ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி … கட்டுரை பற்றி

This entry is part of 28 in the series 20100829_Issue

ஜடாயு


அன்புள்ள ஆசிரியருக்கு,

சில வாரங்களாக வரும் இந்த தொடர் கட்டுரையின் பாகங்களைப் படித்தேன்..

மூலக் கட்டுரையை எழுதிய ஸ்டீஃபன் நாப் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) பிரசாரகர். மேற்கத்தியராக இருந்தாலும் சம்பிரதாயமான இந்து மதத்தை தான் சார்ந்த இஸ்கான் பக்தி மார்க்கம் மூலம் புரிந்து கொண்டவர். தனது புரிதலை நூல்கள் மற்றும் இணையதளம் மூலம் தொடர்ந்து எடுத்துரைக்கவும் செய்பவர்.

அவரது நீண்ட கட்டுரையை சிறப்பாக சேஷாத்ரி ராஜகோபாலன் அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார்.. பல இடங்களில் வாக்கியங்கள் நீளநீளமாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக படிப்பதற்கு எளியதாக உள்ளது. அடைப்புக் குறிக்குள் ராஜகோபாலன் தரும் விரிவான விளக்கங்கள் மூலக்கட்டுரையை விடவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. இதிகாச புராணங்களில் இருந்து அவர் தரும் உதாரணங்களும் அருமை.

அன்புடன்,
ஜடாயு

Series Navigation