திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20081120_Issue

அரசியலும் சமூகமும்

நெருப்பில் காய்ச்ச வேண்டிய பொதுப்புத்தி

கே ஆர் மணி 'அவன் பத்தாவது பாஸ் பண்ணலை, நான் பாஸ் பண்ணிட்டேன். அதுனாலதான் அவன் கம்பெனி ஆரம்பிச்சான். நான் பாத்துண்ட்டேன்' அப்பா பழைய நிறுவன சிவப்பு யூனியனில் சேரவில்லையென ஒரு பொய் சொல்லியிருந்தால்…

நினைவுகளின் தடத்தில் – (21)

வெங்கட் சாமிநாதன் மாமியுடைய அண்ணா, அம்பி மட்டும் தான் என்னிடம் பிரியமாக இருந்தார் என்று சொல்லமுடியாது. மாமி, சரஸ்வதி, பின்னர் ராஜா என்று சொன்னேனே, அப்போது தான் பி.ஏ. பாஸ் செய்து வேலைக்குச் சேர்ந்தவர்…

“பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தும் துவ‌க்க‌ப் புள்ளியாக‌ ஒபாமா”

ஆல்பர்ட் பெர்னாண்டோ Image1985ல் சிகாகோ நகரில் ஒரு கோவில் நிர்வாக அமைப்பில் ஒரு அசாதரண பங்களிப்பாளராக இருந்த ஒருவர், சிகாகோ நகரில் ஒரு இல்லத்தை வாங்குவதற்கு போதிய விலை தர இயலாத நிலை இவற்றையெல்லாம்…

ஒரு அசலான மனுஷன் – என். எஸ். கிருஷ்ணன்

வெங்கட் சாமிநாதன் - நாற்பதுகளின் பின் பாதி வருடங்களில் ஒரு நாள். நிலக்கோட்டையில் முகாமிட்டிருந்த டூரிங் டாக்கீஸின் விளம்பர வண்டி. மாட்டு வண்டி ஒன்று சாலையில் வந்து கொண்டிருந்தது. அதன் இருபுறங்களிலும் விளம்பர அட்டை.…

வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்

ஜோதிர்லதா கிரிஜா பெண்கள் கண்ணியமாக உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆணாயினும், பெண்ணாயினும் உடுக்கும் உடையும், பாணியும் தனிப்பட்ட…

வார்த்தை நவம்பர் 2008 இதழில்

பி.கே.சிவகுமார்வார்த்தை நவம்பர் 2008 இதழ் ஜீவா ஓவியங்களுடன் நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக! அறம் வளர்ந்திடுக! - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே - ஜெயகாந்தன்…

எம்.பி.எம்.அஸ்ஹர் என்னும் உன்னத மனிதர்

நவஜோதி ஜோகரட்னம் எம்.பி.எம்.அஸ்ஹர் நான் சந்தித்த பத்திரிகையாளர்களில் கண்ணியமும் நேர்மையும் நேசமும் மிகுந்த பத்திரிகையாளர் ஆவார். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைப் பத்திரிகை உலகில் மிகுந்த உத்வேகத்துடன் பணியாற்றிய தனி ஆளுமை கொண்ட எம்.பி.எம்.அஸ்ஹரின்…

தானத்தில் சிறந்தது உடல்தானம்

கவிஞர் இரா.இரவி இரத்த தானம், கண் தானம் தாண்டி இன்று உடல் தானம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. மனித சமுதாயம். மருத்துவர்களான திரு.அசோகன், திருமதி. புஷ்பாஞ்சலி பெற்றோர்கள் தனது மகன் இதயந்திரனுக்கு விபத்தில் முளை…

அறிவிப்புகள்

“அநங்கம்” மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ்

“அநங்கம்”மலேசிய தீவிர எழுத்தாளர்களையும் வாசகர்களையும் விமர்சகர்களையும் இணைப்பது இதழ் 2 ஆசிரியர் கே.பாலமுருகன் Balamurugan102@gmail.com bala_barathi@hotmail.com துணை ஆசிரியர் ஏ.தேவராஜன் ஆசிரியர் குழு ப.மணிஜெகதீஸ் கோ.புண்ணியவான் செ.நவீன் மோ.கவிதா அநங்கம் இரண்டாவது இதழ் மீண்டும்…

ஜேர்மனியில் நூல்தேட்டம் ஐந்தாவது தொகுதியின் வெளியீடு

அறிவிப்பு நூலகவியலாளர் என் செல்வராஜா லண்டனிலிருந்து தொகுத்து வெளியிட்டு வரும் ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான வரலாற்றுப் பதிவேட்டின் ஐந்தாவது தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு இம்முறை ஜேர்மனியில் டோர்ட்முண்ட் நகரில் இடம்பெறவுள்ளது. காலம் : ஞாயிறு…

நாம் காலாண்டிதழ்

அறிவிப்புநாம் காலண்டிதழ் - 3 வது இதழ் சற்றே தாமதமாக வெளிவந்துள்ளது. இந்த இதழில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஜெயந்தி சங்கர், நூர்ஜஹான் சுலைமான், கோவிந்தராசுவின் சிறுகதைகள் பாண்டித்துரை, எம்.கே.குமார், இராம.கண்ணபிரான், சித்ரா ரமேஸ், பா.திருமுருகன்,…

மக்கள் சக்தி இயக்கம் நடத்தும் “அரசியல் பேசுவோம்” நிகழ்ச்சி

அறிவிப்புவணக்கம் தோழர்களே, மக்கள் சக்தி இயக்கம் நடத்தும் மாதாந்திர நிகழ்வான "அரசியல் பேசுவோம்" நிகழ்ச்சி வரும் ஞாயிறு (23-11-08) மாலை சென்னையில் "ஈழதமிழர்களின் நிலையும் - நமது கடமையும்" என்ற தலைப்பில் நடக்க இருக்கிறது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்திய தேசியக் கொடி நிலவில் விழும் உளவியுடன் சந்திரனில் தடமிட்டு இடம் பிடித்தது ! (கட்டுரை : 3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசந்திரனில் இறங்கியது இந்தியக் கொடி ! மூவர்ணச் சுதந்திரக் கொடி தடம் வைத்து இடம் பிடித்தது பாரீர் ! போட்டி யில்லை ! யந்திரத் திறமை காட்டும்…

இலக்கிய கட்டுரைகள்

திசைமாறிய பறவைகளின் கூடு

புதிய மாதவிகவிஞர் சக்தி அருளானந்தம் மாநகரத்தில் திசைமாறித் தவிக்கும் பறவைகளின் தவிப்பை தன் விரிந்த கவிதை வானத்தில் படம் பிடிக்கிறார். திசை மாறி பறந்து வந்த பறவைகள், பருவகால புலம் பெயர்தலாய் பல நுறு…

ஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்!

லதா ராமகிருஷ்ணன் ஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்! எழுதியவர் - லதா ராமகிருஷ்ணன் செயலர் - தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் பொருளாளர் - வெல்·பேர் ·பவுண்டேஷன் ஆ·ப் தி பிளைண்ட் "இருட்டில் படிக்கும் எமது…

எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)

வே.சபாநாயகம் 1. ஒரு கதையின் வெற்றிக்கு முக்கியமான அம்சம் ஒன்றுண்டு. ஒவ்வொரு முக்கியமான பாத்திரத்தின் மீதும், ஏதேனும் ஒரு கட்டத்திலாவது, கதை கேட்போருக்கு அனுதாபம் ஏற்படவேண்டும் என்பது நல்ல கதையின் கட்டுக்கோப்பின் முக்கிய அம்சம்.…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 36 ச.து.சு.யோகி

வே.சபாநாயகம் 1. வெறும் பேனா மட்டும் பேசினால் போதாது. ஒருவனுடய உள்ளம், உயிர் யாவும் பேனா முனையில் வந்து கூத்தாடினால், அப்பொழுது அவ்வார்த்தைகளுக்கு உள்ள வீரியத்தை யாதொன்றாலும் அசைக்க முடியாது. 2. வாழ்க்கையின் பலவிதமான…

திருகுர் ஆன் மொழிபெயர்ப்பும்,புரிதலும்

எச்.முஜீப் ரஹ்மான் பொதுவாக வரிக்குவரி செய்யப்படும் மொழிப்பெயர்ப்புக்கும் சாரம்சத்துடன் மொழியாக்கம் செய்யப்படுவதற்கும் பல வித்தியாசíகள் உண்டு.ஆனால் இரண்டு விதமான மொழிபெயர்ப்பும் சரியான மொழியாக்கத்தை தருமா என்பது சந்தேகமே.ஒரு பிரதியை உருவாக்கியவரே பிரதியின் மொழியிலிருந்து இன்னொரு…

நூலாய்வு : கனவுச் சந்தை (உலகச் சிறுகதைகள் – எஸ்.ஷங்கரநாராயணன் மொழிபெயர்ப்பு)

வே.சபாநாயகம் 'மொழிபெயர்ப்பு என்பது ஒரு அருங்கலை. அதைக் குறைவாக எண்ணாதே! நிறைவாக எண்ணி இப்பணியில் இறங்கு. அவையே உனக்குப் பெரும்புகழ் தேடித் தரும். வெவ்வேறு ஆசிரியர்களின் கருத்தைப் புரிந்து கொண்டு, நடையைப் புரிந்து கொண்டு,…

கதைகள்

ஒரு பனை வளைகிறது !

சி. ஜெயபாரதன், , கனடா பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ஓடினாள். தரையில் கிடந்த சிரட்டையை எடுத்துக் குடத்தினுள்ளே விட்டு நீரை மொண்டு கடகட வெனக் குடித்தாள்.…

அப்பாவின் சொத்து

இளங்கோ மெய்யப்பன்கல்லுப்பட்டிக்கு புறப்படவேண்டிய வண்டி பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதட்டப்பட்டார். 4.50க்கு தானே கிளம்பவேண்டிய வண்டி. 4.15 தானே ஆகிறது. நேரத்தை மாற்றிவிட்டார்களா? சர்பத்தை மடக்மடகென்று வேகமாக…

ஒரு தினக் குறிப்பு

எம். ரிஷான் ஷெரீப் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் பற்றிய ஒரு செய்தி அறிகிறேன். மிகுந்த கனமுடைய அச்செய்தி என் அறை முழுதும் நிரம்பிப் பார்க்கும் இடமெல்லாம் ஆழ்சிந்தனையைத் தோற்றுவித்தபடி சிதறிக் கிடக்கிறது. அச்செய்தியைத்…

தாகம்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்த தாரிணிக்கு தலை கிறு கிறுவென்று சுழன்றது. அப்படியும் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றவளால் நிற்க முடியவில்லை. தேகம் முழுவதும் கிடு கிடுவென்று ஆடத்தொடங்கிவிட்டது. அடிவயிற்றில் ஆயிரம் குத்தூசிகளால்…

நகரத்தின் ஆன்மாக்கள்

கே.பாலமுருகன் நகரத்தின் பல இடங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு விபத்தைப் பார்க்க நேரிடும். எல்லாம் சாலை திருப்பங்களிலும் ஏதாவது ஒரு நாளில் அங்கு விபத்து நடந்திருக்கலாம். நகரம் எப்பொழுதும் ஒரு விபத்தின் கொடூரத்தைச் சுமந்திருக்கிறது.…

உறவுச் சங்கிலிகள்

கோவை புதியவன் “மாப்ள! எப்படி இருக்கீங்க?...” “இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கீங்க?” “எனக்கு என்ன மாப்ளே நல்லா இருக்கேன். சரி… அம்மா எப்படி இருக்காங்க…? என்றவுடன். “அவங்களுக்கு என்ன பணத்தை எண்ணி எண்ணி…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -5

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Image -7 Lincoln Memorial at Washington. D.C. "நானூற்றி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர்கள் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை நிலைநாட்டிச் சுதந்திர…

அட்மிஷன்

ராமச்சந்திரன் உஷா (அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் தேர்வான கதை) தீபுவின் திறமையில் நம்பிக்கை இருந்தாலும், செய்தி உறுதியானதும் மகிழ்ச்சியில் மனம் நிறைந்தது. ஸ்டான்போர்ட் யூனிவர்சிட்டியில், எம்.பி. ஏ சீட். மகளை உடனே…

விஸ்வரூபம் – அத்தியாயம் பதினைந்து

இரா.முருகன் வைக்கோல் சந்தை கடந்து போனதோ? காலடியில் பிரம்புக் கூடையும் துணி சஞ்சியுமாக அடுக்கி வைத்ததில் எதையோ தேடிக்கொண்டு தாமஸிடமிருந்து ரெண்டு அங்குலம் தூரம் விலகி உட்கார்ந்தாள் தெரிசா. ஹே மார்க்கெட்டா, எப்பவோ போயாச்சே.…

” கண்ணம்மா என்னும் அழகி “

சக்தி இராசையா மொட்டைமாடிக் காற்றின் சிலுசிலுப்பில் கையில் இருந்த புத்தகத்தைக் கூட மறந்து மலை நேர மேகக் கூட்டங்களை ரசித்துக் கொண்டிருந்தேன். இந்த வானத்தில் தான் எத்தனை வர்ணங்கள் .. ஒவ்வொரு மேகக் கூட்டமும்…

கவிதைகள்

சட்டக் கல்லூரியில் இரத்தக் காட்டேரிகள்

ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங் இரத்தக் காட்டேரிகளுக்கு சட்டம் படிக்க ஆசை வந்தது மனித உருவில் கல்லூரியில் சேர்ந்தன மாணவர்களாய் மாறிய பின்னும் மனம் மாறவில்லை இரத்தவெறி மீண்டும் தலை தூக்கியது சக மாணவர்களின்…

வேத வனம் விருட்சம் 11 கவிதை

எஸ்ஸார்சி உருவும் பெயரும் வெற்றுத்தோற்றம் பிரம்மம் தவிர்த்திட எங்கே அவைகளின் இருப்பு கயிற்று அரவமே காணும் காட்சி. கயிரே காண்பது பாம்பன்று அறிதல் தெளிவு தன்னை அறி அறியாமை பிறப்போடு இறப்பின் குழப்பம் தொலையும்…

மௌனித்த நேசம்

ப.கவிதா குமார்உறக்கம் கலையாது உறங்கிப்போனான் அவன். மனப்பிராந்தியம் முழுவதும் பரவியிருந்த ஞாபகக்கசடுகள் சுவாசம் முடிந்த பின் தன் சுயவிலாசத்தை அறிமுகப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. சப்தமிக்காது சருகு உதிர்ந்த சேதி மண் கிழித்த வேர் பிற மரக்கிளைக்கு…

நனவாகும் கனவு

பாண்டித்துரை கனவு காணுங்கள் கனவு காணுங்கள் அப்துல்கலாம் சொல்லிக்கொண்டே இருப்பார் ஆழமான கனவு கொஞ்சம் நீளமான கனவு ஆமாம் என் கனவை நாளை பிறக்கும் குழந்தையும் சுமக்கப் போகிறது(தா) நரை விழுந்த கிழத்தின் துடிப்புகூட…

விஸ்வநாதன் ஆனந்த்

ரஜித் 29 அக்டோபர் 2008ல் நடந்த அகிலஉலக சதுரங்கப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் பெற்ற வெற்றியை ஒட்டி இந்தக் கவிதை அகில உலக சதுரங்கப் போட்டி 29 அக்டோபர் 2008 இன்றுதான் ஆழி அடங்கிப்போனது…

மானிடவியல்

சாமிசுரேஸ் சுயநலத்தின் எச்சில் எங்கு விழுகிறது வாழ்வாதார அலைகளின் வளைவுகளில் மேல் நேர்கோட்டுப் பயணமாய் காலம் மோதுகிறது காலங்களில் போர்த்திய போர்வையை விலக்கி நஞ்சுண்ட நாதனாய் முகங்களை மூடுவர் சிலர் வார்த்தைகளில் மட்டுமே மழை…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -11 << அடிக்கடி மாறுபடும் ஒருத்தி ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகண்கள் என்னை விட்டு அவள் பின்னே சென்றன கறுத்தப் பெண் ஒருத்தி என்னைக் கடந்து சென்ற போது ! கருமுத்தால் ஆக்கப் பட்டு கருந் திராட்சைக் கனிபோல் இருந்தவள்…

நிலையின்மை

குட்டி செல்வன் வெண்மேக‌ங்க‌ள் பிறை த‌ழுவி ந‌க‌ரும் இவ்வேளையில் தொலைதூர‌த்தில் கொஞ்சம் பரிவுக‌ளுடன் ‌ க‌சியத் துவ‌‌ங்குகின்றது இந்த இரவுக்கான பாட‌ல் இன்னும் ஈர‌ம் காயாத‌ தார்சாலைக‌ளில் மனமற்று உதிர்ந்து கிடக்கின்றன சில புன்னகைப்…

நிழலற்ற பெருவெளி…

கருப்பு நிலா ஊருக்கு நடுவாக அது, வந்துவிட்டது. நாளுக்கு நான்கு எ¡¢க்கவும் நான்கு புதைக்கவும் தவறுவதில்லை, அதன் கணக்கு. குளிர் காலத்தில் கூடுதலாகவும், மழைக்காலத்தில் இன்னும் கூடுதலாகவும்... எகிறிப் போவதுண்டு எண்ணிக்கை. குத்துப்பட்டது, குடல்…

குட்டி மகளின் ஞாபகம்

இவான்நான் தனியாக தேதி கிழிக்கையில் தனியாக சவரம் செய்து கொள்கையில் தனியாக உணவு அருந்துகையில் தனியாக சாலையைக் கடக்கையில் தனியாக உட்கார்ந்து இருக்கையில் தனியாக புகைக்கையில் தனியாக தேநீர் குடிக்கையில் தனியாக நேரம் பார்க்கையில்…