கடிதம்

This entry is part of 46 in the series 20080529_Issue

ராம்கி


ஐயா,

சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்தும் சாக்கில் தமது சொந்த கடையை விரித்திரிக்கிறார் தாஜ். இஸ்லாத்தை சுஜாதா ஏற்றார் என்பது இயல்பான செய்தி. தாஜ் பிற மதங்களை ஏற்கிறாரா என்பதே. கேள்வி மேலும் எல்லா மதங்களும், நாளை தோன்ற இருப்பவை உட்பட, இறைவனை ஒன்று போலவே விவரிக்கும். இதில் பெரிய வியப்பென்ன! அந்த நம்பிக்கையை இழப்போரை அல்லது இல்லாதோரை அந்த மதம் எவ்வாறு நடத்துகிறது என்பதே கேள்வி. விடை தேடி எங்கும் அலைய வேண்டாம். சென்ற வாரத் திண்ணையிலேயே பதில் கிடைக்கிறது.

”யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்” என்று தமது மரணப் படுக்கையில் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். (நூல்: புகாரி) — அபூ முஹை

‘கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) – நூல்: புகாரி) — இப்னு பஷீர்

இதை சுஜாதா படித்திருப்பாரா தெரியவில்லை. பொதுவாக அவர் மதம் அரசியல் போன்ற சிக்கல்களை தவிர்த்தார் என்றே நம்புகிறேன்.. தாஜ் கூறும் கட்டுரையை நான் கருத்தில் கொண்டே சொல்கிறேன். கைரேகை, வாஸ்து போன்ற தொழில் செய்வோர் எம்ஜியார், கருணாநிதி, ரஜினி, கமல் போன்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது போல் இது நம்மூர் அரசியல் வியாதி.

இஸ்லாமியர்கள் சற்று வலைபரப்புகளை நிரப்புவதை விடுத்து, உள்முகமாக சிந்தித்து, உங்கள் மத இளைஞர்களுக்கு இணக்கமாக வாழப் பயிற்சியளியுங்கள். நாட்டிற்கும், நாநிலத்திற்கும் நலம் !

என்ன, துல் பிகர் நம்ம நாட்டாமை சரி தானே!

இவ்வளவிற்கும் இடமளிக்கும் திண்ணை ஆசிரியர் குழுவிற்குத் தலை வணங்குகிறேன்.

regards,
ramki

vijiramki@yahoo.com

Series Navigation