ஊடகவியலாளன் சத்தியமூர்த்தியை நினைவுகூர்ந்து அஞ்சலி

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

அறிவிப்பு


பேரினவாத சிறிலங்கா அரசின் கொடூர எறிகணைத் தாக்குதலில் படுகொலையுண்ட ஊடகவியலாளன் சத்தியமூர்த்தியை நினைவுகூர்ந்து அஞ்சலிக் கூட்டம்

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். பேரினவாத சிறிலங்கா அரசு தமிழர் பிரச்சினைக்கு இராணுவ அடக்குமுறையின் மூலமே தீர்வு காண விழைகின்றது. அப்பாவித் தமிழ்மக்களை யுத்த கொடூரத்திலிருந்து பாதுகாப்பதற்காகச் சிறிலங்கா அரசைப் போர்நிறுத்தம் செய்யுமாறு கோரி உலக அரசுகள், நடுநிலை அமைப்புக்கள், சமாதானத் தலைவர்கள், புத்திஜீவிகள் எனக் கோரிக்கை விடுப்போர் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆயினும் பேரினவாத சிறிலங்கா அரசின் ஊழித்தாண்டவம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்து, இராணுவ வல்லாதிக்கத்தைத் தழிழர் பிரதேசங்களில் நிறுவுவதற்கான பேர் அவாவைத் தன்னகத்தே கொண்டதாகக் காட்சியளிக்கிறது. இதன் விளைவாகச் சிறிலங்கா அரசு புரியும் மனித உரிமைமீறல்கள் உலகத் தமிழ்மக்களின் தொடர்ச்சியான வேலைத்திட்டங்களினால் அனைத்துலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தவகையில் அவ்வாறான தளத்திலே கால்பதித்து அதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உலகத் தமிழ்மக்களுக்கு அரசியல் தெளிவை ஊட்ட முயற்சித்தவனும், அதற்கும் அப்பால் சிறந்த தமிழ் ஊடகவியலாளனாக விளங்கியவனுமாகிய புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி சிறிலங்கா அரச இராணுவத்தின் கொடூர எறிகணைத் தாக்குதலில் அண்மையில் படுகொலையுண்ட சேதி மனிதத்தை நேசிக்கும் மக்கள் அனைவரையும் தாங்கொணா வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தை நேசிக்கும் சக்திகள் அனைவரும் ஊடகவியலாளன் சத்தியமூர்த்தியை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது ஓர் வரலாற்றுக் கட்டாயமாக அமையும். எனவே அதனை நிறைவேற்றும் பொருட்டு ஏற்பாடாகியுள்ள இவ்வஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் தாழ்மையுடன் அழைக்கின்றோம்.

இடம் -: 29 Rosebank Dr ( Markham Rd / Milner Ave)Scarborough

காலம் -: 01.03.2009, ஞாயிறு பிற்பகல் 6.00

தொடர்புகட்கு: (647) 237-3619 , (416) 754-1171, (416) 759-6264

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு