திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070628_Issue

அரசியலும் சமூகமும்

எண்கள் நெடுவரிசையில் செல்கின்றன – கணிதமும் வரலாற்று அரபுலகமும்

எச்.பீர்முஹம்மது அறிவியல் வளர்ச்சியின் நிகழ்தகவுகள் உலகின் எல்லா பகுதிகளிலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடந்தேறியுள்ளன. இதுவரையில் நிகழ்ந்த மனித அறிவு வளர்ச்சி என்பது மனம் தன்னை தானே அறிந்து கொள்ளும் தர்க்க ரீதியான முயற்சியை…

ஒரு மத அழிப்பின் கதை

அருணகிரி சில நாட்களுக்கு முன் பள்ளி விழா ஒன்றில் அழகான வங்காள நடனம் ஆடிய ஒரு குழந்தையின் தந்தையான ஒரு பங்களாதேஷி இந்துவுடன் பேசிக்கொண்டிருந்தேன். உலகமே அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருக்க, ஐ-நா. அமைதி காக்க திட்டமிட்டு…

அறிவிப்புகள்

இலக்கியம் : உதவுதலும் ஊக்குவித்தலும் ஒன்றல்ல

மலர்மன்னன் தற்காலத் தமிழ் இலக்கிய முயற்சிகளில் எனது பங்கு மிக மிகக் குறைவுதான். முன்பே ஒரு வாசகர் திண்ணை இதழ் ஒன்றில் குறிப்பிட்ட மாதிரி எனக்கு எவ்வித இலக்கிய அங்கீகாரமும் கிடையாது, அது எனக்குத்…

பிரபஞ்சனுடன் ஒரு சந்திப்பு

அறிவிப்பு: சிங்கப்பூர் தேசிய நூலக அதிகாரி திரு. மணியம் அவர்களின் அழைப்பினை நண்பர் திரு. ரெ.பாண்டியன் மூலமாக கிடைக்கபெற்றேன். இதோ திண்ணை வழி நானும் உங்களை அழைக்கிறேன். சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கும் திரு. மணியம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபூகோளம் மின்வலை யுகத்தில் பொரி உருண்டை ஆனது ! ஓகோ வென்றிருந்த உலகமின்று உருவம் மாறிப் போனது ! பூகோள மஸ்லீன் போர்வை பூச்சரித்துக் கந்தை ஆகுது…

இலக்கிய கட்டுரைகள்

மகத்தான மக்கள் பணியில் மக்கள் தொலைக்காட்சி

திசைகள் அ.வெற்றிவேல் எனக்கு திருமணம் நடந்தது 1987 மே மாதம்.திரு.சுந்தர ராமசாமி தனது மனைவி மகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். திருமணத்தின் மறுநாள் எனது மனைவியிடம்…

தமிழ்த் தேசியமும் சிங்களத் திரைப்படங்களும்

ரதன்தமிழ்த் தேசியமானது கடந்த 60ஆண்டுகளில் படிநிலைகளாக வளர்ச்சி அடைந்துள்ளது. 1956, 1976, 1983 இனக்கலவரங்கள் இவற்றை மேலும் கூர்மைப்படுத்தின. 1990இல், ஆண்டாண்டு காலமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூகத்தினரை அவர்களின் வாழிடத்தில் இருந்து…

ஜெயகாந்தன் / ஒரு நாள் ஒரு பொழுது!

தாஜ் தி. ஜானகிராமனை சந்தித்து உரையாடிய அதே தினத்தில் ஜெயகாந்தனையும் சந்தித்தேன்! தி.ஜா.வை காலையில் என்றால் ஜே.கே.வை மாலையில்! 1982ம் ஆண்டு, நவம்பர் மாதம்! என் இலக்கிய குளிரின் முன் அனுபவக் காலம்! முன்தைய…

பாம்பே குண்டு வெடிப்பை பற்றிய அனுராக் காஷ்யப்பின் ப்ளாக் ·ப்ரைடே – இந்தித் திரைப்படம். ஒரு பார்வை

விஸ்வாமித்திரா2004ல் எடுக்கப் பட்ட இந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி இஸ்லாமியத் தீவீரவாதிகள் கேஸ் போட்டதால் வழக்குத் தொடர்ந்து நடந்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினால் 2007ல் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு திரைப்பட விழாக்களில்…

பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 6. வேலைதேடு – வேலைத்தேடு

கரு.திருவரசு வேலை என்பதன் பொருள் என்ன? இதற்குப் பல பொருள்கள் இருந்தாலும் நாம் இங்கே மேற்காணும் சொற்புணர்ச்சி விளக்கத்திற்காக ஒரு பொருளைமட்டும் காண்போம். அதாவது, செய்யும் பணி, தொழில். நான் படித்துவிட்டு இப்போது வேலைத்…

கதைகள்

மாத்தா-ஹரி – அத்தியாயம் 16

நாகரத்தினம் கிருஷ்ணா பவானி கடந்த மூன்று ஆண்டுகளாக தனக்கென்று ஓர் அலுவலகத்தைத் திறந்துகொண்டு, வழக்கறிஞர் தொழிலிற் தீவிரமாக இறங்கியிருந்தாள். அலுவலகம் வீட்டிலேயே இருந்தது. முற்றத்திற்குச் செல்லும் வழியில் வலப்புறம் இருந்த சிறிய அறையை ஒழுங்குசெய்துகொண்டு…

கால நதிக்கரையில்……(நாவல்)-12

வே.சபாநாயகம் முதன்முதலாக கோவில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு அப்பாவிடமிருந்து கோவில் தஸ்தாவேஜுகளைப் பெற்றுக் கொண்டவர் மிகவும் இளைய வயதினர். வயது 25 தான். ஆள் நல்ல நிறத்தில் பளிச்சென்று களையாக இருந்தார். நெளிநெளியான மேல்தூக்கி…

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 7 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்

சி. ஜெயபாரதன், கனடாஈதோ இங்குள நான்தான் ஆண்டனி ! சின்னவனே, எனது இந்த கோலத்தை இனிக் காட்ட இயலாது ! நான் போர்கள் புரிந்தது எகிப்துக் காக ! எகிப்த் ராணிக்காக ! அவள்…

முறையீடு

ராகவன் தம்பி ஏறத்தாழ எட்டாவது முறையாக மீண்டும் அந்தக் கேள்வியை சிவராமன் கேட்டபோது சோட்டே லால் என்னும் அந்தக் கான்ஸ்டபிளுக்குக் கோபத்துக்குப் பதில் சிரிப்புத்தான் வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு…

தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் பதினாறு: ‘ஹரிபாபுவின் விளம்பரம்!’

வ.ந.கிரிதரன் காலை மணி பத்திருக்கும். இளங்கோ படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அறை நண்பர்களனைவரும் வேலைக்குப் போய் விட்டிருந்தார்கள். அருள்ராசாவும் ஏதோ அலுவலாக வெளியில் சென்று விட்டிருந்தான். அன்று இளங்கோவின் மனநிலை எங்கும் செல்வதற்கு இடம்…

கவிதைகள்

காதல் நாற்பது (27) – எனக்குரிய இனியவன் நீ !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎனக்குரிய இனியவனே ! மனக்கவலை தரும் மண்ணில் எறியப்பட்ட எனைக் கைதூக்கி விட்டாய் ! உனது முத்தம் பெறுவதற்கு முன்னே சோகச் சுருள் கூந்த லிடையே உயிர் மூச்சு…

கனடா தேசீய கீதம்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஓ கானடா ! எங்கள் இல்லமே ! சொந்த பூமியே ! நின் மாந்தரிடம் எல்லாம் நிஜ தேசப் பற்றை நிலை நாட்டுகிறாய் நீ ! ஒளி நிறைந்த…

விண்ணில் ஒரு நதியாய்…

அரியநாச்சி அவசர அவசரமாக ஒரு கவிதை. கனவிலேயே எழுத்து அச்சாகத் தொடங்கிவிட்டது. தொடக்கச் சொல் தெருவிளக்கில் ஆரம்பிக்க, இடையிடையே 'அம்மா தாயே!' வருகிறது, அடிக்கடி. இறுதி வரி மட்டும் மனதிற்குள்ளாகவே அதிர வெளியே சொல்வதற்கான…

கதைகளின் கவிதை!

தாஜ் கதை ஒன்று எழுதனும்..... சூரியன் சந்திரன் கிரகங்கள் வானம் பூமி ஜனனம் மரணம் சொர்க்கமும் நரகம் ஜாதி மதம் பூதம் ரத்தக் காட்டேரி பேய் பிசாசு - நம்ம சின்னசாமி பெரியசாமி மாடச்…

காலை புதிது ….. விழிக்கும் மனிதன் ? ….

சக்தி சக்திதாசன் செங்கதிரோன் தன் கரங்களை விரித்து செழிப்பொடு விழித்திடும் பூமியைத் தழுவ பச்சிளைகளின் நுனியில் முத்தாய் மிளிரும் பனித்துளிகளின் வண்ணம் மிளிர்ந்தே ஜொலிக்க புதிதாய் பிறக்குது காலையொன்று புவிதனிலே புதிதாம் இங்கே மலரும்…

தம்பி நீ!!

இமாம்.கவுஸ் மொய்தீன் நீ ஏணியாய் இருந்து விடாதே! உன்னை மிதித்து உயரே செல்வோர் உன்னை உதைத்துக் கீழே தள்ளுவர்! நீ மிதிப்பவரை மிதி! மதிப்பவரை மதி! நீ வாழ்வாய்!! நீ பாதையாய் இருந்து விடாதே!…

பூனைகளும் புலிகளும்

புதியமாதவி, மும்பை பூனைகளை நான் ரசிப்பதில்லை ஓசையின்றி திருட்டுப் பார்வையில் அங்குமிங்கும் அலைபாயும் விழிகளுடன் அலைந்து கொண்டிருக்கும் பூனைகளை நான் ரசிப்பதில்லை. தூக்கத்திலிருக்கும் பூனைகளை கண்டு தூரவிலகிவிடுவது உத்தமம். விழித்திருக்கும் பூனைகளை விட தூங்குவது…

பட்டறிவு

ஆதிராஜ் பிள்ளையார் சுழி போட்டுப் பேரேடு தொடங்கினேன். கள்ள மார்க்கட்டுக் கணக்கெழுதும் நோட்டு அது! கொள்ளை கொள்ளையாய் குவிந்தது லாபம்! கொஞ்ச நாளில் கள்ளக் கணக்கால் காலாண்டுக் கடுங்காவல்! உள்ளே இருந்தபின் உறுதியுடன் வெளிவந்தேன்!…