திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080508_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை மே-2008 இதழில்

பி.கே சிவகுமார் ஹொகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: நடிகர் சங்கக் கூச்சலும் சட்டத்தின் நடைமுறையும் - கே.எம். விஜயன் நகரும் கண்டத்தில் தமிழை நகர்த்தும் தமிழர் - முருகபூபதி பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள்…

சமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள்

தேவமைந்தன் பெங்களூரு நகரிலும் தமிழ்நாட்டிலுமுள்ள தூயதமிழ் நாட்டமுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களால் அன்புடனும் தோழமையுடனும் அறிஞர் குணா என்று அழைக்கப்படும் திரு சாமுவேல் குணசீலன், கோலார் தங்கவயலில் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பிறந்தவர்.…

சம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்

எஸ்ஸார்சி சம்பந்தமில்லை என்றாலும் தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர் தமிழில் எ. பொன்னுசாமி வெளியீடு: அ ஆ பதிப்பகம், தி. நகர் சென்னை 17. முதல்பதிப்பு டிசம்பர்-1992. விலை ரூ.25 ---------------------------------------------------------------------------------------------------------------------- மதச்சார்பின்மைக்கு உழைப்பதாக வேஷம்…

கே.எம்.பணிக்கரின் “ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும்” – ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்

புருஷ் புகழ்பெற்ற நிர்வாகியும், வரலாற்று அறிஞருமான கே.எம்.பணிக்கர் (1895-1963),  ஆசியக் கண்டம் முழுவதும் காலனியாதிக்கமும்,  நிறுவன கிறித்துவ மதமும் இணைந்து நிகழ்த்திய அக்கிரமங்களையும், அறமீறல்களையும் உலகத்தின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்.  ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சட்டம்…

ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்

தாஜ் முகலாய பேரரசர்களில் ஒருவரான 'அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீப் ஆலம்கீர்' என்கிற ஔரங்கசீப் எழுதிய ஒரு கடிதம், உலக சரித்திரத்தில் பிசித்திப் பெற்ற கடிதமாக நிலைப்பெற்று இருக்கிறது. தனக்கு கல்வி போதித்த…

Last kilo byte – 14 அஸ்தினபுரத்தின் வாசம் – ஆயில்பாலத்தூவாபனன்

கே. ஆர். மணிதிருதிராட்டினுக்கு மிகச்சோர்வாயிருந்தது. வெயில் காலம் வேற. வயதுமாகிவிட்டது. விதுரனும் இப்போது வருவதில்லை. ஏதாவது எந்த பத்திரிக்கையிலாவது எழுதி மாட்டிக்கொள்கிறான். வர்க்க குழப்பம் அவனுக்கு அதிகமாகிவிட்டது. தருமம் சில சமயம். வன்மன் சில…

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 4

நாகரத்தினம் கிருஷ்ணா 1941. பெயர் மிஷா, ஏழுவயது யூதச் சிறுமி, பள்ளிக்குச் சென்று திரும்பிவந்து பார்க்க பெற்றோர்கள் நாஜிகளால் சிறைபிடிக்கபட்டு முகாமுக்கு அனுப்பிவைக்கப் பட்டிருக்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் அந்த யூதர்களுக்கான வதைமுகாம் இருப்பதாகச்…

கல்வியும் வேலை வாய்ப்பும்

விசாலம் தற்கால கல்வியில் நம் எல்லோருக்கும் ஒத்து வரும்படி பல விதமான பிரிவுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. ,நிறைய வேலை வாய்ப்பும் அதனால் ஏற்பட்டுள்ளன.ஆனால் பெற்றோர்கள் தன் குழந்தைகள் ஒரு சி ஏ ,அல்லது…

“ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே’ – சரித்திரம் செய்த சாதுக்களின் சவால்கள்

மலர்மன்னன் சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தின் மீது கைவைக்கும் எண்ணம் தமது அரசுக்கு இல்லை என்று தமிழக சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக அறிவித்து ஆறுதலளித்த முதலமைச்சர் கருணாநிதி, அத்துடன் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தால்…

அறிவிப்புகள்

திராவிட திருக்குறள் பார்வைகள்: எனது விமர்சனத்திற்கு மு.இளங்கோவன் எதிர்வினை குறித்து

ஜடாயு சென்ற திண்ணை இதழில் மு.இளங்கோவன் இப்படி ஒரு எதிர்வினையை எழுதியிருக்கிறார். http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805011&format=html முதலில் ஒரு சில்லறை விஷயம். என் பெயரை நான் எழுதுவது போலன்றி “சடாயு” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பெயரைப் பல…

பரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழா

அறிவிப்புஅன்புடையீர் வணக்கம் வரும் 8 ஆம் நாள், பரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழாவை முத்தமிழ்ச் சங்கம் நடத்துகிறது. அதன் அழைப்பிதழை தங்கள் இணையதளத் தாளிகையில் வெளியிடுமாறு பணிவன்போடு வேண்டுகிறோம். முத்தமிழ்ச் சங்கம் நடத்தும்…

பிறமொழிச சொற்கள் உரியபொருளில ்தான் கலந் தெழுதப் படுகின்றனவா?

தமிழநம்பிதமிழில் கலந்து எழுதப்படும் அயன்மொழிச் சொற்கள், சரியான பொருளைப் புரிந்து கொள்ளாமல் மனம்போனபோக்கில் எழுதப்படுகின்றன என்பதை மொழி ஆய்வாளர்கள், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவதால் விளையும் கேடுகளில் ஒன்றாக மிகத்தெளிவாக எடுத்துக் காட்டி…

“தமிழ்க் கணிப்பொறி” வலைப்பதிவர் பயிலரங்கு

தமிழநம்பிவிழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் "தமிழ்க் கணிப்பொறி" வலைப்பதிவர் பயிலரங்கு 11-05-2008 ஞாயிறு அன்று காலை 9மணிமுதல் மாலை வரை ஒருநாள் நிகச்சியாக நடைபெறுகிறது. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில்…

உல‌க‌த்த‌மிழ் எழுத்தாள‌ர் ச‌ங்கத்தின் திருச்சி மாவ‌ட்டக்கிளை துவ‌க்க‌விழா.

அறிவிப்பு நாள்: 11.05.2008 ஞாயிறு நேர‌ம்: மாலை 6 ம‌ணி. இட‌ம்: அய்க்க்ஃப் அரங்கம்(திருச்சி ச‌த்திர‌ம் பேருந்து நிலைய‌ம், காம‌ராஜ‌ர் சிலைக்கு எதிரில்) த‌லைமை: திரு. த‌மிழினிய‌ன் முன்னிலை: டாக்ட‌ர் ஆரோக்கிய‌சாமி வ‌ர‌வேற்புரை: ச‌ர‌சுவ‌தி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது ? (கட்டுரை: 28)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅண்டவெளிக் களிமண்ணில் ஆப்பமாய்ச் சுட்டுத் துண்டான சட்டி இது ! குயவன் முடுக்கி விட்ட பம்பரக் கோளம் ! உடுக்க டித்துக் குலுக்கிடும் மேளம் ! தொங்கிடும்…

இலக்கிய கட்டுரைகள்

பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்

கருணாகரன் அப்போது யாழ்ப்பாணம் முற்றுகைக்குள்ளாகியிருந்தது. (இப்போதும் அது முற்றுகையிடப்பட்டேயிருக்கிறது). முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஆட்கள் காணாமற் போனார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். காணாமற்போவோர் பற்றிய துயரம் சாதாரணமானதல்ல. ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று முடிவு…

உ.வே.சா வின் நினைவில்

வெங்கட் சாமிநாதன் உ.வே.சாமிநாதய்யர் வாழ்ந்த உத்தமதானபுரத்தில் அவர் நினைவில் ஒரு நினைவகம் கட்டப்பட்டு தமிழக அரசின், அமைச்சர்கள், மதிவாணன், பரிதி இளம்பரிதி ஆகியோர் வருகைபுரிந்து அதைத் திறந்து வைத்தனர் என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.…

தனி ஆண்மை கொண்ட நெடுவேல்

முனைவர் மு. பழனியப்பன் வேல் தமிழரின் அக, புற வாழ்வில் சிறப்பிடம் பெற்றதாகும். அக வாழ்வில் வேலன் வெறியாடலில் வேல் முக்கிய இடம் பிடித்து இருக்கும். தலைவியின் அகநோய் அதன்வழி தீர்க்கப் பெறும். புறவாழ்வில்…

பெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள்

பாவண்ணன் கன்னடத்தின் சிறந்த நவீன சிறுகதையாசிரியர்களுள் ஒருவர் லங்கேஷ். உளவியலின் துணையோடு லங்கேஷ் தன் சிறுகதைகளில் நவீனத்தன்மையைப் புகுத்தினார். எண்ணற்ற புறஉலக நடவடிக்கைகளுக்கும் ஆழ்மனம் மட்டுமே அறியவல்ல அகஎழுச்சிகளுக்கும் இடையிலான இணைப்பு என்பது ஒரு…

கொலை செய்யப்பட்ட உருவங்கள் : ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை படைப்புலகம்

ஹெச்.ஜி.ரசூல் காட்சி 1 ஏழாம் நூற்றாண்டில் அரபு மண்ணில் நிகழ்ந்தது. அந்த உருவங்கள் சிலைகள் என்றழைக்கப்பட்டன. பதூயீன்கள்,குறைசிகள்,ஹுதைல்,ஸிமிட்டிக்,பழங்குடிகளின் நம்பிக்கைகள் அதில் பொதிந்து கிடந்தன. மழையை பெய்விக்குமென ஒரு உருவம்,நற்பலனைதருமென பிறிதொரு உருவம்,வளமையைப் பெறுமென ஒரு…

“அக்கர்மஷி”யின் அடையாளங்களைத் தேடி

புதியமாதவி, மும்பை நான் சபிக்கிறேன் உன்னை உன் எழுத்துக்களை உன் கலாச்சாரத்தை உன் வேஷத்தை.. ( நாம்தேவ் தசள் - கோல்ப்பிதா கவிதைகளிருந்து) மராட்டிய மாநிலத்தில் ஒரு புதிய அலை இதுவரை எழுதப்பட்டிருந்த இலக்கியத்தின்…

‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்’- 20 – கி.ராஜநாராயணன்

வே.சபாநாயகம் 1. கவிதையைப் போலவே, சிறுகதையிலும் வார்த்தைகள்தான் அதிமுக்கியம். "அனாவசியமாக ஒரு வார்த்தைகூட இருக்கக் கூடாது" என்கிறான் ஆண்டன்செக்காவ். ஒருவார்த்தையை எடுத்தாலும், சேர்த்தாலும் கதை பாதிக்கப்பட வேண்டும் என்கிறான். 2. சிறுகதையின் உருவம் கொஞ்சம்…

மணல் வீடு : சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் – நடித்தலும், நவீனமும்

எஸ் எ பாலகிருஸ்ணன் சுப்ரபாரதிமணியனின் முப்பது புத்தகங்களில் ஒன்று நாடக நூல் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுகதை, நாவல் , கட்டுரை என்று எல்லாத்தளங்களிலும் தடம் பதித்திருக்கிறார். தமிழில் நாடக நூல்கள் வெகு குறைவு. எழுத்தாளர்களும்…

கதைகள்

முன்னாள் தெய்வம்

தமிழ்மகன் தூரத்தில் லாந்தர் விளக்கின் வெளிச்சம் மினுக், மினுக் என்று தள்ளாடியது. "வர்றாங்க சாமீ. நீங்க போயி படுங்க'' என்றபடி இனி எல்லாம் சரியாகிவிட்டது என்பதுபோல், இடுப்பில் கட்டியிருந்த துண்டை உதறிக் கையில் சுருட்டி…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 10

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் பகல் முழுவதும் சாத்தூர் அணைக்கட்டில் அங்கும் இங்கும் சுற்றினார்கள். பார்க்கும் காட்சிகள் எதுவும் இருவரின் மனதில் பதியவில்லை. அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் கலகலவென்று சிரித்துக் கொண்டு, சந்தோஷமாக இருந்தார்கள். வசந்தி நிம்மதியை…

கண்ணாடி மனிதர்கள்

இராம. வயிரவன் ‘Quality Begins With Me!’ கட்டை கட்டையாகச் சில்வர் எழுத்துக்கள் வரவேற்பறைச் சுவரில் ஒட்டப்பட்டிருந்தன. முதல் நாள் என்பதால் 8 மணி வேலைக்கு 7:30 மணிக்கே வந்து காத்துக் கொண்டிருந்த எனக்குப்…

அறை எண் 786ல் கடவுள்!

லக்கிலுக் சரவணன் செல்லும் நூற்றி எட்டாவது நேர்முகத்தேர்வு இது. “ஆண்டவா இந்த வேலையாவது எனக்கு கிடைச்சா லஸ் கார்னர் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” மனதுக்குள் வேண்டியவாறு அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான். “வாங்க…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா கிரேக்க தேசத்தின் காலநிலை அமைப்பு மிதமாக மனிதருக்குச் சாகதமாக இருப்பதால் அவர் வெளித்துறைக் கலைகளையும், வெளித்தள விடுதலையையும் (External Arts & Outward Liberty) விருத்தி செய்தனர். இந்தியக்…

காலத்தைச் செலவு செய்தல்

எஸ். ஷங்கரநாராயணன் திடுதிப்பென்று போல இப்படி ஒரு குழப்பம் அவளில் வரலானது. அவள் எதிரே காத்திருந்தது காலம். வங்கியில் போட்ட பணத்தைப் போல, அவள் செலவு செய்ய அது காத்திருந்தது. திகைக்கிற அளவு ஏராளமான…

கலைகள்

எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்!

கி பி அரவிந்தன்1981ம் ஆண்டில் சிறிலங்கா ஆட்சியாளர்களால் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண பொதுசன நூலகம் பற்றிய 'எரியும் நினைவுகள்" என்னும் 50நிமிட ஆவணப்படம் திரையிடலுக்கான தயார் நிலையில் உள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். நூலகம் எரியூட்டப்பட்டு 27வது…

கவிதைகள்

காற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் - நீ கண்டுவர வேணுமடித் தங்கமே தங்கம் ! எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர் ஏதெனிலும் செய்வமடித் தங்கமே…

காதலின் உச்சி

கவிதா நோர்வேமார்பின் உட்புறமும் ஓர் உயிர் வாழ்தல் சாத்தியமோ? கூடுவிட்டு கூடுபாய்தல் பற்றி நம்பிக்கை பிறக்கிறது இப்போது என்னுயிரை மொத்தமாய் உரிஞ்சி இதயக்கூட்டில் புலம்பெயர்ந்த உயிரொன்றின் ஆக்கிரமிப்பில் அகதியாகி நிற்கிறது எனது உணர்வு வயிற்றுக்குள்…

நிழலா..?நிஜமா..?

நிந்தவூர் ஷிப்லி முன்புபோலவே இப்போதும் தூங்க முடிவதில்லை எம்மால்......... இடையில் யாரோ அடையாள அட்டை கேட்டு மிரட்டுவதான பிரமை இன்னும் தொடர்கிறது.. பின்னிரவில் விமானக்குண்டு வீச்சும் கன்னிவெடிச்சத்தமும் காதுகளைப்பிளந்து உணர்வுகளை உலுக்குகின்றன சிதறிக்கிடக்கும் இரத்த்துளிகளுக்கும்…

“பிம்பங்களை உடைக்கும் சாத்தான் – கடவுள்”

கே.பாலமுருகன் தாண்டவம் ஆடுகிறான்! கடவுளைப் போல பார்க்கிறான் திடீரென்று அவன் கைகளில் சூலம் தெரிகிறது! பிறகு ஞானப் பழத்தைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறான்! ஒருநாள் இரவு ரங்கநாதன் போல படுத்துக் கொண்டு வெறிக்கிறான்! அவன்…

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் நீ பேசாது போன பின்னேரம் நீ பேசாது போன பின்னேரம் எனது சொற்கள் செத்துக் கிடந்தன தூரத்தில் போனபிறகாவது திரும்பிப்பார்ப்பாய் என பார்ர்த்துக்கொண்டிருந்தேன் உனது உருவம் புள்ளியாய் சிறுத்து கரைந்துவிட எனக்குள் நீ…

தடுப்பூசி மரணங்கள்!!

இமாம்.கவுஸ் மொய்தீன்கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அழிவுச் சக்திமிக்க ஏவுகணைகள்! வானிலும் ஒற்றர்களாய் விண்கோள்கள்! விண்ணில் மண்ணில் நீரில் பயணம் செய்திட புதுமைகள் மிக்க வாகனங்கள்! உலகின் நிகழ்வுகளை உடனே அறிந்திட தொலைக்காட்சி வானொலிகள்!…

மைன் நதியில்..

றஞ்சினி மங்கிய மின் ஒளியில் நனைந்து கொண்டிருக்கும் மைன் நதியில் உறங்கிக் கொண்டிருக்கும் நகரத்தை படம் பிடிக்கும்போது எங்கிருந்தோ வந்து தழுவிய பனிக்காற்று நதியுடன் போராடி என் நினைவுகளை மீட்டுச்செல்கிறது கலங்கிய நதியில் அதிர்கிறது…

வரைமுறைப் படிமங்கள்

சாமிசுரேஸ் ஓர் இலையுதிர்காலத்தின் பகல்பொழுது வீதியோரங்களில் பழுப்புஇலைகளில் பனித்துளிகள் படுத்துக்கிடக்கின்றன யாருமற்ற நிரந்தர அமைதியில் கிடக்கிறது தெரு கதிர்கள் மங்கி கனவுகள் கரந்த நிலையில் தெருக்களில் வடிந்துகொண்டிருக்கிறது காலம் முரண்பாடுகளின் முதுகில் நிர்ணயிக்கப்பட்ட விசித்தரங்களாய்…

தாகூரின் கீதங்கள் – 29 முடிவான மனநிறைவு மரணம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇறைவன் யார் ? அறிந்திலேன் நான் ! இதுவரை அறிந்திருக்க வில்லை ! ஆயினும் இதை மட்டும் அறிவேன் ! அவனைத் தேடி அடிக்கும் இடி மின்னல் புயல்…

பேற்றேனே துன்பம் பெரிது!

அகரம்.அமுதா ஆஸ்திரியாவில் தான் பெற்ற மகள் எலிசபெத்தை 24 ஆண்டுகள் வீட்டின் பாதாளச் சிறையில் வைத்து அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாயாகக் காரணமானான் ஜோசப் ஃபிரிட்சல்! -செய்தி- (எலிசபெத்தின் நிலையிலிருந்து எழுதப்பட்டது!) காமக் கயவனவன்…

நகைச்சுவை

‘பிட்’தகோரஸ் தேற்றங்கள்

கே சீனிவசன்ஆய கலைகள் 64-ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா என்ன கேட்டீங்கன்னா கட்டாயம் கூட ஒன்னு சேர்க்கனும்ங்க. ஆக மொத்தம் 65. 63 நாயன்மார்கள் கூட 64-வதா கிருபானந்த வாரியாரை சேர்க்கனும்னு சில பேர்…