ஈஸ்வர அல்லா தேரே நாம்

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

கண்ணன்


ஈஸ்வர அல்லா தேரே நாம்

கடந்த திண்ணை இதழில் திரு குரான் பற்றிய ஸ¤ஜாதாவின் கட்டுரையை திரு. தாஜ் வெளியிட்டிருந்தார்.

அந்தக் கட்டுரையப் படித்தவுடன் எனக்கு திரு. கா¢ச்சான் குஞ்சு(இவர் தி.ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் காலத்து எழுத்தாளர்) கணையாழியில் எழுதியிருந்த “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்ற நாடகம்தான் நினைவிற்கு வந்தது.

அதில் ஒரு பிராமணன் ‘எல்லாம் ஒன்றே, இதுவே உபனிஷத்துக்களின் முடிவு – ஈஸ்வரன் என்றாலும் அல்லா என்றாலும் ஒரே இறை தத்துவம்தான்” என்று தன் சகாக்களிடம் வாதித்துக் கொண்டிருப்பார். அவரது சகாக்கள் உங்கள் வாதம் நமக்கு பொ¢ய ஆபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று எச்சா¢ப்பார்கள். அவர் கேட்கமாட்டார், “நான் வேதம் படித்தவன் எனக்குத் ¦தி¡¢யாதா!” என்று கொக்கா¢ப்பார்.

அப்போது அங்கு ஆட்சியாளன் ஸ¤ல்தானின் படை வீரர்கள் வருவார்கள்; அந்த பிராமணனை ஸ¤ல்தான் அழைத்து வரச்சொன்னதாகச் சொல்வார்கள். அந்த பிராமணனும், “பார்த்தீர்களா ! ஸ¤ல்தான் என் கருத்தைப் பாராட்டி விருது கொடுக்க அழைத்திருக்கிறார்” என்று தன் சகாக்களியடம் பெருமையடித்துக்கொண்டு புறப்படுவார். அவரது சகாக்கள் அவரை எச்சா¢ப்பார்கள். ஆனாலு அவர்களை அலட்சியம் செய்துவிட்டு ஸ¤ல்தானைப் பார்க்க செல்வார்.

சபையில் ஸ¤ல்தான் ஈஸ்வரனும் அல்லாவும் ஒன்றுதான் என்ற அவரது கருத்து உண்ம்தானா என்று கேட்பான். இவரோ, “ஆமாம் அதில் சந்தேகமென்ன? வேதங்களும் உபனிஷத்துக்களும் அப்படித்தான் கோஷிக்கின்றன” என்று ததுவமாகப் பொழிவார். ஸ¤ல்தானும் பல முறைகள் கேட்பான், “இரண்டும் ஒன்றுதான் என்ற உங்கள் கருத்து சத்தியந்தானா?” இவரும் அதில் சந்தேகமென்ன, நான் கற்ற வேதம் சொல்வது சத்தியம்தான் என்று சொல்வார்.

“அப்படியானால் நான் சொலவதைக் கேட்பீர்களா” என்று ஸ¤ல்தான் அவா¢டம் கேட்பான். அவரும், “அதில் சந்தேகமென்ன ராஜா விஷ்ணுவின் அம்சம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன நீங்களோ எங்கள் ராஜா, நீங்களே மகாவிஷ்ணு” என்றெல்லாம் வசனம் பேசுவார்.

ஸ¤ல்தான், “உடனே அரண்மனை நாவிதனை அழைத்து வாருங்கள்” என்று ஏவலர்களுக்கு உத்தரவிடுவான். நாவிதரும் வருவார். அவா¢டம் ஸ¤ல்தான், அந்த பிராமணனின் தலையைச் சரைத்து ஸ¤ன்னத்தும் பண்ணிவிடச்சொல்லி உத்தரவிடுவான்.

அந்த பிராமணனோ நடு நடுங்கி “ராஜா ! இது என்ன !” என்று பதறுவான். “இரண்டும் ஒன்றுதான் என்று சத்தியம் செய்திருக்கிறீர் அப்படியானால் அல்லாவே இறைவன் என்று ஏற்றுக் கொள்வதில் தடையென்ன; தலையச் சரைக்கும் கத்தி வேண்டுமா அல்லது தலையைச் சா¢க்கும் கத்தி வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள்.” என்று ஸ¤ல்தான் முடித்துவிடுவான்.

சா¢த்திரத்தை நாம் அறிந்து கொள்வதுமில்லை, நினைவில் கொள்வதுமில்லை. “ஸத் குண விக்ருதி”(நற்குண தி¡¢பு) என்று அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

ஸ¤ஜாதாவின் கட்டுரையைப் படித்தவுடன் இதுவே என் நினைவிற்கு வந்தது.

கண்ணன், கும்பகோணம்.


kannankumbakonam@yahoo.com

Series Navigation

கண்ணன்

கண்ணன்