எப்படி சுற்றிச்சுற்றி எழுதினாலும் சுருக்கத்தில் இப்படிமட்டும்தானே எழுதமுடியும!ி.)

மற்றபடி உங்கள் வரிகளை உள்ளது உள்ளபடியே சுடவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.

பக்க வரையறையற்று எழுத உதவும் இணையப் பக்கங்களின் வசதி, இணைப்பு கொடுக்கும் வசதி போன்றவற்றின் பயனை உங்கள் கடிதம் எனக்கு இன்னும் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

பின்குறிப்பு: உன்கோடு,…. கட்டுரைத்தொடர் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இணையத்தில் வலைப்பதித்தல் தொடர்பான உங்கள் கட்டுரைத்தொடரை நூலாகவெளியிட விரும்பி முன்னர் மடலும் எழுதியிருக்கிறேன். (தமிழில் எழுதலாம் வாருங்கள் ! வலையில் பரப்பலாம் வாருங்கள் ! என்ற உங்கள் தொடரில் 6ஆம் பாகத்திற்கு மேல் ஒரு இணைப்பு மட்டுமே வந்தது. அத்தொடரை எப்போது முடிக்கப்போகிறீர்கள்.)

நன்றி.

அன்புடன்,

அசுரன்

—-

Series Navigation

அசுரன்

அசுரன்