“தமிழ் இணையப் பயிலரங்கம்” – தருமபுரி.

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

அறிவிப்பு


தகடூரான் தமிழ் அறக்கட்டளை -விஜய் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும்
“தமிழ் இணையப் பயிலரங்கம்” – தருமபுரி.

தருமபுரியில் உள்ள தகடூரான் தமிழ் அறக்கட்டளை -விஜய் கல்வி அறக்கட்டளை என்ற இரண்டு அமைப்புகளின் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை(14.09.2008)காலை பத்து மணிக்குத் தருமபுரி. விஜய் வித்யாலாயா மகளிர் மேல்நிலைப்பள்ளி அரங்கில் தமிழ் இணையப் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவர் கி. கூத்தரசன் வரவேற்புரையாற்ற உள்ளார். திரு. டி.என்.சி. மணிவண்ணன் முன்னிலையில் நடைபெறும் பயிலரங்கில் முனைவர் மு.இளங்கோவன்(புதுச்சேரி),திரு.சு.முகுந்தராசு(தமிழா.காம்,பெங்களூர்),திரு,கோபி(தகடூர்,அதியமான் மென்பொருள் உருவாக்கியவர்,ஐதராபாத்து) கலந்துகொண்டு தமிழ் இணையம், தமிழ்த் தட்டச்சு,தமிழ் 99 விசைப்பலகை, எ.கலப்பை,ஒருங்குகுறி,வலைப்பூ உருவாக்கம், தமிழ்மணம், மின்னஞ்சல்,உரையாட்டு,குழுக்கள்,நூலகங்கள் பற்றி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, பயிற்சியளிக்க உள்ளனர். திரு. சண்முகவடிவேல் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

தருமபுரித் தமிழ்ச் சங்கம் நடத்தும் சிறப்புரையரங்கம் தலைப்பு :தமிழும் இணையமும்

14.9.2008 ஞாயிறு மாலை 6 மணிக்குத் தருமபுரித் தமிழ்ச் சங்கம் சார்பில் பெரியார் அரங்கில் “தமிழும் இணையமும்” குறித்து முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் சிறப்புரை(புதுச்சேரி) ஆற்ற உள்ளார்.
திரு.சு.முகுந்தராசு(தமிழா.காம்,பெங்களூர்) அவர்கள் தலைமையில் விழா நடைபெறும்.
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் இணையம் பற்றித் தமிழகத்துக் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணியை ஊக்கபடுத்தியும், தமிழ் நாளேடுகளில் தமிழ் இணையம் பற்றி எழுதி வருவதைப் போற்றியும். தமிழ்ப் பணியாற்றியவர்களின் வாழ்க்கையை இணையத்தில் பதிவு செய்து வருகின்றமையைச் சிறப்பிக்கும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் “இணையத் தமிழறிஞர்” என்னும் மதிப்புமிகு பட்டம் வழங்கிச் சிறப்பிக்க உள்ளனர்.

விழாவில் வழக்கறிஞர் திரு.ந.இராசேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றவும், மருத்துவர் கி. கூத்தரசன்,ப.நரசிம்மன் உரையாற்றவும் உள்ளனர்.


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு