திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020310_Issue

அரசியலும் சமூகமும்

மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.

ஞாநி மஞ்சுளா நவநீதன் என்ற பெயரில் உலவும் நபரை ஒரு பொருட்டாக மதித்து பதில் எழுத வேண்டிய அவசியமே இல்லை என்ற முடிவை நோக்கி என்னை அவர் தள்ளி வருகிறார். காரணம் அவர் இதழியலையும்…

மேலோட்டமான சிந்தனைகள்; ஆழமான அவ நம்பிக்கைகள். இதுதானா ஜெயமோகன் ?

மாலன். அன்புள்ள ஜெயமோகன், உங்கள் பதிலை நான் பொருட்படுத்திக் கவனிக்கவில்லை என்ற மனக் குறையோடு உங்கள் கடிதம் துவங்குகிறது. அதை நான் பொருட்படுத்தவில்லை என்றால் இவ்வளவு விாிவாக நான் பதிலெழுதி இருக்க மாட்டேன். இப்போதும்…

மதச்சாயம் மாற்றத்திற்கு வழிவகுக்குமா ?

மு.பாலசுப்பிரமணியன் அண்மையில் சிவகாசியில் நடைபெற்ற முழுஅடைப்பு சமூக அக்கறை உள்ளவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. குழந்தைத் தொழிலாள˜ என்ற சிக்கலை முன்வைத்து இந்த அடைப்பு நடைபெற்றுள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை முன்நிறுத்தியும்,…

சமரசமன்று : சதியென்று காண் !

ஞாநி அயோத்தி பாபர் மசூதி-ராமர் கோயில் பிரச்சினையில் காஞ்சி சங்கர மடாதிபதி தலையிட்டு சமரசம் செய்ய முனைந்திருப்பதை சிலர் வரவேற்றுள்ளனர். இது ஆபத்தானது. காஞ்சி மடாதிபதி இந்தியாவில் உள்ள இந்து மதத்தினர் என்று சொல்லப்படுவோர்…

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை

ஜெயமோகன் முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடுகிறேன்.இக்கட்டுரை ஈவேரா குறித்த எனது முழுமையான மதிப்பீடு அல்ல.அவரது மொத்த எழுத்துக்களையும் ஆனைமுத்து தொகுப்பில் கூர்ந்து படித்ததுண்டு .அவர் மீது விமரிசனங்களை அவ்வடிப்படையில் முழுமையாக ஆதாரங்களுடன்…

காஞ்சி சங்கராசாரியார் : இந்துக்களின் போப்பாண்டவர் ?

மஞ்சுளா நவநீதன் எனக்கு ஆச்சரியமான விஷயம், சமீப காலமாக, இந்து மதத்துக்கு தலைவர் போல காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியை பல அரசியல் வாதிகள் தூக்கி வைப்பதுதான். உண்மையில் என்னைப் பொறுத்தமட்டில், ஜெயேந்திர சரஸ்வதி…

திண்ணையும், திராவிடியத்தின் சீரழிவும், மஞ்சுளாவும், மஞசள் காவியும்

லியோன் இங்கே நான் படித்த பிற்போக்கு கருத்தியலை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுரைகளுக்கான எனது எதிர்க் கருத்தை குறிப்பிட அனுமதியுங்கள். அன்று ஒரு சிறு அமைப்புகளாக இருந்த, விஸ்வ இந்து பரிசத் மற்றும் விஜேபி, ஆர் எஸ…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணுப் பிணைவு சக்தி – அவனியின் எதிர்கால மின்சக்தி

சி. ஜெயபாரதன், கனடா சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து! சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம்…

குளிர் அணு இணைப்பு cold fusion கேள்வி பதில்கள்

குளிர் அணு இணைப்பு (cold fusion) என்றால் என்ன ? குளிர் அணு இணைப்பு என்பதை கண்டு பிடித்தவர்கள் ஸ்டான்லி போன்ஸ், மார்டின் ஃப்ளெய்ஷ்மன் என்ற இருவர். இதனை மார்ச் 1989இல் அறிவித்தார்கள். சில…

மேஜை மீது சிறிய அளவில் அதிவெப்ப அணு இணைப்பு. (Hot fusion)

OAK RIDGE, Tenn., March 4, 2002 ஓக் ரிட்ஜ் தேசிய பரிசோதனைச்சாைலை ஆராய்ச்சியாளர்களும், ரென்ஸெலார் பாலிடெக்னிக் பள்ளியும், ருஷ்ய அறிவியல் அகாடமியும் இணைந்து தெரிவித்த பரிசோதனை அறிவிப்பில், அவர்கள் திரவத்துக்குள் இருக்கும் குமிழிகளில்…

இலக்கிய கட்டுரைகள்

பிறவழிப் பாதைகள் (மீண்டும் தீம்தரிகிட, பன்முகம் -காலாண்டிதழ், நிழல் – நவீன சினிமாவுக்கான களம் )

கோபால் ராஜாராம் மீண்டும் தீம்தரிகிட ஞாநியின் தீம்தரிகிட மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். வெகுஜன தளத்தில் சிறப்பான அரசியல் விமர்சனங்களும், பார்வைகளையும் வெளியிட்டது தீம்தரிகிட-வின் சிறப்பு. ஞாநியின் கலாசாரப் பயணம் மிகத் தீர்க்கமான நோக்கங்களும்…

வாசிப்பனுபவமும் கண்டடைதலும் (அம்மா வந்தாள் பற்றிய இரா பாலசுப்பிரமணியம் கட்டுரைக்கு பதில்)

பாவண்ணன் ஒரு கட்டுரையில் இடம்பெறும் ஒருசில வரிகளை கட்டுரைக்கு வெளியே எடுத்துப் பொருள் கொள்ள முயற்சி செய்யும்போது பல பிழைகள் ஏற்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் பல நிலைகளிலிருந்து உருவாகின்றன என்கிற ஆச்சரியமே இரா.பாலசுப்பிரமணியம் அவர்களின்…

திரையரங்கச் சமாச்சாரங்கள்- 1 – பெர்லின் சர்வதேச திரைப்படவிழா-2002

ந. சுசீந்திரன் ஏழு வருடங்கள் கடந்து விட்டது. பெர்லினில் 1995 இன் அந்த மாலைப் பொழுது இன்னும் மறந்துவிடவில்லை. இலைவிழுந்து துக்கித்துக் கிடந்த தெருமரங்கள், மீண்டும் கொழுந்தெடுத்து நின்ற ஒரு பருவகால மாலையில் நானும்…

எனக்குப் பிடித்த கதைகள் – 5 – மெளனியின் ‘சாவில் பிறந்த சிருஷ்டி ‘ (பதற்றமும் பரிதாபமும்)

பாவண்ணன் என் சிறந்த நண்பரொருவர் வங்கி ஊழியராக இருந்தார். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் ஐந்து குழந்தைகள் இருந்தனர். ஐந்தாவது குழந்தையின் பிரசவத்தில் ஏதோ சிக்கல் ஏற்பட்டதில் மனைவிக்கு மரணம் சம்பவித்து விட்டது.…

கதைகள்

பூனை வளர்த்த வரதராஜன் கதை

கே.ஆர்.ஐயங்கார் சிற்சில சமயங்களில் சென்னை துரைசாமி பாலத்தின் முடிவில் இரு எருமை அல்லது பசு மாடுகள் நின்று கொண்டு சுற்றுச்சூழல் பற்றிப் பொருட்படுத்தாமல்,யாரைப் பற்றியும் அக்கறையில்லாமல் 'கன்னத்தில் முத்தமிட்டால் ' சிம்ரனின் கன்னத்தையோ அல்லது…

23 சதம்

அ முத்துலிங்கம் கனடிய டொலர் .23 சதம். இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் 15.00, இந்திய ரூபாயில் 8.00. இத்தாலிய லீராவில் 333, யப்பானிய யென்னில் 20. அது அல்ல முக்கியம். கனடிய அரசாங்கம்…

கலி காலம்

அலர்மேல் மங்கை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது வாசலில் அழைப்பு மணி சத்தமிட்டது. 'யார்னு பாரு ' வித்யா எரிச்சலுடன் எழுந்து போனாள். அப்பள மாமி உள் வாசல் படியில் செளகர்யமாக கால்களை நீட்டிக் கொண்டு…

கலைகள்

மாரக்கீஷ் காய்கறி கூட்டு (Marrakesh-Africa)

தேவையான பொருட்கள் 1 சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உரித்து, சதுரங்களாக வெட்டியது 1 நடுத்தர கத்தரிக்காய், சதுரமாக வெட்டியது 1 பச்சை குடை மிளகாய், வெட்டியது 1 சிவப்பு குடை மிளகாய் வெட்டியது 2 கேரட்,…

பிஜி கேரட் சூப்

8 கோப்பை தண்ணீர் 6 கேரட் வெட்டியது 2 உருளைக்கிழங்கு, உரித்து சதுரமாக வெட்டியது 3 செலரித் தண்டு 1 பெரிய வெங்காயம் 1/4 கோப்பை சோய் ஸாஸ் 1/4 தேக்கரண்டி ஜீரகத்தூள் 1/2…

கவிதைகள்

பயங்கரவாதம்

பொன் முத்துக்குமார் இது காலில் குத்திய முள்ளை எடுக்க கத்தி கொண்டதால் நேர்ந்த விபரீதம். கண்ணில் விழுந்த தூசியை அமிலமூற்றி அகற்ற முயன்றதால் விளைந்த பயங்கரம். முதுகு அரிக்குதென்று சொரிய முள்வேலியையா தேர்ந்தெடுப்பது ?…

பாவனை முகங்கள்

திலகபாமா,சிவகாசி துளியினும் துளியாய் மகரந்தம் விதையாகி கனியாகி பின் விருட்சமாய் காணக் கிடைத்தலாய் நிறமில்லாது மறைந்தபடி நிறைந்திருந்த காற்று அண்ட வெளியதனின் சுவாசமாய் சுழன்ற காற்று அலைகள் வடிவில் கடல் நிறைத்து காண்பித்தலாய் வடிவமிலாக்…

நவபாரதக் கண்ணம்மா: அருந்ததி ராய்

வ.ந.கிாிதரன் - ஓரணை தானேயென்று இருந்து விட இவளால் முடியவில்லை. விம்பங்களை வழிபடும் மண்ணில் பூகம்பங்களைப் பற்றி யார் கவலைப் படுவார் ? பில்லியனிலொரு துளி பலருக்கு அந்தச் சிலர். மில்லியன் பல கிடைத்தும்…

எது கவிதை ?

மாம்பலம் கவிராயன் பீடித் தொழிலாளி சாணை பிடிப்பவன் லாடம் அடிக்குமாள் சித்தாட்பெண் - வாடி மிதியடி குத்தும் சிறுவனின் பேச்சே நிதியாம் கவிதைக் குணர். மாலையே மாற்றுங் கதைகள் பழையன ஓலையே சொல்வதே பாடெனக்…

அரச சவம்

மாம்பலம் கவிராயன் நீட்டி நிமிர்ந்து அரையில் பதமொடு தீட்டிய வாளுமாய்த் தீவிழி- காட்டிய வீரம் புகையில் கலக்கவே கட்டிலில் ஈரம். அரச சவம். பிள்ளை பிறந்த மகிழ்வொடு சாத்தனும் மெல்ல நகரும் வரிசையில் -…

தற்காலக் காதல்

எஸ். வைதேஹி. சூன்யமாய் கிடக்குது உலகம் சிந்திக்கத் திறனேயின்றி காமம் தலைக்கேறிக் கொண்டிருக்கிறது. உடல் அனத்திக் குளிர மனம் ஒதுங்க நினைக்கிறது. பதறிப் பதறி செயல்கள் சாத்தியமற்று கிடக்கின்றன. உணர்ச்சியற்ற கட்டையாய் அழும் நான்.…

பம்பரமே – பராபரமே

ராஜி பளிச்சென்று பாயும் பெரிய பம்பரம், சொல்லேன் உன்னுடைய ரகசிய மந்திரம்! உலகத்தைச் சேர்ந்து சுற்றலாமோ ? பூரா பூலோகத்தைப் பார்க்கலாமோ ? (1) வேகமாய் வீசி விளையாடுகிறாய் ! உன் பிரகாசத்தை எனக்குக்…

போர்க்காலமான பூக்காடு

எட்வின் பிரிட்டோ ஓ மதத் தலைவர்களே! எப்போது எங்கள் நாட்டின் தலைவலியானீர்கள் ? எங்கள் விழுதுகளில் வெடிவைக்கச் உங்களுக்குச் சொல்லி தந்தது யார் ? உங்கள் மூளைக்குள் முள் முளைத்ததெப்போது ? மதம் பிடித்த…

சமத்துவம்

பவளமணி பிரகாசம் அன்றே சொன்னார் ஒளவை நன்றாய் உணர்ந்தோர் உண்மை: சாதி இரண்டொழிய வேறில்லை- இனத்தின் ஒரு பாதி ஆண்கள், இனிய மறு பாதி பெண்கள்: உலகின் ஒளியாய் இரு கண்கள். கண்கள் இரண்டு…

தூக்கம்.

பா வீரராகவன் அப்பா யின்னும் தூங்குறா அம்மா ஏனோ வைய்யலை என்னை யுமே தள்ளலை எழுப்பித் தொலை சொல்லலை நட்ட நடு ரூமுலே நன் னாவே தூங்குறா கிட்டப் போயி நின்னேனே எட்டிப் போன்னு…

நகைச்சுவை

இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும் – 2

கோமதிநடராஜன் அன்புள்ள அனைவருக்கும், லண்டனில் என் தோழிகளிடம், 'இட்லிக்கு என்ன வழி ? ',என்றுக் கேட்டதுதான் தாமதம்,அவர்களும் ஒரே இடத்துக்குப் போகப் பல வழிகளைக் காட்டும்,நம் ஊர் ஆட்டோ ஓட்டுனர்கள் போல்,ஆளாளுக்கு ஒரு செய்முறையைக்…