அப்துல் அஸீஸ் உலகம் தட்டை என்று சொல்கிறாரா?

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

எழில்


உலகம் உருண்டை என்று குரான் சொல்கிறது என்று வளைத்து திரித்து பொருள் கூறுபவர்களோடு நேரடியாக மோதும் அப்துல் அஸீஸின் வாதம் “குரான் அடிப்படையில்” சரியானதுதான் போலிருக்கிறது. குரான் முழுமுதல் உண்மை என்று எடுத்துக்கொண்டால் அவரது வாதத்தில் பொருளுள்ளதாக உள்ளது. இதே போலத்தான் சுமார் 600 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் பைபிளில் கூறியிருப்பது முழுமுதல் உண்மை என்று உலகம் உருண்டை அல்ல உலகம் தட்டைதான் என்றும், பூமிதான் பேரண்டத்தின் மையம் என்றும் மற்ற கிரகங்கள் அனைத்தும் பூமியையே சுற்றி வருகின்றன என்றும் வாதிட்டார்கள். மாற்றுக்கருத்து கொண்டவர்கள் கிறிஸ்துவ பாதிரிகளால் கொல்லப்பட்டார்கள்.

சமீபத்தில், சவுதி இமாம் ஷேக் இபின்பாஸ் உலகம் தட்டை என்றும், பூமியை சூரியன் சுற்றுகிறது என்றும் குரான் கூறுகிறது. மாற்றுக்கருத்து உள்ளவர்கள் காபிர்கள் என்றும் பத்வா கொடுத்தது உலகப்புகழ் பெற்ற விஷயம்.

இப்போதும் யூட்யூபில் அரபு இஸ்லாமியர்கள் குரானின் அடிப்படையில் உலகம் தட்டை என்று வாதிடுவதை பார்க்கலாம்.

சமீபத்தில் நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற இஸ்லாமிய ஜிகாதிக்குழு நைஜீரியாவில் ஆட்சியை பிடிக்க நடத்திய போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த போகோ ஹராம் என்ற குழுவை தலைமை தாங்கியவர் எந்த கொள்கைக்காக போராடுகிறோம் என்று பிபிஸிக்கு பேட்டியளித்திருந்தார்.

போகோ என்றால் மேற்கத்திய கல்வி என்று பொருள். போகோ ஹராம் என்றால் மேற்கத்திய கல்வி ஒரு ஹராமான விஷயம் என்று பொருள். இவர்கள் உலகம் தட்டை என்றும், அல்லாவின் அருளால்தான் மழை பெய்கிறது என்றும் மாணவர்களுக்கு சொல்லித்தரவேண்டும். ஆனால், மேற்கத்திய கல்வியில் உலகம் உருண்டை என்றும், தண்ணீர் ஆவியாகி மேலே சென்று அதுதான் மழையாக பெய்கிறது என்றும் தவறாக சொல்லித்தரப்படுகிறது என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றுள்ளனர்.

http://news.bbc.co.uk/2/hi/8233980.stm

ஆகவே தலிபான், ஜிகாதிக்குழுக்கள் ஆட்சி அமைத்தால் எப்படிப்பட்ட கல்வி சொல்லித்தரப்படும் என்பது அப்துல் அஸீஸின் கட்டுரையில் நன்றாகவே தெரிகிறது.

எழில்
ezhila.blogspot.com

Series Navigation

எழில்

எழில்