மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

அய்யனார்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

03.01.2010 அன்று மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.

முன்னாள் வருமான வரித்துறை அதிகாரியும் இலக்கிய ஆர்வலருமான அ.செல்வராஜ் தலைமையுரையாற்றினார் .

எழுத்தாளர் முத்துமீனாள் வரவேற்பு உரையாற்றினார் .

அய்யனாருக்கு சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களின் தொகுப்பை திரைப்பட நடிகர் நாசர் வெளியிட ஓவியர் .ட்ராட்ஸ்கி மருது பெற்றுக்கொண்டார். ( விலை ரூ. 150/- )

முதுமீனாளின் முள் நூலை நாசர் வெளியிட செட்டிநாடு பல்கலை கழகத்தின் பதிவாளர் சிதம்பரம் பெற்றுக்கொண்டார். (விலை ரூ 75 )

நேர்காணல் இதழின் நடிகர் நாசர் பற்றிய இதழை ஓவியர் .ட்ராட்ஸ்கி மருது வெளியட நாசரின் மனைவி கமீலா நாசர் பெற்றுக்கொண்டார். ( விலை ரூ. 25. )

வண்ணதாசன், பொ.வேல்சாமி , கோவை ஞானி , கவிஞர். அபி , இமையம் , பேராசிரியர் .நீலகண்டன் ஆகியோரின் நேர்காணல்களின் தொகுப்பு அலையும் நினைவுகள் -நேர்காணல்கள் -பவுத்த அய்யனார்
நூலை நாசர் வெளியிட மருத்துவர். சதீஷ் கண்ணா பெற்றுக்கொண்டார். (விலை ரூ. 100 )

வண்ணநிலவன் கவிதைகள் தொகுப்பை நாசர் வெளியிட வண்ணநிலவன் மனைவி சந்திரா பெற்றுக்கொண்டார். ( விலை ரூ. 40 )

நூல்கள் பற்றிய உரைகளை அ.மார்க்ஸ் , எம்.ஜி.சுரேஷ் , பொன். தனசேகரன் ஆகியோர் பேசினார்கள்.

நடிகர் நாசர் பற்றி சண்முகராஜா , ரோகிணி, கருனாப்ராசாத் பேசினார்கள் .

விழாவிற்கு நவீன நாடகத்துறை சார்ந்தவர்கள் பலரும் வந்திருந்தார்கள்.

பவுத்த அய்யனார் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

மிக்க அன்புடன்,

அய்யனார்





Series Navigation

அய்யனார்

அய்யனார்