அக்கினிப் பூக்கள் -4

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

சி. ஜெயபாரதன், கனடா


கந்தை யானாலும் கசக்கிக் கட்டு !
காவிரி காயுது கண்ணீர் விட்டு !
குடிநீருக் கில்லை துட்டு !
குடிக்கவா ? குளிக்கவா ? கசக்கவா ?
ஞானப் பெண்ணே !

மதஞானி தேடுவான் வேதாந்தி !
வேதாந்தி தேடுவான் விஞ்ஞானி !
விஞ்ஞானி தேடுவான் சித்தாந்தி !
அஞ்ஞானி தேடுவான் மதஞானி
ஞானப் பெண்ணே !

ஆரஞ்சுப் பழமும் ஒன்றுதான் !
ஆப்பிள் பழமும் ஒன்றுதான் !
அனாசிப் பழமும் ஒன்றுதான் !
வேப்பம் பழந்தான் வேறு மூடனுக்கு
ஞானப் பெண்ணே !

மதஞானி தோளில் வேதாந்தி !
வேதாந்தி மனதில் விஞ்ஞானி
விஞ்ஞானி கையில் அஞ்ஞானி !
அஞ்ஞானி பையில் வெடிமானி
ஞானப் பெண்ணே !

வேடனைத் தேடிப் போவாள் சீதா !
ஞானியைத் தேடுவார் மேதை !
மூடனைத் தேடிச் செல்வார் அறிஞர் !
யாருக்கு யார் குறி வேட்டை
ஞானப் பெண்ணே !

அறியாமை என்பது புரியாமை !
அகக் கண்ணுக்கு வெளி தெரியாமை !
ஆய்வுப் பொறிப் பற்றி எரியாமை !
அறிந்தவை தெளிந்து விரியாமை
ஞானப் பெண்ணே !

++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 10, 2007

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா