புதிய மாதவிக்கு

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

நரேன்


“திராவிட பிரகாசிகை” 1899 ல் வெளி வந்ததே என்று தெளிவு படுத்தியதற்கு நன்றி.

மேலும் நீங்கள் குறிப்பிட்ட 1.3 – 1 .7 படித்ததில் சில கேள்விகள்

1 “நாம தீப நிகண்டு” மற்றும் “சேந்தன் திவாகரம்” பற்றி தேடியதில் அவை இரண்டும் அகராதிகளாக தெரிகிறது. அதில் “திராவிடம்” என்பது எப்படி பயன்படுத்த பட்டு இருக்கின்றது என்பதை நீங்கள் விளக்கினால் நல்லது. இப்பொழுது oxford ஆங்கில அகராதியில் பல வேற்று மொழி சொற்கள் ஒவ்வொரு வருடமும் சேர்க்க படுகின்றது, உதாரணம் “மசாலா” . அதை வைத்து இரு நூற்றாண்டுகள் கழித்து மசாலா ஒரு சுத்தமான ஆங்கில வார்த்தை என்று சொன்னால் அது சரியான கூற்றாக இருக்காது. சரியா ?.

“காந்தத்து உபதேசக் காண்டம்” மற்றும் இதர நூல்கள் வெளியானதாக கருதப்பட்ட வருடம் அல்லது நூற்றாண்டு மற்றும் “திராவிடம்” என்ற சொல்லை தமிழில் எப்படி அந்த நூல்கள் பயன் படுத்தின என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

நன்றி.

நரேன்

Series Navigation

நரேன்

நரேன்