காக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

கார்கில் ஜெய்


திப்பு சுல்தான் மற்றும் பாரதி பற்றி கட்டுரைகளை எழுதியதன் மூலம் முகமதிய அடிப்படைவாத எழுத்தாளர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு ஒரு வெளிப்படையான அளவுகோலாக திகழும் இப்னு பஷீர் அவர்களுக்கு என் நன்றி.

1) கட்டுப்பாடு : முதல் கட்டுரையில் எழுத வேண்டிய விஷயத்தை விட்டு கட்டுப்பாடு இல்லாமல் இந்துக்களையும், பாரதியையும் வீண் பழி சுமத்தி வசைபாடியது.
2) கடமை : இரண்டாம், முன்றாம் கட்டுரைகளில் நான் எழுப்பிய கேள்விகளுக்கும்,(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802072&format=html), வாதங்களுக்கும் விளக்கமளிக்காமல் கடமையை காற்றில் பறக்கவிட்டது.
3) கண்ணியம் : நான் எழுதியதை, இவர் தனக்கு சாதகமாக திரித்து எழுதிக்கொண்டது: //پeயாரோ ஒரு சுற்றுலா வழிகாட்டியின் வார்த்தைகளை விட, தேச விடுதலைக்காக பாடுபட்டு, அதிலேயே தனது உயிரையும்* பறிகொடுத்த காந்தியின் வார்த்தைகளை** நான் ஆதாரமாக எடுத்துக் கொள்கிறேன்پf //
(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803063&format=html)

அதாவது நான் எதோ ‘யாரோ ஒரு வழிகாட்டியை’ மட்டுமே ஆதாரமாக வைத்து எழுதியிருக்கிறேன், வேறு எந்த அடிப்படையும் இல்லை என்பது போல.
உண்மையில் நான் கட்டுரையில் குறிப்பிட்டது இதுதான்: //எந்த (வரலாற்று) ஆசிரியரும் எழுதவில்லை, இது தவிர நான் சில வரலாற்று ஆசிரியர்களையும், ஏன் பெங்களூரு அரசு சுற்றுலா வழிகாட்டியிடமும் கூடகேட்டேன் (அந்த வழிகாட்டி கர்நாடக அரசால் மைசூர் பல்கலை கழகத்தில் பயிற்றுவிக்க பட்டவர்..// (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802214&format=html)

இதை வாசகர்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக நான் எழுதிய கடிதத்தின் சுட்டியை கூட குறிப்பிடாமல் விட்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன் நான் எழுதியதையே கொஞ்சம் கூட நேர்மை இல்லாமல் மாற்றுகிறாரே, பல வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை இவர் என்னதான் செய்ய மாட்டார்? இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், திரித்து எழுதுகிறோமே, கண்டுபிடித்து விடுவார்களே என்ற கூச்சமோ, பயமோ இந்த முகமதிய எழுத்தாளர்களுக்கு இல்லாததுதான். சர்வ சாதாரணமாக மற்றொருவர் எழுதியதை மாற்றி எழுதும் இவர் திரிபுவாதியா அல்லது மகாகவி பாரதியாரும், சுஜாதாவுமா?

மேலும் இவரின் தவறுகளை சுட்டுவதில் பயனிருப்பதாக எனக்கு தோன்றாததால், நன்றி கூறி இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

கார்கில் ஜெய்
kargil_jay@gmail.com

*காந்தி சுதந்திரத்துக்காகவா 1948-ல் உயிரை விட்டார்? என்ன உண்மையை எழுதவே மாட்டேன் என சத்திய ப்ரமாணம் ஏதாவது எடுத்து இருக்கிறாரா இப்னு பஷீர் ?
**சரி, அப்போது ஏன் பாரதியின் வார்த்தைகளை எடுத்துக்கொள்ளவில்லை?பாரதி சுதந்திர போராட்டதில் ஈடுபடவேயில்லையா ?

Series Navigation

கார்கில் ஜெய்

கார்கில் ஜெய்