மலர்மன்னன் கடிதத்துக்கு பதில்

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

கி.ராகவன்


ஐயா!

போன வாரம் திண்ணையில் திரு மலர்மன்னன் அவர்கள் எனக்கு ஒரு மடல் இட்டிருந்தார்கள். அதன் நிமித்தம் என்பதில் இங்கே தரப்படுகிறது:

”வடகிழக்கு மாநிலங்களில் எல்லாம் துப்பாக்கி முனையில் வனவாசிகள் கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்யப் படுகிறார்கள். ஒரு நிர்ப்பந்தம் காரணமாகவே வட கிழக்கு மாநில வனவாசிகள் கிறிஸ்தவர்களாகி வருகிறார்கள். பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் நிராதரவான ஹிந்துக் கள் எப்படி நிர்பந்தம் காரணமாக முகமதியராகிறார்களோ அப்படித்தான் வட கிழக்கு மாநில வனவாசிகளும் கிறிஸ் தவர்களாகி வருகிறார்கள். ” – மலர்மன்னன்.
‘செய்ய்படுகிறார்கள்’, வருகிறார்கள்” என்றெல்லாம் இன்று கிடையாது. அங்கு அனைவரும் கிருத்துவர்களாகி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. இனி கிருத்துவ மிசுனோரிகள் அங்கு சென்று மதமாற்றம் பண்ணவேண்டும் என்று அவசியம் இல்லை. வடகிழக்கு மானிலங்களான மிசோரம், நாகலாந்து, இங்கு அனைவரும் கிருத்துவரே. இந்துகள் என்போர் வங்காளிகள் போன்று வெளிமானிலத்திலிருந்து வந்து பிழைப்போரே. இந்துத்வாவினர் அங்கு சென்று அவர்களை இந்துக்களாக்கினால் அதுதான் புதுச்செய்தியாகும். அதாவது, வடகிழக்கு மானிலங்களைப்பொறுத்தவரை கிருத்துவமதமாற்றம் மிகப்பழைய கதை. இந்துக்கள் ‘இந்தியர்கள்’ எனப்பார்க்கப்படுகின்றனர். அன்னியர்கள்! அசாமில், சுதந்திரதினம், குடியரசுதினமெல்லாம் கொண்டாடப்படுவதில்லை. முழுக்கடையடைப்புதான். மணிப்பூரில் ’இந்திபேசிக்கொண்டு’ இரவில் தெருவில் நடமாடமுடியாது. கொல்லப்படுவார்கள்.
” இயற்கை வழிபாடும் முன்னோர் வழிபாடும் ஹிந்து சமயத் திற்கு உட்பட்டவையே. நமது புராண, இதிகாசங்களிலும் வன்வாசிகள் பிரித்து வைக்கப்படவில்லை. எனவே அவர்களும் ஹிந்துக்களேயாவ்ர்… நீங்கள் நினைப்பதுபோல் ஹிந்துஸ்தானத்தில் உள்ள வனவாசிகள் அனைவருமே கிறிஸ்தவ்ர்களாகி விட வில்லை. தமது பாரம்பரியமுறைப்படியே இயற்கையையும் முன்னோரையும் வழிபட்டு வரும் வனவாசிகள் பெரும் பாலானவர்களாகவே உள்ளனர். ” – மலர்மன்னன்.
மேலே நான் எழுதியதைப்பார்த்தால், வனவாசிகள் இந்துக்கள், ஹிந்துஸ்தானம் என்றெல்லாம் வடகிழக்கில் போய்ச்சொல்ல முடியாது. ”நீங்கள் இயற்கையையும் முன்னோரையும் வணங்கினீர்கள்; எனவே நீங்கள் இந்துக்கள்!” எனச்சொல்லிப்பாருங்களேன். இயற்கையையும், முன்னோரையும் உலகமெங்குமுள்ள வனவாசிகள் வணங்கினார்கள். வணங்குகிறார்கள். அவர்களெல்லாம் இந்துக்களா? இது பொதுவான செயல். ‘இந்து முத்திரை’ செல்லாது. கண்டிப்பாக வடகிழக்கில் இது செல்லுபடியாகாது8.
”வனவாசிகள் பூரண மத சுதந்திரத்துடன் தமது பாரம் பரியத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், பொருளாதார நிர்பந்தம் காரணமாகக் கிறிஸ்தவ மிஷநரிகளின் வலையில் விழாமல் அவர்களைக் காக்கவும் ஹிந்துஸ்தானம் முழுவதும் வனவாசிகள் பகுதிகளில் வனவாசி கல்யாண் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. ஒருகாலத்தில் நான் அதனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தேன் – மலர்மன்னன்.
இந்துமத்ம் தோன்றுவதற்கு முன்பே வனவாசிகள் வாழ்ந்து வருகிறார்கள். தோன்றிய பிறகும் இந்து மதம் அங்கு செல்லவில்லை . இப்போதுதான் அவர்கள் இருக்கிறார்கள் என இந்துத்வாவினருக்கும் தெரியவந்து, அவர்கள் நலனின் அக்கறை.
வனவாசி கல்யாண் என்பது ஒரு எதிர்வினை. கிருத்துவமிசுனோரிகள் அங்கு செல்லாதிருந்தால், இந்துத்வாவினரும், கொல்லப்பட்ட சாமியாரும் வனவாசிகளைப்பற்றி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது ‘கண்ணீர்’ வடிக்கிறார்களாம்! இப்போது நிக்கோபர் வனவாசிகளிடம் கிருத்துமுசுனோரிகள் ’ஊழியம்’ செய்கிறார்கள். அம்மக்களும் கிருத்துவர்களாகி ‘வருகிறார்கள்’. அவரகள் அனைவரும் ஆன பின்னரும், மலர்மன்னன் அங்கே போய் ‘வனவாசி கல்யாண்’ என்ற அமைப்பைத் தொடங்கலாமே?
”சிதம்பரம் கோயிலில் தமிழ்ப் பார்ப்பனர்கள் எவரும் தமிழை எதிர்க்க வில்லை. தில்லையம்பலம் என்றென்றும் தமிழுக்கு உரிய இடம் அளித்தே வந்துள்ளது. முழு விவரமும் தெரிந்து கொண்டபின் எதிர்வினை செய்வதே முறையாகும். ” – மலர்மன்னன்.
அப்படியென்றால் சரி. சைவசமயக்குரவர்கள் பிழைத்துப்போகட்டும்…! நல்ல விசயம்தானே? தமிழர்கள் எல்லாரும் சிதம்பரம் கோயில் பார்ப்ப்னருக்கு நன்றிக்கடன் பட்டவர்களாவோம் எம்மொழி மாந்தருக்கு மரியாதை தந்தமைக்காக !
”பெண்களுங்கூட அர்ச்சகராகும் நிலை ஏற்கனவே பல் இடங்களில் உள்ளது. அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிப்ப தில்லை. ஆகம விதிப்படி நடைபெறும் கோயில்களில் ஆகமம் விதித்துள்ளவாறுதான் அர்ச்சகர்கள் இருக்க முடியும். எல்லா பிராமணர்களும்கூட அர்ச்சகர் ஆகும் உரிமை கோர முடியாது. ” – மலர்மன்னன்.
இந்து மத்த்தில் பெண்கள் தங்களையும் அர்ச்சகர்களாக்கவேண்டுமென கேட்கவில்லை. தமிழர்களின் தொல் பழந்தெய்வக்கோயில்களில் நாட்டுப்புறங்களில் ‘பெண் அர்ச்சகர்கள்’ உண்டு என்றிருந்தாலும்.
தலித்துகள் அர்ச்சர்களாக முடியுமா? ஆகலாம் என்ற அரசாணக்கு எதிராக நீத்மன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பவர்கள் யார்?
எல்லாப்பிராமணர்களும் அர்ச்சகர்கள் ஆகமுடியாது என்று எனக்கும் தெரியும். ஆனால் அர்ச்சகர்கள் ஆவது பிராமணர்கள் மட்டுமே. ”குண்டாக இருக்கும் எல்லாருக்கும் டயாபடீஸ் வராது. ஆனால் டயாபடீஸ் வந்த எல்லாருமே குண்டர்கள்” என்று சொல்வார்கள், அதைப்போல, அர்ச்சகர்கள் ஆக எல்லாப்பிராமணர்களுக்கும் முடியாது. ஆனால் அர்ச்சகர்கள் ஆன, ஆகமுடிவது, பிராமணர்களுக்கு மட்டுமே.
”பிராமணர் மட்டுமல்ல, வைசியர், பொற்கொல்லர், கல்தச்சர் முதலானோரும் தம் பிள்ளைகளுக்கு உபநயனம் செய்விக் கின்றனர். வன்னியர்களும் இதனைக் கடைப்பிடித்து வந்தனர். நியாயப்படி பெண்கள் உள்ளிட்ட அனவருமே பூணூல் அணியலாம். பூணூல் அணிவதன் நோக்கம பிறரிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதல்ல. வாழ்வியலில் சுயக்கட்டுப்பாடுகளை மீறாதிருப்பதற்கான வேலி போன்றது அது. இன்று இது உணரப்படவில்லை என்பத ற்காக அதன் மீது குற்றம் காண் பது முறையல்ல.” – மலர்மன்னன்.
நல்ல கதை! வைசியர், பொற்கொல்லர், கலதச்சர்! ஏன் மலர்மன்னன் தலித்துகளை விட்டுவிட்டார். அவர்களிலும் பூனூல் போடுவார்கள். ஆனால், இவர்கள் செய்வது உப்நயனம் கிடையாது. இவர்கள் யாரும் ‘பிராமணர்’ ஆக பூனூல் போடுவதில்லை. அழைப்பிதழ் அடித்து, ஐயரை வைத்து ஹோமம் வளர்த்தச் செய்வதில்லை. தமிழ்ப்பார்ப்ப்னர்கள் இதை தங்களுக்கென வைத்த சடங்காகவே செய்து வருகிறார்கள். முதலில், இந்த தச்சர் etc. இவர்களுக்க எல்லாம் ’உபநயனம்’ என்ற வடசொல்லுக்குப் பொருளாவது தெரியுமா? இச்சொல்லுக்கு பொருள் தெரியா பார்ப்ப்னர் உண்டா? வாழ்வியல் சுயகட்டுப்பாடுகளை மீறாதிருக்க என்று சடங்கு அவர்கள் செய்து வாழ்கிறார்கள் என்றா பூனூல் போட்ட எல்லாரும் புனிதர்களா? அது இன்று உணரப்படவில்லயென்றால், அந்த சடங்கு ஏன்? ஏன் பாரதியார் பூனூலைத் தூக்கி வீசிப்போட்டார்?
பூனுல் ஒரு மதச்சடங்கு. அது தமிழ்பார்ப்ப்னர் மட்டுமே, எப்படி செய்ய்வேண்டுமோ அப்படிச்செய்து வருகிறார்கள். இது ஒரு சுயக்கட்டுப்பாடு வேலி என்றெல்லாம் இன்று அவர்கள் பார்ப்பதில்லை.

பின்னர் ஏன்? தாங்கள் ‘பிராமணர்கள்’ என்ற ஜாதியைச்சேர்ந்தவர்கள் என்ற அடையாளத்தைப் பெறுவதற்காகவே. பாரதியாருக்கு அந்த அடையாளம் தேவையில்லை. ஊரறிந்த பார்ப்பானுக்கு பூனுல் எதற்கு என்பது ஒரு தொன்மொழி.

இவண்

கி.ராகவன்

Series Navigation

கி.ராகவன்

கி.ராகவன்