சென்ற வாரம் திராவிடம் பற்றிய புதிய மாதவியின் கடிதத்தை படித்ததில் சில கேள்விகள்

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

நரேன்


சென்ற வாரம் திராவிடம் பற்றிய புதிய மாதவியின் கடிதத்தை படித்ததில் சில கேள்விகள் .

1 . திராவிடம் என்ற சொல் சமஸ்க்ரிதத்தில், தெலுங்கில் உபயோகத்தில் இருந்தததை மறுப்பதிற்கில்லை.
தமிழில் 1856-க்கு முன் உபயோகத்தில் இருந்ததா?.

2 . அப்படி இல்லை என்றால் ராபர்ட் கேல்டுவல் அவருடைய சுயலாபத்திற்காக அச்சொல்லை உபயோகப் படுத்தி இருக்கலாம் என்ற கூற்றில் என்ன தவறு?.
கிறித்துவ பாதிரிமார்கள் ருவாண்டாவில் ஹுடு-டுட்சி இன மக்களை இப்படி பாகு படுத்தியதாக படித்த ஞாபகம்..

மேலும், 1844ல் யாழ்ப்பாணத்து அறிஞர் சிவத்திரு சபாபதி நாவலர் எழுதிய தமிழ் மொழி வரலாற்றின் பெயர் :” திராவிட பிரகாசிகை என்ற தமிழ்வரலாறு”.

3. சபாபதி நாவலர் பற்றி எழுதியதற்கு நன்றி. அவரை பற்றி தேடியதில் கிடைத்தது

அவர் பிறந்த வருடமே 1844 அல்லது 1846 என்று சொல்கிறார்கள். அப்படி இருக்க அவர் எப்படி ‘திராவிட பிரகாசிகை’ 1844 -ம் வருடம் எழுதி இருக்க முடியும்.
‘திராவிட பிரகாசிகை’ பதிப்பு பெற்ற வருடம் 1899 என்கிறது இந்த சுட்டி .

http://kanaga_sritharan.tripod.com/sabapathynavalar.htm
http://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft5199n9v7;chunk.id=d0e1382;doc.view=print

Series Navigation

நரேன்

நரேன்