காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் – நூல் வெளிவந்துள்ளது

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

அறிவிப்பு


காபிர்பத்வா,ஊர்விலக்கம்
முஸ்லிம் உரையாடல்
 
காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் என்றதொரு நூல் தற்போது வெளிவந்துள்ளது.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்தம் குடும்பத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இரட்டை வன்முறைக்கு எதிரான 102 பக்கங்களைக் கொண்ட கருத்துப் பதிவு ஆவணம் இது. இதனை தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் முன்னணி வெளியிட்டு உள்ளது.

இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.
 
முதற்பகுதி ஊர்விலக்கம் ஹெச்.ஜி.ரசூல் நேர்முகம் 9 அத்தியாயங்களையும்
 
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எழுத்து இரண்டாம் பகுதி குரானில் குடிக்கு தண்டனை உண்டா உள்ளிட்ட ஏழு அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.
 
மசூறா பகுதி மூன்றில் கருத்தாய்வு கூட்ட உரைகள் ,
உயிர்மை,காலச்சுவடு உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட தமிழகத்தின் மாற்று இதழ்களின் மதிப்பீடுகள்
,திண்ணை உள்ளிட்ட இணையதள வலைப் பதிவுகள்,
 
28க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் படைப்பாளிகளின் ஊர்விலக்கம் பற்றிய கருத்துரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

 Excommunication தொடர்பான தமிழகத்தின் முதல் நூலாக கூட இது இருக்கலாம்.
 
காபிர் என்றால் அந்த நபருக்கு ஸலாம் சொல்லக் கூடாது,
பள்ளிவாசலில் தொழ அனுமதிக்க கூடாது,
அவரது மனைவி குழந்தைகளுடனான உறவு ரத்து செய்யப்படும்,
இறந்துவிட்டால் மய்யித்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்ய முடியாது,
அவரது சொத்துக்களை அபகரிக்கலாம்,
அவரைக் கொல்லக் கூட செய்யலாம்
என்பதான பிக்ஹ் சட்ட அம்சங்களைக் கொண்ட காபிர்பத்வாவையும்,
ஊர்விலக்கத்தையும் குமரிமாவட்ட உலமா சபையும், தக்கலை அபீமுஅ நிர்வாகமும்
சேர்ந்து ரசூல் மீது நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?
என்ற முன்னுரையின் கேள்விகளோடு இந்நூல்
மறைக்கப்பட்ட பல உண்மைகளை உரத்துப் பேசுகிறது.
 
நூலின் பெயர் : காபிர் பத்வா ஊர்விலக்கம்
                       முஸ்லிம் உரையாடல்
                    
பக்கங்கள்   : 102

விலை       : ரூ.50/

வெளியீடு   : இக்ரஹ்

பதிப்பாளர் ; தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் முன்னணி
                  (த.மு.எ.மு.)
             :  திருவண்ணாமலை.

 
 

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு