தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

ஆதவன்


தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் எதிர்வரும்சனிக்கிழமை (02-10-2010) அன்று கல்பாக்கத்தில் உள்ள கடலூர் கிராமத்தில் மாலை ஐந்து மணியளவில் நடைபெற உள்ளது. முன்னதாக முகில் அவர்களின் கிராமியக் கலைக் குழு நடத்தும் பறையாட்டம்
நிகழ்வும் நடைபெற உள்ளது.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இருபதிற்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்வை கல்பாக்கத்தை சேர்ந்த கலையரசன் ஒருங்கிணைத்துக் கொடுக்கிறார்.
மேலும் விபரங்களுக்கு
9840698236, 9894422268


அன்புடன்
அருண் & குணா

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

Series Navigation

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
நாள்: சனிக்கிழமை (11-09-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) – குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரு. ஹரிஹரன் . கே. அவர்கள் பங்குபெறுகிறார்.
இவர், பிரசாத் திரைப்படக் கல்லூரியின் முதல்வர் ஆவார்.
திரைப்பட கல்லூரி படிப்பு மற்றும் குறும்படங்களில் இயக்கம் தொடர்பான தொழில்நுட்ப சந்தேகங்களுக்கும் அவர் பதிலளிப்பார்.
இரண்டாம் பகுதி: (5.00 PM – 6.30 PM ) – குறும்படங்கள் திரையிடல்
இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
குறும்படத்தின் பெயர்
இயக்குனர் பெயர்
கால அளவு

பெல் அடிச்சாச்சு
எஸ். வீ . அருண் குமார்
17 நிமிடங்கள்
செத்தாலை
பிரசன்னா சுப்பிரமணியம்
12 நிமிடங்கள்
கம்மாயில கல்லு
சுரேஷ் குமார்
5. 20 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:
மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திருமிகு. மதுமிதா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

இவர் வல்லமை தாராயோ மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்த கொல கொலையா முந்திரிகா போன்ற படங்களின் இயக்குனர் ஆவர்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
+919840698236
+919894422268


அன்புடன்
அருண் & குணா

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு)

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

தமிழ் ஸ்டுடியோ.காம்


வேலூரில் (கோட்டை மைதானம்) எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 05 வரை தொடர்ந்து ஒன்பது நாட்கள் நூலாறு என்கிற தலைப்பில் புத்தகத் திருவிழா நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து ஒன்பது நாட்களும் தமிழ் ஸ்டுடியோ சார்பில் குறும்பட ஆவணப்படங்கள் திரையிடல் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ், ஒரு சிறப்பு விருந்தினரின் தலைமையில் திரையிடல் நடைபெற்று படங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும். நிகழ்வின் அட்டவணை கீழிக் கொடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் புத்தக கண்காட்சியில் குறும்படங்களுக்கான தமிழ் ஸ்டுடியோ அரங்கின் நிகழ்வுகள்.

நாட்கள்:
28/08/2010 – சனிக்கிழமை முதல்
05/09/2010 – ஞாயிற்றுக்கிழமை வரை

நேரம்:
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

1. குறும்பட / ஆவணப்பட குறுந்தட்டுக்கள்
2. குறும்பட / ஆவணப்பட புத்தகங்கள்
திரையிடல் & கலந்துரையாடல் [மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை]

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்களுடன் கலந்துரையாடல் நடைபெறும்.
——————————————————————————————————
விபரம்:

ஆகஸ்ட் 28, 2010, சனிக்கிழமை:

பேச்சு: குறும்பட /ஆவணப்பட வரலாறு குறித்தான அறிமுக உரை
வகைப்பாடு: குறும்பட /ஆவணப்பட வரலாறு உணர்த்தும் படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: கருப்பொருள் சார்ந்த ஒரு பிரபலம்

திரையிடப்படும் படங்கள்:

1. Knock Out (Lenin)

2. மறைபொருள் (பொன்.சுதா)

3. உப்புக்காத்து (ஹரி)

——————————————————————————————————

ஆகஸ்ட் 29, 2010, ஞாயிற்றுக்கிழமை:

பேச்சு: குறும்படங்களில் சிறுகதைகள் குறித்து உரை
வகைப்பாடு: சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர். அழகிய பெரியவன்

திரையிடப்படும் படங்கள்:

1. நடந்த கதை (பொன்.சுதா)

2. திற (பிரின்ஸ்)

3. செவ்லி (அறிவழகன்)

4. கர்ணமோட்சம் (முரளி மனோகர்)

5. கழுவேற்றம் (ராஜா)

——————————————————————————————————
ஆகஸ்ட் 30, 2010, திங்கள்கிழமை:

பேச்சு: பொது குறும்படங்கள் குறித்து உரை
வகைப்பாடு: பொது குறும்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: சி. ஜே. ராஜ்குமார்

திரையிடப்படும் படங்கள்:

1. கோத்தி (முத்துக்குமார்)

2. எரிபொருள் (முத்துக்குமார்)

3. குண்டன் (முரளி)

4. அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில் (ஸ்ரீராம்)

5. விளையாட மறந்ததென்ன? (ஜெய் வினோ)

——————————————————————————————————

ஆகஸ்ட் 31, 2010, செவ்வாக்கிழமை:

பேச்சு: ஆவணப்படங்கள் குறித்து உரை
வகைப்பாடு: ஆவணப்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: ஆர். ஆர். சீனிவாசன்

திரையிடப்படும் படங்கள்:

1. என் பெயர் பாலாறு (ஆர். ஆர். சீனிவாசன்)

2. நீருண்டு நிலமுண்டு (கைலாசம் பாலச்சந்தர்)

——————————————————————————————————

செப்டம்பர் 01, 2010, புதன்கிழமை:

பேச்சு: மற்றமொழி குறும்படங்கள் குறித்து உரை
வகைப்பாடு: மற்றமொழி தழுவி எடுக்கப்பட்ட படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் வண்ணநிலவன்

திரையிடப்படும் படங்கள்:

1. The Red Balloon

2. (1997) BARA PRATA LITE — Lukas Moodysson [SWE]

3. Christopher Nolan — Doodlebug UK=1997-3min-16mm

——————————————————————————————————
செப்டம்பர் 02, 2010, வியாழக்கிழமை:

பேச்சு: வேலூரும் அதன் வரலாற்று சிறப்பும்
வகைப்பாடு: வேலூர் ஆர்வலர்கள் எடுத்த குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: பொன்.சுதா

——————————————————————————————————
செப்டம்பர் 03, 2010, வெள்ளிகிழமை:

பேச்சு: எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் குறித்து
வகைப்பாடு: எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள்
சிறப்பு விருந்தினர்: சாரோன் செந்தில்

திரையிடப்படும் படங்கள்:

1. ஜெயகாந்தன்

2. கி.ரா

3. இந்திரா பார்த்தசாரதி

——————————————————————————————————
செப்டம்பர் 04, 2010, சனிக்கிழமை:

பேச்சு: சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் குறித்து உரை
வகைப்பாடு: : சமூக விழிப்புணர்வு தழுவி எடுக்கப்பட்ட படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: தமிழ்மகன்

திரையிடப்படும் படங்கள்:

1. வாக்குமூலம்

2. செத்தாழை

3. பெல் அடிச்சாச்சு

4. மக்கப் மங்கம்மா

——————————————————————————————————

செப்டம்பர் 05, 2010, ஞாயிற்றுக்கிழமை:

சிறப்பு விருந்தினர்: இயக்குனர் அகத்தியன்.
————————————————————————————-

வெற்றி பெற்ற குறும்படங்கள் திரையிடல். மற்றும் பரிசளிப்பு விழா. திரையிடப்பட்ட அனைத்துக் குறும்படங்களுக்கும் நினைவுப் பரிசு. முதல் ஐந்து இடங்களைப் பிடித்த படங்களுக்கு ரொக்கப் பரிசு.

1. ஒவ்வொரு நாளும் காலை 11.30 மணியளவில் அகிரா குரசோவாவின் நூற்றாண்டை கொண்டாடும் பொருட்டு அவரது திரைப்படங்கள் திரையிடப்படும்.

2. ஒவ்வொரு நாளும் மாலை 2 மணிமுதல் 4 மணி வரை குறும்படம் சார்ந்த நேரடிப் பயிற்சிகள் தேர்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்கப்படும்.

3. திங்கள், செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் ஒளிப்பதிவு பற்றிய நேரடி, செய்முறை பயிற்சி ஆர்வலர்களுக்கு வழங்கப்படும்.

4. வியாழன் அன்று நடிப்பு பற்றிய பயிற்சி வழங்கப்படும்.

வெள்ளி அன்று திரைக்கதை அமைப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.

5. சனிக்கிழமை ஒரு குறும்படத்தை நேரடியாக எப்படி எடுப்பது என்பது பற்றிய பயிற்சி எடுக்கப்பட்டு ஆர்வலர் ஒருவரை குறும்படம் எடுக்க வைத்து விரிவான கலந்துரையாடல் நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு
9840698236, 9894422268


அன்புடன்
அருண் & குணா

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

Series Navigation

தமிழ் ஸ்டுடியோ.காம்

தமிழ் ஸ்டுடியோ.காம்

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue


 

நாள்: சனிக்கிழமை (13-02-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 PM-4 PM) – இலக்கியம்

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் நாடகவியலாளர் திரு. வெளி ரெங்கராஜன் அவர்கள் கலந்துக் கொள்கிறார். தமிழ் நாடகத் துறை வளர்ச்சி மற்றும், அதன் வரலாறு குறித்து பேசவிருக்கிறார்.

இரண்டாம் பகுதி: (4.30 PM – 5.30 PM) – குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், திரு. பண்டி சரோஜ்குமார் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். இயக்கம் குறித்தான நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் இயக்கம் மற்றும் இதத் தொழில்நுட்பத் துறை சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

பண்டி சரோஜ்குமார் அவர்கள் சமீபத்தில், கிஷோர் நடித்து வெளியான போர்க்களம் திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM – 6.30 PM ) – குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு

சுவடுகள் ரமேஷ் 08 நிமிடங்கள்
நடந்த கதை பொன்.சுதா
17 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. விஜய் மில்டன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

விஜய் மில்டன் அவர்கள் "சாமுராய்", "காதல்", "காதலில் விழுந்தேன்" ஆகியத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆவார். மேலும், "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.

இந்த மாதம் முதல் மூன்று தமிழ்க் குறும்படங்களுடன் ஒரு சர்வதேச குறும்படமும் திரையிடப்படும். எப்படி சர்வதேச அளவில் குறும்படங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்பதை, அனைவரும் குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்து வரும் ஆர்வலர்கள் தெரிந்துக்கொள்ள இந்தக் குறும்படங்கள் உதவி புரியும். அந்த வகையில் இந்த மாதம் திரையிடப்படும் சர்வதேச குறும்படம், Adam Davidson இயக்கிய "The Lunch Date". இந்தக் குறும்படம் 1991 ஆம் வருடத்தின் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதினை வென்ற குறும்படமாகும்.

மேலும் இந்த மாதம் முதல் அரங்கில் குறும்பட விற்பனையும் நடைபெறும். அனைவரும் குறும்பட இயக்குனர்களை / தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்த குறும்படங்களை விலைக்கு வாங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

அருண் & குணா


நாள்: சனிக்கிழமை (11-07-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

10 AM – 2 PM – உலகப் படம் திரையிடல்

இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் ‘லு சுவான்’ இயக்கிய “மௌன்டைன் பெடரோல் (Mountain Patrol)” திரைப்படம் திரையிடப்படுகிறது.

இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

3 PM – 7 PM – குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) – இலக்கியமும் மக்கள் வாழ்க்கையும்

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் புகழ் பெற்ற எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் “இலக்கியமும் மக்கள் வாழ்க்கையும்” என்கிறத் தலைப்பில் இலக்கியம் குறித்தான தனது விரிவான பார்வையை பதிவு செய்வார். இதில் மக்கள் நல் வாழ்வு வாழ இலக்கியம் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் பதிவு செய்கிறார்.

இவரைப் பற்றி:

தமிழ் எழுத்துலகில் புகழ் பெற்ற எழுத்தாளரான திரு. பிரபஞ்சன் இதுவரை ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில: “வானம் வசப்படும், மானுடம் வெல்லும், எனக்குள் இருப்பவள், ஜீவநதி, பொன்முடிப்பு, நேற்று மனிதர்கள், இன்பக்கேணி, காகித மனிதர்கள், வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்”.

சிறந்த வலைப்பதிவர் விருது:

இந்த மாதம் சிறந்த வலைப்பதிவர் விருது பெறுபவர்: ?

நிச்சயம் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவர்தான். அவர் நீங்களாகவும் இருக்கலாம். யார் என்று தெரிந்துக் கொள்ள, ஆர்வம் இருப்பவர்கள் நிகழ்ச்சியை நேரில் வந்து, பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

இரண்டாம் பகுதி: (4.30 PM – 5.30 PM) – குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. லெனின்பங்குபெறுகிறார். குறும்படங்களில் படத்தொகுப்பு, நடிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். படத்தொகுப்பு நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் படத்தொகுப்பு சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

இவரைப் பற்றி:

தமிழில் புகழ்பெற்ற படத்தொகுப்பாளரான இவர் “ஊருக்கு நூறு பேர்” என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இலக்கியவாதியான ஜெயகாந்தனின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். இவரும், வி.டி. விஜயனும் சேர்ந்து பணிபுரிந்த படங்களில் பெரும்பான்மையான படங்கள் வெற்றிப் படங்கள்தான். தமிழில் பல முக்கியப் படங்களுக்கு படத்தொகுப்பு செய்த திரு. லெனின் அவர்கள்தான் தமிழ் குறும்பட உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM – 6.30 PM ) – குறும்படங்கள் திரையிடல்

திரையிடப்படும் குறும்படங்கள்:

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு

நிலமெல்லாம் இரத்தம மனோகர் 24 நிமிடங்கள்
விபத்து சங்கர் நாராயணன் 15 நிமி. / 30 நொடிகள்
குண்டன் முரளி 13 நிமி. / 10 நொடிகள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரு. அனந்த நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

இவரைப் பற்றி:

இவர் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அண்மையில் வெளிவந்திருக்கும்”வால்மீகி” திரைப்படத்தின் இயக்குனர்.

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.

மேலும் இந்த வாரம் முதல் இரண்டுப் புதிய பகுதிகள் குறும்பட வட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

குறும்படங்களுக்கான உதவி:

ஒவ்வொரு மாதமும் ஒரு சிறந்த கதையை தேர்ந்தெடுத்து அதற்கு ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றை இலவசமாக தமிழ் ஸ்டுடியோ.காம் செய்து தரும் என்கிற அறிவிப்பு ஏற்கனவே தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முறையான அறிவிப்பு மற்றும் இந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை ஆகிய அறிவிப்புகளும் இடம் பெற உள்ளன.

மடல் போட்டி:

மடல் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தால் அறிவிக்கப்பட்ட மடல் போட்டியில் பரிசு வென்ற மடல் மற்றும் போட்டியாளர் ஆகியோரும் அறிவிக்கப்படுவர்.

6.30 PM – 7 PM – வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

இந்த மாதம் சந்தாத் தொகை முப்பது ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268


அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268

Series Navigation

அருண் & குணா

அருண் & குணா

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

தமிழ் ஸ்டுடியோ.காம்


தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.

நாள்: சனிக்கிழமை (13-06-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை

10 AM – 2 PM – உலகப் படம் திரையிடல்

இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் ஐசன்ஸ்டீன் இயக்கத்தில் வெளிவந்த “தி பாட்டில்ஷிப் ஆப் பொடேம்கின்” திரைப்படமும், டெர்ரி க்ரோர்ஜ் இயக்கத்தில் வெளிவந்த “ஹோட்டல் ர்வாண்டா” திரைப்படமும் திரையிடப்படுகிறது.

இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

3 PM – 7 PM – குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) – கலைகளை ஆவணமாக்குவோம்.

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் வெ. நீலகண்டன் அவர்கள் “கலைகளை ஆவணமாக்குவோம்” என்கிறத் தலைப்பில் தனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்.

இவரைப் பற்றி:

இவரது கவிதைகள் “நாங்களும் சில பூக்களும்” என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. ‘கூடாரம்’ என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ‘ மரணகானா விஜியின்’ சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து “சாக்கடை சரித்திரம்” என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

சிறந்த வலைப்பதிவர் விருது:

இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. நர்சிம் அவர்கள். இவரது வலைப்பூ. http://www.narsim.in/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இரண்டாம் பகுதி: (4.30 PM – 5.30 PM) – குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு. சக்தி சரவணன் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் குறித்து மிக நுணுக்கமான பல தகவல்களை வாசகர்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இவர் பணியாற்றியுள்ள படங்கள்:

திரு. சக்தி சரவணன் அவர்கள் “பூவே உனக்காக”, “சூரிய வம்சம்”, “ஆஹா” “திருப்பாச்சி”, உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், சமீபத்தில் வெளிவந்த “சிலம்பாட்டம்” படத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM – 6.30 PM ) – குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடல் பகுதியில் செல்வி. திவ்யா அவர்கள் இயக்கிய “இருண்டவீடு”, திரு. சா.சு. அவர்கள் இயக்கிய “வேண்டுதல்” திரு. எ. என். சரவணன் அவர்கள் இயக்கிய “அறியாமை” ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இம்மாதம் புகழ்பெற்ற திரைப்பட கதாசிரியர் திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆச்லோசனைகளும் வழங்க உள்ளார்.

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.

6.30 PM – 7 PM – வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268


அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268

Series Navigation

தமிழ் ஸ்டுடியோ.காம்

தமிழ் ஸ்டுடியோ.காம்

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

தமிழ் ஸ்டுடியோ.காம்


http://thamizhstudio.com/kurumbada_vattam_jan.htm

கடந்த சனிக்கிழமை (31-01-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கு இடையிலும் திரளான ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு வட்டத்தை சிறப்பித்தனர்.

மூன்றாவது குறும்பட வட்டம் போலவே இம்முறையும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வட்டம் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக மூன்றாம் பிரிவின் சிறப்பு அழைப்பாளர் படத்தொகுப்பாளர் திரு. சுரேஷ் அர்ஸ் அவர்கள் வர முடியாதக் காரணத்தால்
மூன்றாம் பிரிவு நிகழ்ச்சி நடைபெறாமல் போனது. மற்ற இரண்டு பிரிவுகளும் இனிதே நடைபெற்றது. முதலில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய விவாதம் நடைபெற்றது. பின்னர் இலக்கிய பிரிவில் திரு. பாரதி புத்திரன் அவர்கள் ஓர் அருமையான விவாத மேடை அமைத்துக் கொடுத்தார்.

For more Details Please visit: http://thamizhstudio.com/kurumbada_vattam_jan.htm

Thanks,
thamizhstudio.com

Series Navigation

தமிழ் ஸ்டுடியோ.காம்

தமிழ் ஸ்டுடியோ.காம்