மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

(செய்தித் தொகுப்பு: ரெ.கார்த்திகேசு

மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம்
நூல் பரிசளிப்பு விழாவும்
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்
துணை வேந்தர் வருகையும்

(செய்தித் தொகுப்பு: ரெ.கார்த்திகேசு)

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் வழங்கி வரும் மலேசியாவின் சிறந்த தமிழ் நூல் ஒன்றுக்கான தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசளிப்புத் திட்டத்தில் 2007ஆம் ஆண்டுக்கான கட்டுரை நூலுக்கான பரிசை திருமதி இராஜம் இராஜேந்திரன் அவர்களுக்கு வழங்கியது. பரிசு பெற்ற அவருடைய நூலின் தலைப்பு “மலேசியப் புதுக் கவிதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்”. நூலுக்கு மலேசிய ரிங்கிட் 7,000.00 மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு மலேசிய முன்னாள் துணையமைச்சர் (டத்தோ) சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தது பரிசினை எடுத்து வழங்கினார்.

தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் மலேசிய அரசில் அமைச்சராகவும் மலேசிய அரசின் உறுப்புக் கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவராகவும் இருந்தவர். அவரின் மறைவுக்குப் பின் அவருடைய குடும்பத்தினர் சார்பில் அவருடைய இளைய சகோதரர் புகழ் பெற்ற வழக்கறிஞர் (டத்தோ) வெ. இல. காந்தன் இந்தப் பரிசை ஏற்படுத்தி ஆண்டு தோறும் வழங்கி வருகிறார்.

தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசு மலேசியத் தமிழ் நூல்களை நான்கு வகைகளாகப் பிரித்து ஓராண்டுக்கு ஒரு வகையாக முறை வைத்துப் பரிசு கொடுத்து வருகிறது. அவை கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவை. ஒவ்வோர் ஆண்டுப் பரிசும் அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் வெளிவந்த அவ்வகைப் படைப்புக்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும். 2007ஆம் ஆண்டு கட்டுரை வகைக்குரியதாக அமைவதால் 2004, 2005, 2006, 2007 ஆகிய நான்கு ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பரிசீலனைக் குழுவின் நடுவர்களாக இரண்டு வெளிநாட்டுக்காரர்களும் இரண்டு மலேசியர்களும் இருந்தனர். அவர்கள்: தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன், சிங்கப்பூர் தேசியக் கல்விக் கழகத்தின் துணைப் பேராசிரியர் முனைவர் அ.இரா.சிவகுமாரன், மலாயாப் பல்கலைக் கழக கல்விப் புலன் இணைப் பேராசிரியர் முனைவர் முல்லை இராமையா, கல்வியாளரும் நூல் பதிப்பாளருமான ஆ. சோதிநாதன். நடுவர் குழுத் தலைவராக இரா.பாலகிருஷ்ணன் இருந்தார்.

பரிசு பெற்ற இராஜத்தின் “மலேசியப் புதுக் கவிதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூல், அவருடைய முதுகலைப் பட்ட (மலாயாப் பல்கலைக் கழகம்) ஆய்வேட்டைத் தழுவி அவர் எழுதியதாகும். இராஜத்திற்கு இந்தத் துறையில் ஆராய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவருடைய கணவரும் பத்திரிக்கையாளரும் புதுக் கவிதைகள் எழுதுபவரும் அவற்றின் தீவிர ஆதரவாளருமான அவருடைய கணவர் பெ. இராஜேந்திரன். (இவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும் கூட.) ஆனால் இந்தத் துறையைத் தனதாகத் தேர்ந்தெடுத்த பின் அதனைத் துல்லியமாக ஆராய்ந்து, வகைப்படுத்தி அதனை ஆவணமாக்கியிருக்கும் பெருமை இராஜத்தையே சாரும்.

பரிசளிப்பு நிகழ்ச்சி மலேசியாவின் தெற்குக் கோடியில் உள்ள ஜோஹூர் பாரு என்ற ஊரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை முடிந்த அளவு மலேசியத் தலை நகருக்கு வெளியே உள்ள ஊர்களில் நடத்தி அங்குள்ள எழுத்தாளர்கள் பங்கு பெற ஊக்குவிக்க வேண்டும் என்னும் சங்கத்தின் கொள்கைக்கேற்ப இது செய்யப்பட்டது. ஜோஹூர் பாருவில் உள்ள தமிழர் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அரிய உபசரிப்பை வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கு மலேசிய முன்னாள் துணையமைச்சர் (டத்தோ) சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன், மற்றும் தமிழக தி.மு.க.பிரமுகரும் கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

(குறிப்பு: “மலேசியப் புதுக் கவிதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்” நூல் சென்னையில் மித்ர பதிப்பகத்தாரால் 2007இல் பதிப்பிக்கப் பட்டுள்ளது.)

துணைவேந்தரின் சிறப்புரை

விழாவில் துணை வேந்தரின் பேச்சின் சுருக்கம் வருமாறு: (நன்றி: மக்கள் ஓசை நாளிதழ்)

சூரியனிலிருந்து பூமி பிரிந்து வந்து தனிக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தாலும் சூரியனின் சூட்டை பூமி இன்னமும் அடைகாத்துக் கொண்டிருப்பது போல் தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழ் என்ற சூட்டை அடைகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் அவர்களின் சுய அடையாளம்.

ஊர் என்றால் தொன்மமும் பெருமையும் பண்பாட்டு வேர்களும் கொண்டது என்று பொருள். ஊர் என்று முடிகின்ற எல்லா ஊர்களுக்குமே ஒரு வரலாற்றுப் பண்பாடும் உண்டு. மலேசியாவிலும் குவாலா லும்பூர், சிலாங்கூர், ஜோகூர் என்ற பெயர்கள் இருக்கின்றன. பக்கத்தில் சிங்கப்பூரும் உள்ளது.

ஆழிஊழியில் தப்பி வந்த மனிதன் கரையேறிய ஓர் இடத்தை பைபிள் சுட்டிக் காட்டுகிறது. அந்தப் பகுதி UR என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இப்ரு மொழியில் அப்படி ஒரு சொல் இல்லை என பைபிளுக்கு விளக்கம் எழுதியவர்கள் சொல்லுகிறார்கள். ஆகவே ஆழிஊழியில் கரையேறிய மனிதன் தமிழனாக இருந்திருக்கும். அவன் போய்ச் சேர்ந்த இடத்துக்கு அவனுடைய ஊரின் பெருமையையும் தொன்மத்தையும் கொண்டுபோய்ச் சேர்த்து ஊர் என்றே அதைக் குறிப்பிட்டிருக்கலாம்.

எங்கே இருந்தாலும் வந்த இடத்தை மறந்து விடாமல், வாழும் இடத்தை வளப்படுத்திக் கொண்டு, வாழ்வளிக்கும் தமிழையும் மறந்து விடாமல் தமிழன் வாழ வேண்டும்.

தமிழ் என்கிற வெப்பத்தை மறக்காமல் அந்த வெப்பத்தோடு உறவு கொண்டாடி தமிழர்களாக வாழ வேண்டும் என்கிற முன்மாதிரியை மலேசியத் தமிழர்கள் உலகுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் இலக்கியம் உலகின் எந்தப் பகுதியில் படைக்கப்பட்டாலும் அந்த இலக்கியங்கள் அனைத்துமே தமிழின் சூட்டை அடைகாக்கின்ற அம்சத்தோடுதான் இருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் குறள் பீடம், தொல்காப்பியம் போன்ற விருதுகளை தமிழக முதலமைச்சர் அவர்கள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கும் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமும் மலாயாப் பல்கலைக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்பம்

தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் மலேசியாவில் இருந்த வேளையில் மலாயாப் பல்கலைக் கழகத்திற்கு அதிகார பூர்வ வருகையளித்து அதன் உயர் அலுவலர்களுடன் சந்திப்பு நடத்தினார். இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம் ஏற்கனவே மலாயாப் பல்கலைக் கழகத்துடன் ஆலோசித்துத் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்பமிடுவதாகும். மலாயாப் பல்கலைக் கழகத்தின் கலைகள் மற்றும் சமூக அறிவியல், மொழிகள் மற்றும் மொழியியல் ஆய்வுப் புலன்களோடு (Faculties) தமிழ்ப் பல்கலைக் கழகத் துறைகள், தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், மலேசிய நாட்டு மொழிகள், கலைகளுடன் ஒப்பிட்டு ஆய்வுகளை மேற்கொள்ளவும் இலக்கியங்களை மொழிபெயர்த்துக் கொள்ளவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பட்டப்படிப்பு மாணவர்கள், கல்வியாளர்கள் பரிமாற்றங்களும் செய்யப்படும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நடப்பில் இருக்கும்.

ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரனும் மலாயாப் பல்கலைக் கழக துணை வேந்தர் சார்பில் உதவித் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் கோ லேக் தீயும் ஒப்பமிட்டனர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரனும் மலாயாப் பல்கலைக் கழகத்தின் மொழிகள் மற்றும் மொழியியல் ஆய்வுப் புலன் தமிழ் விரிவுரையாளர்களும் இந்திய ஆய்வியல் துறை விரிவுரையாளர்களும் உடனிருந்தனர்.

இந்த ஒப்பந்தம் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒரு வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்துடன் செய்து கொண்டுள்ள முதல் ஒப்பந்தம் என்றும் அறியப்படுகிறது.

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு

மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

ரெ.கார்த்திகேசு