திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020421_Issue

அரசியலும் சமூகமும்

வாழ்க்கையின் கேள்விகள் ,பதில்கள், பதில்களுக்கு அப்பால்…

ஜெயமோகன் ([பொன்மணி பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் சோதிப்பிரகாசத்தின் 'வாழ்க்கையின் கேள்விகள் ' [இரண்டாம் பதிப்ப்பு ]என்ற நூலுக பகுதி ஒன்று : விவாதத்துக்கான முகாந்திரம் [ அ ] சோதிப்பிரகாசம் அவர்களின் இந்த நூலுக்கு…

உரிமை கொண்டாடுகிற ஆளுமை

ஜே. கிருஷ்ணமூர்த்தி ( தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) அவர்கள் இருவரும் தொடர்புடைய, அவர்கள் இருவரையுமே பாதிக்கிற பிரச்சினை என்பதால் மனைவியையும் உடன் அழைத்து வந்ததாகக் கணவர் கூறினார். மனைவி, உருவில் சிறியவராகவும், பிரகாசமான கண்களுடன்,…

இந்தியாவில் வறுமையின் முடிவு, நிலைமையும் காரணங்களும்.

இரா மதுவந்தி இந்தியாவில் வறுமையில் இருப்பவர்கள் 26 சதவீதம் பெப்ரவரி 26ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார சர்வே 2001-2002 அறிக்கையின் படி, இந்தியாவில் 26 சதவீதத்தினரே வறுமையில் வாழ்கிறார்கள். கணக்கு எடுத்த…

ரஸ் கான் – ஒரு கிருஷ்ண பக்தர் சூஃபி

யோகீந்தர் சிகந்த் அவுட்லுக் இந்தியா வாரப்பத்திரிக்கையிலிருந்து. இந்திய சூஃபி இயக்கத்தில் மிகவும் முக்கியமானதும், நமது பரந்துபட்ட சமயக்கலாச்சாரத்தின் கிரீடம் இருப்பது முஸ்லீம் சூஃபிகளால் உருவாக்கப்பட்ட கிருஷ்ணபக்தி இயக்கம். இந்த சூஃபிகள் இயற்றிய கவிதைகள் இன்றும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் – ஆர்கிமிடிஸ் (Archimedes)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி ஒரு பொருள் திரவத்தில் மூழ்கி இருக்கும்போது, அப்பொருள் தன் எடைக்குச் சமமான திரவத்தை வெளியேற்றும் - இந்த அடிப்படை உண்மையைக் கண்டறிந்தவர் ஆர்கிமிடிஸ்…

அமெரிக்காவின் முதல் அணு உலை இயக்கிய என்ரிகோ பெர்மி

சி. ஜெயபாரதன், கனடா. அணுவைப் பிளந்தார்கள்! 1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ பெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான் கணைகளால் உடைத்து,…

கோழிகளுக்கும் தேவை குடும்பம். அம்மா அப்பா சண்டையிட்டால் குஞ்சுகள் அசிங்கமாய் இருக்கும்

ஜான் விட்ஃபீல்ட் குடும்பத்தில் நடக்கும் குழப்பம் குழந்தைகளைப் பாதிப்பது மனிதர்களிடையே மட்டுமல்ல. வரிக்குதிரை வடிவம் கொண்ட குருவிகள் மத்தியிலும் கூட இப்படித் தானாம். அப்பா இல்லாத குடும்பத்தில் அம்மாக் குருவிகள் வேலைகள் செய்ய சுணக்கம்…

இலக்கிய கட்டுரைகள்

மணிரத்னத்தின் நாயகன் – ஒரு மறுபார்வை

இரா மதுவந்தி நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது நாயகன் படம் வந்தது. நாயகன் படம் நல்ல படம் என்று என் நண்பர்களிடம் சொன்னபோது, அவர்கள் வழக்கம்போல, மணிரத்னம் ஒரு நல்ல வியாபார திரைப்பட தயாரிப்பாளர் அவ்வளவுதான்…

பார்வை–கொங்கு மண்டல கூத்துக் கலை

வெளி ரெங்கராஜன் பன்மைத்தன்மை கொண்ட தமிழ்க் கலாச்சார மரபுகள் பேணிப் பாதுகாக்கப்பட்ட ஒரு காலகட்டத்திலிருந்து நாம் விலகி கலாச்சாரம் என்கிற பெயரில் அதிகார வர்க்க மற்றும் மத்திய வர்க்க மதிப்பீடுகளே தமிழ் இயக்கங்களாலும், ஊடகங்களாலும்…

Lutesong and Lament :Tamil Writing from Srilanka புத்தக விமர்சனம் : புதிய புற நானூறு, அக நானூறு

கல்பனா சோழன் Lutesong and Lament :Tamil Writing from Srilanka (Edited by Chelva Kanagayakam, Pages : 172, Published by TSAR Publication, Canada. Price $23.95) மஹாகவி, எம்.…

எனக்குப் பிடித்த கதைகள் -10- பூமணியின் ‘பொறுப்பு ‘ – சிரிப்பும் எரிச்சலும்

பாவண்ணன் பதினோராம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டதுமே எங்கள் பள்ளிக் கூடத்தில் பரபரப்பு கூடிவிட்டது. தினந்தினமும் காலைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பள்ளிஇறுதியின் வெற்றிக்கும் வாழ்க்கைக்குமான தொடர்பைப் பலவிதமான எடுத்துக்காட்டுகளோடு சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள்…

கதைகள்

நாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி)

ஜி. நாகராஜன் கோவிலில் நின்றுகொண்டிருந்தான் அவன். அவன் பார்த்துக் கொண்டிருந்த சிலையின் முகத்தில் அம்மாவின் களை தட்டிற்று. முகம் அவனைப் பார்த்து ஒரு விதமாகச் சிரித்தது; கண்களில் துளிர்த்த நீரைப் பார்த்தால் அழுவது போலவும்…

புலம் பெயர்ந்த காட்சிகள்

பாரதி ராமன் மனதை அடக்குவது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. சும்மா இருக்கும் நேரங்களில் அது எதெதையாவது கற்பனை செய்துகொள்கிறது. பிறகு குரங்குபோல வேறெதற்கோ தாவி விடுகிறது. மூளைதான் பாவம், அந்தக் கற்பனைகளைக் களையெடுத்துப்…

அகதி மண்

சுப்பையா சுளீரென விழுந்து உடம்பில் வேதனை உண்டாக்கும் மாயச் சாட்டை வீச்சுக்கு வேகமெடுத்து ஓடுவது போலத்தான் வேலைநாட்களின் வழமைகள். அலாம் அடிக்க உறக்கம் கலைந்து, படுக்கையிலிருந்து உடம்பை உரித்ததும் மனசு நிமிடங்களை எண்ணத் தொடங்கிவிடும்.…

கலைகள்

சீயம்

தேவையான பொருட்கள் பச்சரிசி 1 கோப்பை உளுத்தம்பருப்பு 3/4 கோப்பை வெல்லம் 1 கோப்பை தேங்காய் 1 மூடி ஏலக்காய் 4 பாசிப்பருப்பு 1 கோப்பை கடலை எண்ணெய் 1/2 கிலோ செய்முறை அரிசி…

இடியாப்பம்

தேவையான பொருட்கள் மாதக்கணக்கில் வைத்து உபயோகப்படுத்த தேவையான அளவு புழுங்கலரிசி செய்முறை கொடைக்காலத்தில் செய்யுங்கள் புழுங்கலரிசியை கழுவி தண்ணீர் வடிந்ததும், இடித்து மிக மிருதுவாக சலித்துக்கொள்ளவும் இடித்த மாவை வெய்யலில் ஒரு நாள் காயவைக்கவும்…

கவிதைகள்

சின்னப் புறா ஒன்று

புஷ்பா கிறிஸ்ாி (அண்மையில் அனாதையான என் மைத்துனி மகளின் குரலாய்) அன்று சொன்னது நீ என் சிறகினுள் உன்னைக் காப்பேன் என்று இன்று போனதும் நீ என்னைத் தனியாக்கி உன் வாழ்வு மரணித்ததும் ஏனோ…

எங்களின் கதை

இளங்கோ சந்திப்புக்கள் அசாதாரணமாய் சம்பவிப்பவை வெயிலின் கொடுமைதாளாது ாீடோ ஆற்றில் கைகள் அளைந்து என் விம்பந்தேடி வெறுமை பெருகியவேளையில்தான் நிகழ்ந்தது நினது நதியுலா உன்னை சில விாிவுரைகளில் சந்தித்திருக்கின்றேன் சகமாணவியென்ற முறையில் அறிமுகங்கள் புன்னகையுடன்…

மன்னனாய் என் வாழ்க்கை..

ஆனந்தன் என் கம்மிரமான நடை என்னையே பெருமிதத்தது! அரங்கு முழுவதும் அக்ரோசமான ஒலி! அரியனை எறியதும் அரவே நிறுத்த செல்லவேண்டும்! என்னை வாழ்த்தும் ஒலி என்பதால் என்னால் நிறுத்த சொல்ல இயலவில்லை! புகழுக்கு செவி…

மகிழ்ச்சி என்பது ஒருமை..

சேவியர். நான் நினைத்திருந்தவை நிலைத்திருக்கவில்லை. மகிழ்கிறேன். யாரேனும் அளிக்கும் அன்பளிப்புப் பொதிகளோ, வாங்கிக் குவித்த வங்கிக் கணக்குகளோ, எனக்குள் நிலையாய் எதையும் நட்டுவிடவில்லை. மழலை மாலைகளில் முந்திரித் தோட்டத்தில் தும்பிக்குப் பின் துரத்தி நடந்த…

அந்த நாளும் அண்டாதோ ?

பசுபதி பவனிவரும் நடையழகு; பைந்தமிழின் மொழியழகு; . . பத்து மூன்று சொல்லழகு. சிவனுடனே வாதிடலாம்; திருக்குறளை ஓதிடலாம்; . . சிறுவர் பாட்டு யாத்திடலாம். நவநவமாய் எழுதிடலாம்; நாவல்கள் குவித்திடலாம்; . .…

உருவமற்ற நான்.

எஸ். வைதேஹி. நினைவுகளின் பின்னால் ஓடி எனக்கு சலிப்பாகி விட்டது. தலைக்குப் பின்னே வழிந்து ஓடும் நேற்றைய யிரவு.. யிருப்பினும், நினைவுகளுடன் கூடிய என்னைத் தேடத் தொடங்கினேன். காடுகளின் நடுவில் என்னைத் தொலைத்துவிட்டு மலைகளின்…

ரமேஷின் மூன்று கவிதைகள்

ரமேஷ் குறிப்பு: நலமா ? கிட்டத்தட்ட வலையின் இலக்கிய பக்கங்களில் ஒரு விதமாக பரிச்சியம் செய்துகொண்டாயிற்று...எங்கேடா காணோமே என்று நினைத்து முடிப்பதற்குள் சிறு பத்திரிக்கைகளின் பிறத்தியோக வார்த்தைகளுடன் 'குழாயடிச் சண்டை 'களும் கண்ணில் பட,…

வரம்

திலகபாமா,சிவகாசி நமக்கான உணவுக்காய் சந்தையில் பசி தவிர்த்தெல்லாம் வாங்கி நமக்கான பிள்ளைக்காய் பள்ளி கட்டணமாகி நமக்கான சேமிப்புக்காய் வங்கி வரிசையாகி நமக்கான வீட்டுக்காய் செங்குருதி கல்லாகி நமக்கான மானத்துக்காய் உடையின் நூலாகிகுத்தும் ஊசிக்கிடையிலும் கிழிசல்கள்…