திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090512_Issue

அரசியலும் சமூகமும்

மே 2009 வார்த்தை இதழில்…

பி கே சிவகுமார்# பாருக்குள்ளே நல்ல நாடு! - பி.கே. சிவகுமார் # உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள் # வாசகர் கடிதங்கள் # அன்பான சஹிருதயரே! (கேள்வி பதில்) - ஜெயகாந்தன் # திராவிட…

அறிவிப்புகள்

மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009

கே.பாலமுருகன்மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் - அநங்கம் மே 2009 அநங்கம் மே இதழில்: பத்தி 1. நிர்வாணம் மட்டும் நவீனமல்ல (சை.பீர்முகமது) 2. ஒப்புதல் வாக்குமூலமாக இரண்டு பெண் குரல்கள் (கோ.புண்ணியவான்) 3.…

வ.ந.கிரிதரனின் “நான் அவனில்லை”

ரெ.கா.வ.ந.கிரிதரனின் "நான் அவனில்லை" சுவாரஸ்யமான அறிவியல் கற்பனை. ஆனால் கதையின் பெரிய பலவீனம் வேற்றுலகத்துப் பிராணிகள் ஏன் பாஸ்கரனைத் தேடி வந்தன என விளக்காததுதான். காரணம் ஏதும் இல்லாமல் சிறை வரை அவனைத் தேடி…

சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விரோதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி

சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் பாரதி தமிழ்ச் சங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியா சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியில் மிகச் சிறப்பாக இயங்கி வரும், பதிவு செய்யப்பட்டு வரிவிலக்குப் பெற்ற ஒரு…

நேசக்குமார் அவர்களின் கட்டுரை

ஹமீது ஜாஃபர்புலம்பவேண்டாம் ஐயா! திருவாளர் நேசக்குமார் அவர்களின் கட்டுரையைப் படித்தபோது சிரிப்புத்தான் வந்தது. வழக்கம்போல புலப்பம், ஒப்பாரி என்ன செய்வது? சிலருக்கு SATURATED MIND. இவருக்கு காஃபிர் என்று சொன்னால் தீயை மிதித்ததுபோல் குதிக்கிறார்.…

பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்

அறிவிப்புபொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும் காலம்: மே 16, 2009, மாலை 6.00 மணி இடம்: Recreation Centre 2190 Ellesmere Road (Ellesmere/Markam) Scarborough தொடர்புகளுக்கு: (647) 287 1435 (416) 731…

தலைவாசல்

கி.பென்னேஸ்வரன்அன்பு நண்பர்களுக்கு வணக்கம். தலைநகரில் நடைபெறும் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான பதிவுகளை ஒவ்வொரு வாரமும் வடக்கு வாசல் இணையதளத்தில் (http://www.vadakkuvaasal.com) தலைவாசல் என்னும் பெயரில் ஒரு தனி இணைப்பாக வெளிக் கொண்டுவருவதாக…

ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு

நாகூர் ரூமி என் பெயர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி. நான் நாகூர் ரூமி என்ற புனை பெயரில் 1980களில் இருந்து எழுதி வருகிறேன். என் தொழில்: பேராரிசிரியர், ஆங்கிலத்துறைத் தலைவர், மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.…

பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!

வஹ்ஹாபி நாகூர் ஹனீஃபா என்ற பாட்டுக்காரரைப் பற்றிக் கவிஞர் அப்துல் கையூம், 'நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்' என்ற தலைப்பில் திண்ணையில் எழுதியிருந்தார் [சுட்டி-1]. பெரியார், இஸ்மாயீல் ஸாஹிப், பன்னீர் செல்வம்,…

நீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை

நாகரத்தினம் கிருஷ்ணா நண்பர் ஷங்கர நாராயணனின் சிறுகதைகளை பொதுவாக சுவைத்து வாசிக்கிற வழக்கம். இக்கதை என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஓர் அசலான எழுத்தாளருக்கு மட்டுமே இத்தனை லாவகமாக சொற்களை கையாளவரும், அழகாக சொல்லவும் வரும்.…

நேசகுமாருக்கு என் பதில்

அப்துல் கையூம் --------------------------------------- நேசமிலா நேசகுமாருக்கு, நாகூர் ஹனீபாவை பத்தி மிகவும் சுவையா எழுதியிருந்தேன்னு உங்க கடுதாசியை தொடங்கி இருந்தீங்க. பாக்க சந்தோஷமா இருந்துச்சு. கடைசியிலே பாத்தா ஆடு மழையிலே நனையுதேன்னு ஓநாய் கவலைபட்ட…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள்.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபூதக் காந்த விண்மீன்கள் பூதள உயிர்களை அழிப்பவை ! அசுரக் காந்த ஆற்ற லுள்ள மரண விண்மீன்கள் ! பூமிக்கருகில் நெருங்கினால் மக்களின் உடற் மூலக்கூறுகளைத் திரித்து…

இலக்கிய கட்டுரைகள்

புத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்

வே.சபாநாயகம் தமிழ் இலக்கிய உலகில் கட்டுரை இலக்கியம் இன்னும் சிறுகதை, நாவல் போல வளர்ச்சி பெறவில்லை. எழுதுகிறவர்கள் எல்லோரும், சிறுகதை, நாவல், கவிதை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிற அளவிற்கு கட்டுரையில் ஆர்வம் காட்டுவதாகக் காணோம்.…

சங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி

சு. பசுபதி, கனடா "ஏம்பா, ‘மதுரைக் காஞ்சி’ங்கறயே? மதுரை, காஞ்சி ஸ்தலங்களைப் பத்தி ஸ்தல புராணங்கள் சொல்லப் போறயா? உனக்கு ரொம்பப் புண்யம்பா ! ஆகா! மதுரை மீனாக்ஷி ! காஞ்சி காமாக்ஷி! காசி…

கதைகள்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates Art Image "மரணத்தை மனித இனத்தின் எல்லாக் கொடைகளிலும் (Blessings) உயர்ந்ததாகக் கருதலாம் !" "நான்தான் உயிரோடுள்ள ஓர் உன்னத ஞானி !…

ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன

க.ரகுநாதன் ஆழ்ந்து உறங்குபவன் அசைவற்றுக் கிடப்பது போல் பின்னிரவில் அந்தக் கானகம் நிசப்தத்துடன் இருந்தது. மரம், செடி, கொடி என அனைத்தும் துயில் கொண்டு கிடந்தன. சில சிறு காற்றின் அலைக்கேற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தன.…

மூர்த்தி எங்கே?

தி.சு.பா அந்த 40 பேர் முகத்திலும் சந்தோஷக்களை தாண்டவமாடியது. இருக்காதா பின்ன? ஆறு மாதங்களுக்குப் பிறகு 'ப்ராஜக்ட் ட்ரீட்' போக இருக்கிறார்கள். பெரிய மென்பொருள் நிறுவனம் அது. இந்தியாவிலிருந்து 'ஆன்சைட்' அதாவது அட்லான்டா, அமெரிக்கா…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன் சுகாவ் தான் செய்த தவறுக்கு தகுந்ததுபோல தண்டனை கிடைத்திருந்தால் இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டான்.எப்போதும் முதலில் முழிப்பவன் அவனே. அதனாலேயே இந்த தண்டனை தனக்கு தகுந்ததல்ல என்பதில் மிகுந்த வருத்தமடைந்தான்.டாடரிடம் கெஞ்ச…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து

இரா.முருகன் 29 ஏப்ரல் 1938 - ஈஸ்வர வருஷம் சித்திரை 17, வெள்ளிக்கிழமை அய்யர் சொல்றபடிக்கு பட்டணம் போய்ட்டு வாரும். இங்கே இருந்து என்ன பண்ணப் போறீர்? கோர்ட்டுக் கச்சேரியும் அடைச்சுப் பூட்டியல்லோ? நீலகண்டன்…

மனச்சுமை

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் காலை பத்து மணி. ·போன் ஒலித்தது. "ஹலோ!" "ஹலோ! டிடேக்டிவ் ஸ்டெர்லிங், டெட்ராயிட் ஈஸ்ட் ப்ரிஸிங்க்ட்லிருந்து பேசுகிறேன். மிஸ்டர் ராவ் இருக்கிறாரா?" "நான்தான் ராவ் பேசுகிறேன். உங்களுக்கு என்ன வேண்டும்?" போலீஸ்…

ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்

கே.பாலமுருகன் எதிரில் அமர்ந்திருப்பவனைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவனது வசைப்பாடல் காரி உமிழும் சொற்கள், கடுமையான வார்த்தைகள், எதைப் பற்றியும் நான் கவலைப்படுவதற்கில்லை. அவன் அப்படியிருக்கும்போது ஒரு நாயைப் போல தெரிகிறான். பெரும்பாலும் சாலையில்…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஒரு குன்று உள்ளது என் தேசத்தில் ! ஒரு நதியும் உள்ளது என் தேசத்தில் ! என்னோடு வா ! மேலே ஏறிச் செல்லும் இரவு மலை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran’s Paintings “Man with Two Women” செல்வம் ! நேர்மையற்ற காதலுக்கு மூலமானது ! போலி வெளிச்சத்தைத் தேடுவது ! எதிர்பார்ப்புச் செல்வீகத்தை (Fortune)…

வேத வனம் – விருட்சம் 34

எஸ்ஸார்சி இந்திரன் வச்சிராயுதன் பயங்கரன் உக்கிரன் அனைத்தும் தெரிந்தோன் ஊக்கம் அளிப்பதில் சோம பானம் நிகர்த்தோன் தேவ கந்தர்வ அப்சர்ச அசுர ராட்சச வென்னும் ஐந்து வகை சனங்களை க்காக்கும் அவன் பாலகனாய் வருக…

பூங்கா!

அகரம்.அமுதா நரகத் திடையே துறக்கம் போல நகரத் திடையே பூங்காக்கள் -அதில் சிரிக்கும் பூக்களைத் திருடா திருக்கத் திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்! (1) சின்னப் பூக்கள் சிரிக்கும் அழகில் சிந்தும் தேனின் சுவைகண்டு -மிகக்…

அதிரூபவதிக்கு…..

மாமதயானை இவ்வுலகின்அதிஅற்புதமான கவிதை என் தோளில் சாய்ந்து சிரித்து கொண்டிருக்கிறது பிறந்த குழந்தையின் பிஞ்சு விரல்களின் மென்மையை தீண்டாமலேயே அறிந்திருக்கிறேன்.... உன் வார்த்தைகளில் மழைக்காலங்களில் உனக்கு குடை வாங்கித்தர பிரியப்படுகிறது என் மனசு ஆனால்…

ஐந்து கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன் 01 அழைத்துப் போய்வந்த ஆசிரியரின் அத்தனை கெடுபிடிகளுக்குப் பின்னும் இன்னமும் நினைவில் அந்த ஸ்கூல் பயணம் இன்பச் சுற்றுலா என்றே. 02 இலவசமாய் அரிசி டிவி இயற்கை உபாதைக்கு கட்டண கழிப்பிடங்கள்.…

மரணம் பேரின்பம்

ரஜித் நான்தான் பூவரசு விதையாய் விழுந்தேன் முளைத்தேன் இலைகளால் இறை தொழுதேன் வளர்ந்தேன் அம்மா மண் அப்பா சூரியன் அண்ணன் காற்று மாமா மழை எல்லாருக்கும் நான் செல்லம் குருவிக்கும் பூச்சிக்கும் மனைகள் எம்மடிதான்…

புத்திஜீவிகள்

ஸ்ரீபன் எரிகிறது எங்களின் வீடு ஆனால் நீங்களோ குருதி தோய்ந்த வன்மத்தோடும் பைத்தியக்காரனின் சிரிப்போடும் கும்மாளமிடுகிறீர்கள் எரிப்பவனை விட்டுவிட்டு எரிவதற்கான காரணத்தைதேடி காலத்தின்மீது எம்மவர் விட்டுச்சென்ற காலடித்தடங்கள் மீது பூதக்கண்ணாடி கொண்டு அலைகிறீர்கள் நெருப்பை…

தூரதேசத்திருந்து

கவிதா (நோர்வே)தூரதேசத்திருந்து ஈழத்தமிழர்கள் பேசுகிறோம் உங்களுக்காகவே நாங்கள் உரத்தெழுகின்றோம் கைவிடமாட்டோம்! எங்கள் மனங்களில் தமிழ்ஈழம் மலர்ந்தாயிற்று பயந்துவிடாதீர்கள் எங்கள் மண்ணைவிட்டு நகர்ந்து விடாதீர்கள் சீறிவரும் குண்டுகள் நிறுத்தக்கோரி எங்கள் பிஞ்சுகள் போராளிகளாய் இங்கேயும் வளர்ந்துவிட்டார்கள்…