திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051118_Issue

அரசியலும் சமூகமும்

தனியார் மற்றும் உலகமயமாதலும், இந்திய கலாச்சார, தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரதன்மை பின்னடைவுகளும்

அருண்மொழி இந்தியா பல்வேறு தேசிய-மொழி இனங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஜனநாயக கூட்டாட்சி அமைப்பு மட்டுமின்றி, தொழில் மற்றும் வர்த்தக அரங்கில் மற்ற நாடுகளுடன் போட்டியிட திறமை வாய்ந்த சந்தைப் பொருளாதாராமும் ஆகும். அதுமட்டுமன்றி உலக…

ஒரு உரையாடலும், சில குறிப்புகளும் -1

K.ரவி ஸ்ரீநிவாஸ் சுந்தர ராமசாமியுடன் (சு.ரா) நடந்த ஒரு உரையாடலை பி.கே.சிவக்குமார் திண்ணையில் பதிவு செய்து வருகிறார். அவருக்கு என் நன்றிகள். இந்த உரையாடலின் பதிவான சில கருத்துக்கள் குறித்த என் எண்ணங்களை இங்கு…

சிந்து மாநிலத்தில் மொழி பிரச்னை

சையது ஏ மதீன் மொகலாயர் காலத்தில் (1526-1858) உருது மொழி தோன்றியது. மொகலாய குடும்பத்தில் இருந்த சிலர் இசைக்கும் கவிதைக்கும் பெரும் புலவலர்களாக இருந்தார்கள். அங்கு மெதுவாக 'ஹிந்துஸ்தானி ' கவிதை தோன்றியது. இது…

நாயகனும் சர்க்காரும்..

புதியமாதவி எங்க மும்பையின் அசல் நாயகனைப் பற்றிய அசலான ஒரு திரைப்படம்.. 'சர்க்கார் '. வழக்கம்போல எல்லா திரைப்படங்களுக்கும் போடுகிற மாதிரி ஓர் அறிவிப்பு, படம் ஆரம்பிக்கும் முன்பு.. 'கதையும் கதாபாத்திரங்களும் எந்த மனிதர்களுடனும்…

மதமாற்ற எண்ணங்களின் மாற்றம்

கவிஞர் புகாரி மதங்கள் இறைவனை அடையாளம் காட்டுவதற்காகத் தோன்றின. வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று வரையறுத்துச் சொல்வதற்காக வந்தன. வேறு எதற்காகவும் மதங்கள் பிறக்கவில்லை. இது செய்யலாம் இது செய்யக்கூடாது. இது செய்தால் பாவம்,…

போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1

மார்வின் ஹாரிஸ் (Cows, pigs wars and witches புத்தகத்தின் 5ஆம் அத்தியாயம்) பழங்குடி வாழ்க்கை ஆராய்ச்சியின் புதிரான வாழ்க்கை வழிமுறைகளில் முக்கியமான ஒன்று 'கெளரவத்துக்கான போட்டி ' (Drive for prestige) பலர்…

எடின்பரோ குறிப்புகள் – 2

இரா முருகன் பிரதமர் டோனி பிளேய்ர் அவருடைய ஆட்சிக்காலத்திலே முதல் தடவையாக பிரிட்டாஷ் காமன்ஸ் அவையான நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். தீவிரவாதத்துக்காகக் கைது செய்யப்பட்டவர்களைக் காரணம் காட்டாமல் ஆறு மாதகாலம் காவலில் வைக்க வழிசெய்ய…

தமிழ் விடுதலை ஆகட்டும்!

சி. ஜெயபாரதன், கனடா புத்தம் புதிய கலைகள், பஞ்சப் பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே, அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! ... சொல்லவும் கூடுவ தில்லை! அவை சொல்லும்…

அறிவிப்புகள்

கடிதம்:

மலர் மன்னன் அன்புள்ள 'திண்ணை ' ஆசிரியருக்கு, 'திண்ணை 'யின் சமீப இதழில் 'அயோத்தி தாசர் ஆய்வுகள் ' என்ற ராஜ் கவுதமனின் நூலை பாவண்ணன் ஆழமாகவும் விரிவாகவும் நுட்பமாகவும் மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு…

மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு

அறிவிப்பு மலேசியா சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் தமிழ் இலக்கியங்கள் ஒரே வரலாற்றின் இரு கிளைகளாக இன்று வரை இருந்துள்ளன. ஆனால் இவற்றின் எதிர்காலமும் ஒன்று போல இருக்குமா அல்லது வேறு படுமா என்பது…

கடிதம்

மலர் மன்னன் 'அவுரங்கசீப்பின் உயில், ' கூண்டில் ஏற்றப்பட்ட குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் போல் மிகத் துல்லியமாய் வெளிப்பட்டிருக்கிறது. பெற்ற தகப்பனுக்குத் தான் இழைத்த கொடுமைகளும், நியாயப்படி ஆட்சிக்கு வரவேண்டிய தன் மூத்த சகோதரன்…

கடிதம்

மூர்த்தி அன்பின் திண்ணை எடிட்டர் அவர்களுக்கு, சைலஜா அவர்களின் 'காப்பாத்துங்க ' சிறுகதை அருமையிலும் அருமை. நன்றாக இருந்தது. மென்மேலும் அவரினை ஊக்குவித்து எழுதச் சொல்லுங்கள். நல்ல கதாசிரியர் அவர். திண்ணை நன்றாகச் செல்கிறது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'கால தேவன் எல்லாவற்றையும் நகைப்புக் கிடமாக்குகிறான்! ஆனால் பிரமிட் கூம்பகங்கள் கால தேவனை நகைப்புக் குள்ளாக்குகின்றன. ' அரபிய முதுமொழி 'சூழ்ந்துள்ள மேக மந்தைகள் தொடுவானிலிருந்து…

ஆறு வாரத்தில் அருமையான உடல்நலம்

ரா.சரவணன் (முதுகலை மீன்வள அறிவியல்) நம் உடலை ஆரோக்கியமாக பேணுவதில் நமக்குத்தான் முதலில் அக்கறை இருத்தல் அவசியம். கண்டபடி உணவு உண்டு, ஒரு முறையான உணவுப்பழக்கம் இல்லாமை, நோய்களுக்கு வழிவகுக்கும். உணவுப்பழக்க வழக்கம் என்பது…

இலக்கிய கட்டுரைகள்

எம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு

க. மோகனரங்கன் தமிழ் நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரையிலும் இந்நூற்றாண்டின் தொடக்கத்தை 'நாவல்களின் காலம் ' என்று சிறப்பித்துக் கூறலாம். அந்த அளவிற்கு வடிவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டு மொழி எனப் பலவகைகளிலும் மாறுபட்ட குறிப்பிடத் தகுந்த…

சுந்தர ராமசாமி : நினைவின் நதியில்

ஜெயமோகன் சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ரா.வைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது…

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VI

பி.கே. சிவகுமார் சு.ரா.: அது முக்கியமான விஷயம். அது முக்கியமான விஷயம். அவன் யாரு, எங்க இருக்கான்... சார், சில லெட்டர்ஸ் வந்து பிரில்லியண்ட்டா இருக்கு. உடனே நான் அவனுக்கு ஒரு இ-மெயில் அனுப்பறேன்.…

கதைகள்

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-4)

சி. ஜெயபாரதன், கனடா 'செய்யப்படும் எந்த நற்பணி தண்டிக்கப் படாமல் தப்பிச் செல்வ தில்லை! ' 'நான் ஒரு மாது. அபாரமான முயற்சியில் ஈடுபட்டு நான் வாழ்வில் வெற்றி பெற வேண்டும்! நான் தோல்வி…

ஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை

எரிக் ஓல்தெர் ( பிரெஞ்சிலிருந்து தமிழில் -நாகரத்தினம் கிருஷ்ணா ) இங்கே எவருக்காகிலும் 'பகத் 'தோ- குச்சுமாதிரியான நீண்ட ரொட்டி- 'ஷொக்கோலத்தீனோ ' -சாக்லேட் கொண்ட சிறிய ரொட்டி - வேண்டுமெனில் அங்கேதான் போகணும்…

கோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள்

எஸ். ஷங்கரநாராயணன் />>>/ ரொம்ப அமைதியான மனுசன் குருமூர்த்தி. எப்பவும் துலக்கமான நெற்றியில் தேங்காய்ப் பூவாய்த் திருநீறு பூசியிருப்பான். சிரித்த முகம். அவன் பேன்ட் போட்டு பார்த்தவர் இலர். துாய வெள்ளை வேட்டி, வெள்ளைச்…

‘சொல்’’

மு.பழனியப்பன் தெரியாமல் செய்யும் சின்ன சேட்டைகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன, ஸ்ரீராமன் தெரியாமல் செய்த சின்ன சேட்டைதான். வில் வளைக்கும் வயதில், கூனி முதுகில் அவன் விட்ட அம்பு, சொல்லம்பாகி சோகம் தந்தது,…

கவிதைகள்

பெரிய புராணம் – 65

பா.சத்தியமோகன் 1747. அம்மையாரை விட்டு நீங்குவதே எண்ணமாகக் கொண்டு அதற்கேற்ற முயற்சி செய்தான் அலைகளுடைய கடல்மீது படரும் கப்பல் கொண்டு சென்று நெடிய நிதி கொணர்வேன் என்று கூற நெருங்கிய பல சுற்றத்தவரான குற்றமற்ற…

நான் நான் நான்

தேவமைந்தன் முக்கியமான தமிழ்ப் பண்பாட்டுக் கருத்தரங்கு. அதிகாரி நுழைகிறார். அமர்வு நிறுத்தப்படுகிறது. கெஞ்சிக் கொஞ்சி அழைக்கப்படுகிறார். கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பிக்க வந்தவர்களில் கவுரவம் என்றொன்றும் தன்மானம் என்னுமொன்றும் அறிந்து உணர்ந்தவர்கள், ' 'ஓரம்போ! ஓரம்போ!…

சிறுவட்டம் தாண்டி….

நண்பன் ---- குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக் களைத்து வீழ்ந்த நண்பர்கள் விழிகளை வீசித் தேடினர் சக குண்டு சட்டிகளை குண்டுசட்டி சிறுவட்டம் வழி வான்துண்டொன்று எட்டிப்பார்த்தது மல்லாந்து கிடந்த நண்பர்களை விண்வெளியின் விரிவே ஒரு…

கீதாஞ்சலி (49) ஒளியின் நர்த்தனம்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா மின்னொளியே! என்னரும் ஒளியே! எனது உள்ளத்துக் கினிய ஒளியே! என் விழிகள் முத்தமிடும் ஒளியே! முழு உலகை மூழ்க்கிடும் ஒளியே! நர்த்தனம் ஆடுகிறது ஒளி, வாழ்வின் நடுப் பொழுதில்,…

இமைகள் உரியும் வரை….

ருத்ரா ==== முகவரி இல்லாத கவிஞன் நான். பரிவட்டங்கள் சூடப்படும் சூட்சுமங்கள் தெரிந்து கொள்ளும் தெம்பற்று முதுகெலும்பு இல்லாதவனாய் எங்கோ நான் இருந்தபோதும் என் முதுகெலும்பே இந்த பேனா தான். நூலேணி இதில் கட்டி…

இவ்வாறாக, நான் நூலகர் ஆகிப்போனேன்!

தேவமைந்தன் பன்னிரண்டு வயதில் எக்கிநின்று மரத்தில் மேடை உயர்த்திய புத்தக வாடகைக் கடையில் இரண்டு நாவல் ஒரு ரூபாய்க்காய் வார வாடகைக்கு எடுத்துச் சென்று வீட்டுக்குப் போய்ப் படித்து நிம்மதியாய் திருப்பித் தந்தேன். சுமையில்லை.…

உனக்காகப் பாடுகிற குருவி

சாரங்கா தயாநந்தன் பொழுதின் வெளிப்பின் முன்னதாக மலராதிருக்கிற உன் விழி மலர்களில் மெல்ல முத்தமிட்டு எழுந்திருந்ததும் இருகால்களிலும் அணிந்து கொள்கிறேன் இரவில் கழற்றி வைப்பதும் பகல் முழுதும் ஓயாததுமான இரு மாயச் சக்கரங்களை. பின்னர்…

நான் காத்திருக்கிறேனடி

புகாரி அடா என் பிரியக் கிளியே நான் காத்திருக்கிறேனடி விழிகள் சிவப்பேற இரவுக் கவிஞனுக்காய் ஏங்கிக் கொண்டிருக்கும் மேற்கு வானமாய் நான் காத்திருக்கிறேனடி உன்னிடம் சொல்லச் சுரந்த கவிதை முத்துக்களை ஒவ்வொன்றாய் கழற்றி எறிந்துகொண்டே…