சூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விருதுகள்

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

சுப்ரபாரதிமணியன்


தமிழ்த் திரைப்பட உலகம் சூரியகுழுமத்துள் முடங்கிப்போய்விட்டது. முன்பு திரைப்பட விநியோகஸ்தில் ஆரம்பித்தது. பின் திரைப்பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டு இன்று எந்த முன்னணி திரைப்பட நடிகரும் அவர்களின் தயாரிப்பில் நடிப்பதற்கு உட்படாமல் இருக்கமுடியாது. இல்லையென்றால் வருமானவரி தொல்லை, ரெய்டு என்று ஆரம்பித்து தொல்லை தொடரும். எடுத்த படத்தை அவர்களிடம் போட்டுக் காட்டி விட்டு அவர்கள் சொல்லும் பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவது உத்தமம். தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் இவர்கள் வசம் என்பதால் இடியாப்பசிக்கல். இவர்களின் கைங்கரியத்தால் தியேட்டர் கிடைக்காமல் 60 படங்கள் காத்துக் கிடைப்பதாய் ஆனந்தவிகடன் தகவல் தந்திருக்கிறது. திரைப்படங்கள் மூலம் ஆட்சிக்கு வந்தகுழுமத்தால் திரைப்படத்றையினருக்குத் தலைவலி. திரைப்படதுறை முடங்கிப் போகும் சூழல்.பத்திரிக்கைத்துறையில்எதிர் கருத்தாளர்களுக்கு இருக்கும் மிரட்டலும், தாக்குதலும் அபாயகரமானவையாக மாறிஉள்ளன. சூர்யா, கார்த்திக் எந்தப்படங்களில் நடிப்பது என்பதை அவர்களோ, தந்தை சிவகுமாரோ தீர்மானிக்க முடியாது. சிவகுமார் சொற்பொழிவுகளில், பேச்சு சிடி தயாரிப்பதில் அக்கறை கொண்டு பொழுதைப் போக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
சிவகுமாரின் இது “ ராஜபாட்டை அல்ல” ஆங்கில வடிவம் பெற்றுள்ளது. ஆனால் ஆங்கிலத்திலும் அதே தலைப்பில்.. ஆங்கில வாசகர்களை மனதில் கொண்டு தலைப்பு இடப்படவில்லை என்று தெரிகிறது.இப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகள் யாருக்காக என்ற கேள்வி எழுகிறது. தலைப்பு ஆங்கிலத்தில். உள்ளே தமிழ் அறிஞர்களின் கருத்துக்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கின்றன. அந்த தமிழ் அறிஞர்கள் பற்றி ஆங்கில வாசகன் அறிந்திருக்காத போது அவற்றால் என்ன பயன். சோ, தமிழருவி மணியன், நக்கீரன் கோபால் ஆகியோரின் கருத்துக்கள் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் போது அவர்களைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் இல்லை. சிவகுமார் பற்றிய அறிமுகக்குறிப்புகள் கூட இல்லை. தமிழில் இதைப் படித்தவன் எதற்கு மறுபடியும் ஆங்கிலத்தில் படிக்கப்போகிறான்.ஆங்கிலவாசகர்களை மனதில் கொண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிப்பட வேண்டும். அல்லயன்ஸ் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. திரைப்படத்துறையினர் எழுதிய புத்தகங்கள் என்றால் அவற்றைல் 200, 500 பிரதிகள் பெற்றுக்கொள்ள பணக்காரர்கள், அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.ஆனால் இலக்கியப் படைப்புகள் மொழிபெயர்ப்பில் வரும்போது அவர்களைப் பாராட்ட நல்லி போன்று சிலர்தான் இருக்கிறார்கள். இவ்வாண்டு 1.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை மொழிபெயர்பாளர்களுக்கு நல்லி பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் வழ்ங்கினார்.
பலபரிசுகளை வாங்கிக் குவித்திருக்கும் சிற்பி பாலசுப்ரமணியனின் மொழிபெயர்ப்பில் மாத்ருபூமி வீரேந்திர குமாரின் பயணக்கதை
” வெள்ளிப்பனி மீதில்” குறிப்பிட்த்தக்கதாகும். தமிழில் இருந்து மலையாளத்திற்கு தோப்பில் முகமது மீரானின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கும் சாபி செருமாவிலாயி 15 ஆண்டுகள் தேனீர் கடையில் வேலை பார்த்தவர். இப்போது கேரளத்தில் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார்.. இவரின் நூலும் பரிசு பெற்றது.
( எனது சுடுமணல் நாவலை இவர் மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். )
ஆகாசம்பட்டு சேசாசலம், கீதா சுப்ரமணியன், அசோகன் முத்துசாமி, ஆர் பி சாரதி, , மா ராமலிங்கம், தருமி , சுப்ரபாலன், பாலாஜி ஆகியோர் பரிசு பெற்ற மற்றவர்கள். கொஞ்சம் ஆங்கிலப்புலமை, வெளிநாட்டில் இருந்தது ஆகிய தகுதிகளே பலருக்கு ஆங்கிலத்திலிருந்து நூல்களை மொழிபெயர்க்கும் தகுதியையும், பரிசையும் கொடுத்திருப்பதை சமீபத்தில் வந்திருக்கும் சில ஆங்கில மொழி ஆக்கங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. சம்பந்தப்பட்ட நூல்களின் மூல களமும், கலாச்சார விசயங்களும் அக்கறை கொள்ளப்படாமல் இயந்திர ரீதியான மொழிபெயர்ப்புகளாய் அவை அமைந்திருக்கின்றன.

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் ( 2 முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர், சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர்) கடந்த 15 ஆண்டுகளாய் கவிஞர்களுக்கு பரிசு அளித்து வருகிறார். இவ்வாண்டு சிற்பி இலக்கிய விருதில் 1 லட்சம் பரிசுத் தொகையை பகிர்ந்து கொண்டவர்கள்: கவிஞர்கள் கலாப்ரியா, இளம்பிறை, மரபின் மைந்தன் முத்தையா , சக்திஜோதி, தங்கம் மூர்த்தி, அழகிய பெரியவன் ஆகியோர், கவிஞர்களுக்கு அங்கீகாரம், பரிசுகள், பாராட்டுகள் சுலபமாகக் கிடைத்து விடுகின்றன. உரைநடையாளர்கள், சிறுகதையாளர்கள், நாவலாசிரியர்களுக்கு அவ்வகை அங்கீகாரம் சுலபமாக கிடைப்பதில்லை. துரதிஸ்டாசாலிகள் அவர்கள்.

சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்