நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

கார்கில் ஜெய்



ஸ்ரீ நேசகுமாரைப் பற்றி தூற்றியும் ஹிந்து மதத்தைப் பற்றி பல கேள்விகளைக் கேட்டும் எழுதிய பேராசிரியர் நாகூர் ரூமி அவர்கள், ஏதோ கல்லுரியில் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியராக இருக்கிறாரே என்ற ஆர்வ மிகுதியில், அவரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து அவரின் பிற எழுத்துக்களைப் படித்தேன். Quality யை எதிர்பார்த்த எனக்கு Quantity யை மட்டுமே கொடுத்த முரட்டுத் தனமாக எழுத்தைப் பற்றி வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை. அவருக்கு இலக்கிய திறன் மற்றும் தமிழறிவு குறைவு என்பதே என் கருதுகோள். அதற்கு ஆதாரமாக இம்மூன்று வாதங்களை வைக்கிறேன்; வாசகர்களே முடிவு செய்யட்டும்:

1) ஹோமரின் இலியட் – தமிழ் மொழி பெயர்ப்பு செய்திருந்தார். அதற்கு முகவுரை திண்ணையில் வெளியாகி இருந்தது http://www.thinnai.com/?module=displaystory&story_id=60703152&format=html. அதில் சற்று கீழ்த்தரமாக ‘இராமன் அனுமனிடம் சீதையின் தோற்றத்தை விளக்கும் போது ‘தேர்த்தட்டு போன்ற அல்குள் உடையவள்’ என்று சீதையின் பிறப்புறுப்பை விவரித்ததாக சொல்லியிருந்தார். இராமாயணத்தில் வல்லுனரும், தமிழ் கவிஞருமான ஸ்ரீ ஹரி கிருஷ்ணனிடம் ஆச்சரியத்துடன், ‘சீதை சிரித்தாள்’ என்று கூட எழுதாமல் நாகரீகத்திற்கேற்ப மிகக் மென்மையாக ‘குறுநகை பூத்தாள்’ என்று எழுதும் துல்லியம் மிக்க கம்பனா இவ்வாறு பச்சையாக இராமர் அனுமனிடம் பேசுவதாக எழுதினார்?!’ என்று கேட்டேன். அவர் எழுதிய பதிலைப் படித்ததில், பேராசிரியர் நாகூர் ரூமி அவர்கள் ஆழ்ந்த அறிவின்றி, குறைந்தபட்சம் தமிழ் அகராதியைக் கூடப் பார்க்காமல் அவரின் மனம்போன்று எழுதுகிறார் என்றே தெரிந்தது. ஹரி கிருஷ்ணன் எழுதிய விளக்கத்தைக் கடைசியில் இணைத்துள்ளேன். முத்தான விளக்கமான அதை வாசகர்கள் முதலில் படித்துப் பின்பு இக்கட்டுரையைத் தொடரவும்.

/முனைவர் பட்டத்துக்காக கம்பனைப் படித்தேன்….// -என்று பேராசிரியர் நாகூர் ரூமி சொல்லியிருக்கிறார். இப்படி அரைகுறையாகப் படித்து, ஆணில் அரையாகிய பெண்ணின் அரைக்கும் சில அங்குலம் குறைவாகவே சிந்தித்து, மேலும் நேசகுமாரைப் பேசியது போலவே கம்பனையும் தூற்றித்தான் முனைவர் பட்டம் வாங்கினாரா? அவர் முனைவர் பட்டம் வாங்கிய கம்பராமாயணத்திலேயே அவருக்கு இவ்வளவுதான் அறிவு என்றால், மற்றவற்றில் எப்படி தரம் இருக்கும்?

2) அதே ஹோமரின் இலியட் – தமிழ் மொழி பெயர்ப்பில் கம்பனுக்குத் தாமரை மலரைத்தவிர வேறேதும் தெரியாது, //…கம்பனைப் பொறுத்தவரை தாமரை வெறும் கற்பனை சார்ந்த விஷமாகவே உள்ளது// என்றும் எழுதியிருந்தார். எனக்கென்னவோ நாகூர் ரூமிதான் கம்பனை மட்டுமல்ல, தாமரை மலரைக்கூட சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்னும் ஐயம் எழுகிறது.

கம்பன் மட்டுமின்றி திருவள்ளுவரும் தாமரை மலரையே அதிகம் பாடுகிறார். தாமரை என்பது முழுமையின் வடிவம். சித்தர்கள் யோக நிஷ்டையில் துரியத்தை உச்சியில் கவிழ்ந்து மலரும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாகக் கண்டனர். குண்டலினி சக்தி துரியத்தில் தாமரையாக மலரும் போது முகத்தில் தவவொளி மின்னும் என்றனர். ‘அரவிந்தன்’ என்று தாமரை போல் முகமலர்ந்த திருமால் போற்றப்படுகிறார். தாமரை மலர் ஹிருதயம் என்று ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ளது. சித்த வைத்தியமும், ஆயுர்வேதமும், யுனானியும் கூட தாமரையை இதயத்தை வலுவாக்கும் அருமருந்தாகச் சித்தரிக்கின்றன. ‘வெள்ளத்தனையது மலர்நீட்டம்’ என்கிறார் திருவள்ளுவர். தாமரை, நீரின் மேலேயே எப்போதும் இருந்தாலும், இலையில் நீர் ஒட்டுவதில்லை. அதேபோல் மனிதனும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும் பற்றின்றி ஒட்டாமல் இறைவனை நினைத்து வாழ்ந்தால் ‘அற்றது பற்றெனின் உற்றது வீடு’ என்று இறைவனை அடையலாம். அதற்கான குறியீடே தாமரை மலர். ஆக்கிரமிப்பு குணமுடைய கூட்டத்துக்கு, பற்றின்றி இருக்கச் சொல்லும் தாமரை மலர்க் குறியீடு ‘போரடிப்பதா’கவே தெரியும்.
மூதுரையில் ஔவையார்,
“நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.”
என்கிறார . தாமரையை நல்லாருக்குத்தான் பிடிக்குமாம்!! என்ன அதிசயம் பாருங்கள்!! நாகூர் ரூமி தனக்கு தாமரையையும் பிடிக்கவில்லை; கற்றாரான கம்பரையும் பிடிக்கவில்லை என்று அவரே சொல்லுகிறார்!!.

3) மறைந்த எழுத்தாளர் சுஜாதா நாகூர் ரூமியின் ‘உமர் கய்யாம்’ பாடல் மொழிபெயர்ப்பு பற்றி ஆனந்த விகடனில் ‘கற்றதும் பெற்றதும்’-ல் எழுதியிருந்தார். மு.வ. ரத்ன சுருக்கமாக ‘விதியின் கை எழுதி எழுதி முற்செல்லும்’ என்று அற்புத மொழியாக்கம் செய்திருந்ததை நாகூர் ரூமி முக்கி, முனகி, முடியாமல் ஏதோ எழுதியிருந்தார். இவர் எழுதியது தேவையற்ற மொழியாக்கம் என்றே சுஜாதா நாசூக்காகச் சொல்லியிருந்தார். அதற்குக் காரணம் இருக்கிறது. மு.வ வின் முதல் தர மொழியாக்கம் வந்தது போன நூற்றாண்டிலேயே. அதையே இப்போது நாகூர் ரூமி செய்தது மூன்றாந்தர மொழிபெயர்ப்பு. பாவம், மு.வ. வைப் பார்த்துக் கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியானார். பேராசிரியர் நாகூர் ரூமி எப்படியோ ஆகட்டும், இவரின் கீழ் படிக்கும் மாணவர்கள் என்ன ஆவார்கள்?

கார்கில் ஜெய்.
kargil_jay@yahoo.com


கவிஞர் ஹரி கிருஷ்ணன் எழுதிய விளக்கத்தின் பகுதி இது :
============================================================================

அல்குல் என்ற சொல்லுக்கு மூன்று பொருள் உண்டு.

1. side; 2. waist; 3. Pudendum muliebre

என்பது OTL அகராதி, சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் தரும் விளக்கம். (1) பக்கம், (2) அரை (இடையை அடுத்த பகுதி) (3) பெண் பிறப்புறப்பு.

இதில் என்ன வேதனை என்றால், தமிழிலக்கியத்தில் எந்த இடத்தில் அல்குல் என்ற சொல்லைப் பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக எல்லோரும் மூன்றாவது பொருளை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறார்கள்.

உவமை சொல்கிறார்களே, அதில் ஏதாவது ஒன்று இந்த மூன்றாவது பொருளுடன் ஒத்துப் போகிறதா? புற்றரவல்குல். அது என்ன பாம்பு படம் எடுத்த மாதிரியா இருக்கிறது? தேர்த்தட்டு அல்குல். தேர்த்தட்டு என்ன வடிவத்தில் இருக்கும்? இந்தப் புற்றரவல்குல், பரவையன்ன அல்குல் (பரவை=கடல்) எல்லாம் எதைக் குறிக்கின்றன? கொஞ்சம் ஆங்கிலத்தைத் தொட்டுக் கொள்வோம். ஆங்கிலத்தில் hip என்றும் waist என்றும் சொல்கிறோம். இரண்டும் interchangeable ஆகப் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டுக்கும் ஒரே பொருள் இல்லை. hip என்றால் என்ன?

side of body below waist: the area on each side of the body between the waist and the thigh

என்பது Encarta தரும் விளக்கம். அதாவது வெய்ஸ்ட்டுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடம் ஹிப். அப்படியானால் வெய்ஸ்ட் என்பது என்ன?

The narrowing of the body between the ribs and hips (வேர்ட்வெப் அகராதி)

body area between ribs and hips: the part of the human trunk between the rib cage and the hips, usually narrower than the rest of the trunk (என்கார்ட்டா அகராதி)

உடலில் குறுகிவரும் இடம் எதுவோ அது வெய்ஸ்ட். ஆகவேதான் ஆங்கிலத்தில் slender waist உண்டு, slender hip கிடையாது. உடலின் அந்தப் பகுதியை flaring hip என்று சொல்லவேண்டும்.

உடல் குறுகி, பிறகு சரேலென்று விரிகிறது அல்லவா அந்தப் பகுதி ஹிப். குறுகி இருக்கும் இடம் வெய்ஸ்ட்.

சரி. இங்கிலிபீஸ் எல்லாம் எதுக்கு என்று கேட்கிறீர்கள். அதுதானே? எது ஆங்கிலத்தில் வெய்ஸ்ட் என்று சொல்லப்படுகிறதோ அது இடை. ‘பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்’அப்படின்னும், இருக்கிறதோ இல்லையோ என்றெல்லாமும் கவிஞர்கள் பாடுகிறார்களே அதுதான் இது.

எதை ஆங்கிலத்தில் ஹிப் என்று சொல்கிறார்களோ அது தமிழில் அரை என்றும் அல்குல் என்றும் சொல்லப்படுகிறது. That portion which flares up after the point where body had narrowed down.

இப்படி விரியும் இடத்துக்கு மட்டுமே தேர்த்தட்டு, புற்றரவு போன்ற உவமைகள் பொருந்துகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். The outline of a cobra raising its hood resembles half of an hour-glass. தேர்த்தட்டு என்பதும் அப்படித்தான் தேரில் விரிந்து இருக்கும் இடம். இந்த உவமைகள் எதைக் குறிக்கின்றன? அரை (இடைக்குக் கீழே, பக்கங்களில் (not directly below) விரியும் பகுதியை. நிச்சயமாக பிறப்புறுப்பை அன்று.

இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை என்றால்,”கவைத்தாம்பு தொடுத்த காழூன்று அல்குல்”என்று பெரும்பாணாற்றுப்படை சொல்வது எதனை என்று விளக்கவேண்டும். “1 கவைத்தாம்பு slip-knot, noose” என்பது ஓடிஎல் தரும் விளக்கம். (ஆடையின்) முடிச்சு போடப்பட்டு உள்ள அல்குல் என்று பெரும்பாணாற்றப்படை சொல்கிறது. பாவாடையின் முடிச்சை எங்கே போடுவார்கள்?

சரி போகட்டும். “பூந்துகில்சேர் அல்குல் காமர்எழில் விழலுடுத்து” அப்படின்னு திவ்யப் பிரபந்தம் பேசுகிறது. அல்குலைச் சுற்றிலும் பூந்துகில் உடுத்தப்பட்டிருக்கிறது என்று இந்த வரி சொல்லுகிறது. என்னாங்க, மென்மையான துணியை எந்த அல்குலைச் சுற்றி உடுத்துவாங்க?

சரி. அதுவும் வேணாம். பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு பாடுகிறார் அல்லவா, அங்க வாங்க:

இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே.

முலையுண்ண வா என்று குழந்தையைத் தாய் அழைக்கிறாள். ‘அப்பா, கொழந்தே, ஓடிவாடா என் கண்ணா, வந்து என் அல்குல் மேல ஏறிக்கோ. மார்பில் பால் அருந்து’ என்று சொல்கின்றாள். பால் குடிக்கத் தன் குழந்தையை வந்து ஏறி அமரச் சொல்லும் தாய் எந்த இடத்தில் அமரச் சொல்வாள்? இடை குறுகியபின், விரியத் தொடங்கும் அந்த இடத்திலா அல்லது வேறெங்காவதா?
.


kargil_jay@yahoo.com

Series Navigation

கார்கில் ஜெய்

கார்கில் ஜெய்