காட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

மலர்மன்னன்


ஜூலை 24, 2009 திண்ணையில் வஹ்ஹாபிக்குச் சில கேள்விகளையும் நேசகுமாருக்குச் சில விளக்கங்களையும் அளித்துள்ள ஸ்ரீ முகமது அமீன் கடிதம் படித்து மகிழ்ந்தேன். தமிழ் முகமதியரிடையே சுயமாகச் சிந்திப்பதைத் துணிவுடன் வெளியிட முன்வருவோரின் எண்ணிக்கை சிறுகச் சிறுக அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரிய முன்னேற்றம் அல்லவா?
அன்பர் அமீன் அவர்களுக்கு எனது நன்றி.

//இறைவன் பற்றிய ஞானத்தினை அருளி அந்த காட்டுமிராண்டி அரபிகளின் வாழ்க்கையில் இறைவழி பாட்டினை செப்பனிடுவதற்காகவே அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.//

என்று அமீன் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கப் படவேண்டிய உண்மை யாகும். அவர் தெரிவித்துள்ளது போல் காட்டுமிராண்டிகளின் வாழ்க்கையில் இறை வழிபாட்டினைச் செப்பனிடுவதற்காகவே அவர்கள் (இறைத் தூதுவர் எனப் பின்னர் அரோபியரால் நம்பப்பட்டும் ஒப்புக் கொள்ளப்பட்டும் போற்றப்பட்ட முகமது அவர்கள்) இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால் அந்தச் செப்பனிடுதல் தேவைப்படாத பல நாகரிகமடைந்த கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் அதனை வன்முறையாகத் திணித்தது எந்த விதத்தில் நியாயம், அதற்கு என்ன அவசியம் என்றுதான் யோசிக்கத் தெரிந்த உள்ளங்களில் கேள்வி எழுகிறது. அரபிகளின் மூர்க்கத்தனமான மேலாதிக்கப் பேராசை தவிர இதற்கு வேறு காரணம் இல்லை என்ற விடையும் அதற்குக் கிடைக்கிறது.

நேசகுமார் எழுதுவதன் நோக்கம் இன்னதெனப் புரிந்து கொள்வதோடு, அது பலனளிக்கத் தொடங்கியிருப்பதைக் காண்கிறேன்.

அன்புடன்,
மலர்மன்னன்

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்