திரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் – Thank You

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

ஸ்ரீனிவாசன்


ஐயா வணக்கம்,
திரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் படிக்க – ஆழ்ந்து கிரகிக்க – சந்தர்ர்ப்பம் அமைந்தது.
அவர் எழுதியிருக்கும் ஆதங்கங்களை உணரும்பொழுது, அவரின் நேர்மையின் வீர்யமும், சுடர்மிகும் அறிவுடன் படைக்கப்பட்ட அவரது எண்ணக் கோர்வைகளும் புரிந்து கொள்ள முடிகறது. அங்கீகாரம் தேடி ஓடாத நல்ல எழுத்தாளர்களையும், தவறான புறக்கணிப்பு சிறுமைப்படுத்தி மிகவும் நோகசெய்கிறது என்பது உண்மையே. சொந்தக்காசு ஊற்றி உரியவர்களை கௌரவிக்கவேண்டும் – நல்லவர்களை போற்றி மதித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்ற உந்துதலை, நேர்மையாக செயலாக்கத் தகுந்த ஈடுபாடு எல்லோருக்கும் அமைவதில்லை. எனக்கும் வருத்தமே. திரவியம் தேட திரைகடல் ஓடி வேற்று நாட்டிலே மாட்டிக்கொண்டு, நல்ல தமிழுக்காக அது தரும் மன நிறைவின் சொந்த சுகத்துக்காக எங்கும் நான் எப்படி உதவுவது என்கிற மன உளைச்சலளிலேருந்து மீள தெரியவில்ல. நம் பாரதிக்கு, அவரது நிகழ்கலாதில் நிகழ்ந்த அவமானம், பலருக்கும் இன்னமும் தொடர்கிறதே ஏன் என்று புர்நிதுகொள்ள முயல்கிறேன். என்னைபோன்ற பலரின் மன உளைச்சள்களை தொகுத்து வடித்து பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.
வணக்கம் .
ஸ்ரீனிவாசன் ,
பெர்த் , ஆஸ்திரேலியா.

srinaren17@gmail.com

Series Navigation

ஸ்ரீனிவாசன்

ஸ்ரீனிவாசன்