உயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள்

This entry is part of 29 in the series 20091225_Issue

மனுஷ்ய புத்திரன்


மனுஷ்ய புத்திரன்

உயிர்மை

சென்னை

வணக்கம்

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 25. 12. 2009 வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை மூத்த, இளம் எழுத்தாளர்களின் 12 நூல்களை வெளிட இருக்கிறோம். அதில் எனது புதிய கவிதைத் தொகுதி ‘ அதீதத்தின் ருசி’ மற்றும் உயிர்மை தலையங்கங்களின் தொகுப்பு ‘என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்’ ஆகியவையும் அடங்கும்.

அதற்கு அடுத்த நாள் 26. 12. 2009 மாலை ரவிக்குமாரின் நான்கு புத்தகங்களையும் உயிர்மை வெளியிடுகிறது.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் பங்கு பெறுகின்றனர்

இரண்டு நிகழ்ச்சிகளும் ’ தேவநேய பாவாணர் அரங்கில் (735, அண்ணாசாலை, சென்னை) மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.

இரண்டு அழைப்பிதழ்களையும் இணைத்துள்ளேன்.

நண்பர்களின் வருகை இந்த நிகழ்ச்சிகளை அர்த்தமுள்ளதாக்கும்.

(27.12 2009 அன்று நடைபெற இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியனின் நூல் வெளியீட்டு விழா குறித்த செய்தி பின்னர் உங்களை வந்தடையும்)

உங்கள் வருகையை, வாழ்த்துக்களை வேண்டுகிறேன்

மிக்க அன்புடன்

மனுஷ்ய புத்திரன்

Series Navigation