இன்னும் ஓர் இஸ்லாமிஸ்ட்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

வஹ்ஹாபி


“பார்ப்பனர்”, “சங்கராச்சாரி”, “சனாதனக் குட்டை” ஆகிய மூன்று சொற்களை நான் எழுதியதாகக் கடந்த 1, பிப்ரவரி 2008 திண்ணைப் பதிப்பில் நேச குமார் குற்றம் சாட்டி இருந்தார்.

அம்மூன்று சொற்களையும் நான் இதுவரை எழுதவேயில்லை என்று மறுத்து, நேச குமாரின் குற்றச் சாட்டுக்கு ஆதாரம் கேட்டிருந்தேன் [சுட்டி-1].

கற்பக வினாயகம் எழுதிய திண்ணைக் கட்டுரையில் காணப் படும் வரிகளை நான் எடுத்தாண்டதை, வழக்கம்போல் அரைகுறையாகப் படித்து, அவற்றை நான் எழுதியது போல, //பார்ப்பனர், சங்கராச்சாரி என்பது போன்ற பதங்களை பயன்படுத்துவதை அவர் சற்றும் தவறாக எண்ணவில்லை – இதுவே இஸ்லாமிஸ்ட் எதேச்சாதிகார மனோபாவம். என்னைக் கேட்டால் பார்ப்பனர் என்று ஏசுவதும், சங்கராச்சாரியார்களையும் இந்து மதத்தையும் ஏசுவதையும் (இதே திண்ணை வஹ்ஹாபி ஒரு முறை சனாதானக் குட்டை என்ற பதத்தை இந்து சமுதாயத்தைக் குறித்து பயன்படுத்தியிருந்தார்)// என்று போகிற போக்கில் குற்றம் சாட்டி இருந்தார். அவற்றை நான் மறுத்தெழுதியவுடன், தான் எழுதிய அவதூறை நிறுவுவதற்கு வழக்கம்போலவே வக்கின்றி, அஹமதியா, ஷியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் என்று வெண்டைக்காயை வெட்டி விளக்கெண்ணெய்யில் போட்டு வழவழத்திருக்கிறார் அரைகுறை [சுட்டி-2].

இனி, எனது 10.01.2008 திண்ணைக் கட்டுரையில் சாய்கோடுகளுக்கிடையில் எடுத்தாளப் பட்ட, கற்பக வினாயகத்தின் வரிகள்:

//பாரதி எழுதுகிறார் ‘திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாபதி யொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல், யாதொரு சண்டையுமின்றி, தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்’

ஆனால், உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததாய் வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை. மாறாக திப்பு, பார்ப்பனர்களை ஆதரித்த செய்திதான் கிடைத்துள்ளது. திப்புவின் ஆட்சியில் அரசுப்பணியில் இருந்த பார்ப்பனர்கள், தவறு செய்தால் கூட அவர்களைத் தண்டிக்கும் உரிமையை திப்பு ஏற்காமல், அவ்வுரிமையை சிருங்கேரி சங்கராச்சாரியிடமே ஒப்படைத்துள்ளான். 1791 இல் திப்பு சிருங்கேரி மடத்துக்கு எழுதிய கடிதம் இதோ:

‘There are more than 45 to 50 thousand Brahmins in our service. It is wondered if the Government alone is bestowed with Judiciary powers of handling their cases and punishing them for offence like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras. ‘

இன்னும் ஒரு படி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்க சாஸ்தரா சண்டி ஜெபம் நடத்த, திப்பு சங்கராச்சாரியைக் கேட்டுக்கொண்டான். ஓராயிரம் பார்ப்பனர்கள், 40 நாட்கள் ஜெபம் செய்தனர். முழுச்செலவையும் திப்பு ஏற்றுக்கொண்டான்.

பாரதிக்கு இஸ்லாமியர் மீது இருந்த வெறுப்பின் அடையாளமே மேற்கண்ட அவதூறு எழுத்து. இவ்வெறுப்பின் உச்சத்தை ‘சிவாஜி தன் சைனியத்துக்குக் கூறியது ‘ பாடலில் பரக்கக் காணலாம்.//

மேற்காணும் வரிகள், திண்ணை எழுத்தாளர் கற்பக வினாயகம் திண்ணையிலேயே ‘பாரதி தரிசனம்’ என்ற தலைப்பில் எழுதியவை [சுட்டி-3]. அதிலுங்கூட நேச குமாரின் ‘சனாதனக் குட்டை’ குற்றச் சாட்டைக் காண முடியவில்லை. எனவே, நேச குமாரின் அவதூறுகள் நிறுவப் படவில்லை என்பதை உறுதியாக இங்குப் பதிவு செய்கிறேன்.

சனாதனத்தைப் பொருத்த மட்டில், அதிலுள்ள வடகலையாரைக் குறித்துக் கவலைப் படுவதற்குத் தென்கலையாரும் தென்கலையாரைக் குறித்துக் கவலைப் படுவதற்கு வடகலையாரும் இவ்விருகலையாரையும் குறித்துக் கவலைப் படுவதற்கு ‘விடுதலை’யாரும் இருக்க, அதில் தலையிட எனக்கென்ன வந்தது? பிற சமயத்தைத் தூற்றுவது நேச குமாரைப் போல் எனக்கு முழுநேர வேலையோ பகுதிநேர வேலையோவன்று.

மற்றபடி, “ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள்” என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் ‘முஸ்லிம்’ என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது ‘இல்லை’ என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை.

இஸ்லாம் குறித்த எல்லை மீறிய மிரட்சியால், என்னதான் எழுதுகிறோம் என்பதை அறியாது, தன் நினைவற்று, கற்பக வினாயகத்தை இஸ்லாமிஸ்ட் ஆக்கி உளறி இருப்பது, நேச குமாரின் மிரட்சி (Phobia) உச்சத்துக்குப் போய் விட்டதை உணர்த்துகிறது.

இதில் வருத்தத்துக்குரிய திண்ணைக்குறை ஒன்றுண்டு!

தொடர்புடைய சுட்டிகள் அனைத்தும் திண்ணைப் பதிப்பின் ஆதாரங்களாகக் குறிப்பிடப் பட்டிருந்தும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் அவதூறுகளைப் பரப்புகின்ற, வெறுப்புணர்வை விதைக்கின்ற பதிவுகளைத் திண்ணை அப்படியே வெளியிடும் குறைதானது. நேச குமாருக்கு இதில் கூடுதல் வருத்தமிருக்கும். ஏனெனில், இக்குறையினால் தலைக் குனிவு ஏற்பட்டிருப்பது அவருக்குத்தான்.

ஃஃஃ

to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogsopt.com

சுட்டிகள்:
1 – http://wahhabipage.blogspot.com/2008/02/1.html
2 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802145&format=html
3 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=60603247&format=html

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி