அக்கினிப் பூக்கள் – 10

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

சி. ஜெயபாரதன், கனடா


குதிரை வேறு, கழுதை வேறு,
கோவேறு கழுதை வேறு,
வரிக்குதிரை வேறு மெய்ஞானிக்கு !
ஒரே கழுதை அனைத்தும் மூடனுக்கு
ஞானப் பெண்ணே !

சொல்லாமல் செய்வான் ஒருவன் !
சொல்லியும் செய்யான் ஒருவன் !
தானாகச் செய்வான் ஞானி !
வீணாகச் செய்வான் மூடன்
ஞானப் பெண்ணே !

கல்லாமல் மேய்பவன் ஒருவன் !
காணாமல் ஆய்பவன் ஒருவன் !
கற்றும் புரியாதவன் ஒருவன் !
புரிந்தும் மறைந்து கொள்பவன் ஒருவன்
ஞானப் பெண்ணே !

யானைக்குப் புவித் தளம் சறுக்கும் !
ஞானிக்கு உச்சி மலை வழுக்கும் !
பேடிக்கு நெஞ்சில் சுளுக்கும் !
மூடனுக்குப் பழங்கள் எல்லாம் புளிக்கும்
ஞானப் பெண்ணே !

இல்லாத இடத்தில் உள்ளதைத் தேடவா ?
இருக்கும் இடத்தில் இல்லாமை தேடவா ?
சிறுக்கும் இடத்தில் பெருப்பதைத் தேடவா ?
பெருக்கும் இடத்தில் சிறுப்பதைத் தேடவா
ஞானப் பெண்ணே ?

உனக்கொரு கருத்துண்டு ஒன்றைப் பற்றி !
எனக்கொரு கருத்துண்டு அதைப் பற்றி !
மாறாய் மாந்தருக்கு வேறு கருத்து !
மெய்ஞானம் காண்ப தெப்படி இம்மூன்றில்
ஞானப் பெண்ணே ?

+++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) Janauary 1, 2008

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா