சீனாவின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் – நரேந்திரன் கட்டுரை

This entry is part of 26 in the series 20080626_Issue

ஜடாயு


அன்புள்ள நரேந்திரன்,
சீனாவின் ஆக்கிரமிப்பு திட்டங்களையும், மாட்டிக் கொண்டு முழிக்கும் ஆப்பிரிக்க நாடுகளையும் பற்றிய கவலையளிக்கும் சித்திரத்தை அருமையாக விளக்கியது உங்கள் கட்டுரை.

வெடித்துப் பெருகும் தனது மக்கள் தொகையை உலகெங்கும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் குடியமர்த்தும் (to dump) செயல்பாட்டை சீனா நேர்த்தியுடனும், தேர்ந்த பயிற்சியுடனும் நெடுங்காலமாக செய்து வருகிறது. மாவோயிச சீனாவிற்கு முந்தைய காலகட்டங்களிலிருந்தே ஆசியா முழுவதும் இதனை சீனா நடைமுறைப் படுத்திவிட்டது. இப்போது ஆப்பிரிக்காவைக் குறிவைக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இன்று வேரூன்றியிருக்கும் சீன ஆதிக்கம் அந்தந்த நாடுகளில் வாழும் மற்ற இனங்களைப் பெரும் கொதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது என்பது நிதர்சனம்.

சீனாவால் இந்தியாவுக்கு நேரும் ஆபத்துக்கள் பற்றி இந்திய அரசு, மக்கள் மற்றும் ஊடகங்களில் மிகக் குறைவாகவே பேசப் படுகிறது. சமீபத்திய சீன எல்லை மீறல்களுக்குப் பிறகாவது இது பற்றிய பிரக்ஞையும், எச்சரிக்கை உணர்வும் தோன்றுமா? சந்தேகம் தான். அன்புடன்,
ஜடாயு


jataayu.b@gmail.com

Series Navigation