பா.த.ச -வின் அதிகாரபூர்வ விளக்கமும் – என் தகவல்கள் விளக்கமும்

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

கோவிந்த்



நான் முந்தைய தமிழ்ச் சங்க உறுப்பினர். தற்போது அமெரிக்காவில் இல்லை.
எனினும், அங்குள்ள என் நண்பர்கள் என்னிடம் தமிழ்ச் சங்கம் பற்றி அளவளாவுவது தொடர்கிறது.
அதில், முக்கிய இணைய எழுத்தாளரும், தமிழ் அறிவும், இந்திய – அமெரிக்க இறையான்மையில் மிகப் பெரிய நம்பிக்கை கொண்ட எனது நண்பரின் தகவல் அடிப்படையில் தகவல் உலகிற்கு தெரிய வேண்டும் என எழுதினேன்.

பிழை 1: கூட்டம் நடந்த இடம்:
– பொதுவாக தமிழ்ச் சங்கம் கோவில் கூடத்தில் நடந்தது என்பது அபூர்வம். ஆனால் சில முறை உண்டி கலை நிகழ்ச்சிகளுக்காக முருகப் பெருமான் சன்னதியில் நடந்துள்ளது. நானும் பொறுப்பாளராக இருந்துள்ளேன்.
– அதனால் கோவில் என்றவுடன் தமிழ்க் கடவுள் சன்னதி என நானே நினைத்து விட்டேன்.
– பின் விசாரிக்கையில், இடம் வேறு என்று தெரிந்தது, அதன் காரணமும் வேறு என புரிந்தது.

பிழை 2: “சரவணபவன்…….. சங்கநாதம்….”
– அவர்களின் சந்தோஷ செய்திகளை நண்பர் சொன்னதன் அடிப்படையில் கொஞ்சம் தமிழ்ப் பாணியில் வரிகள் தந்தேன். அது மாதிரி எழுதுவதை இனி தவிர்த்து விடுகிறேன்.
– ஆனால் இந்த சங்கத்தினருக்கு வரவேற்பைப் பார்த்து ஏக குஷி… எனெனில் பல வருடங்கள் இருக்கும் பே ஏரியா தமிழ்ச் சங்கத்திற்கு வரும் அளவிற்கு குறைவில்லாத கூட்டம் , முதல் கூட்டத்திற்கே..

சரி சில தகவல்கள்:
தி.க உடைந்து திமுக ஆனால் என்ன…. திமுக உடைந்து அதிமுக ஆனால் என்ன….
இல்லை புதிதாக வெளியில் இருந்து தே.மு.தி.க உதயமானால் என்ன….
உண்மை உண்மை தான்…

தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப்பற்றோ பணியோ செய்யாமல், தமிழர் அரசியல் நடக்கும் சங்கத்தை தமிழ்ச் சங்கம் என்று அழைப்பதில் எனக்கு உடன் பாடில்லை.. இரு வருடம் முன்பு திண்ணையில் தமிழர் சங்கமா… தமிழ்ச் சங்கமா என்று எழுதியுள்ளேன்….

மேலும், இந்திய தேசிய கீதம் பாடுவது பற்றிய நிலை, அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பாக கலிபோர்னியா தமிழ்ச் சங்கத்தின் நிலை எனக்கு உடன் பாடு இல்லாத ஒன்று.
ஆனால், பாரதி தமிழ்ச் சங்கத்தின் நிலை… பாராட்டப்பட வேண்டியது.

இதெல்லாம் விட, தமிழ்ச் சங்கம் தோன்றி பல ஆண்டு ஆகியும், 503C வாங்காமல் பிறரிடம் ஓடி ஓடி நிற்பது, எனக்கு ஒவ்வாத ஒன்று.
– இது மாதிரி சூழலில் தோன்றிய நிலையில் உடனே 503C பெற்ற பாரதி தமிழ்ச் சங்கத்தின் செயல் திறன் பாராட்டப்பட வேண்டியது.

தமிழக்த்தின் அரசியல் தாக்கம் ஒரு வழியாக ஒரு தீர்வை கலிபோர்னியா தமிழ் மக்களிடையே ஒரு சாரார் கோலோச்சியது முடிவிற்கு வருவதற்கான ஆரம்பம் தொடங்கிவிட்டது…
—-
ஓடி விளையாடு பாப்பா….!
அச்சமில்லை.. அச்சமில்லை….!
பாதகம் செய்பவரைக் கண்டால்….!
ஒளி படைத்த கண்ணினாய்….!
சிந்து நதியின் மிசை….! –
– இவைகளை தெரிந்து , புரிந்து கொள்ளாமல் தமிழ் கற்றென்ன….. அப் புத்தகங்களை எடைக்கு விற்றென்ன…
அதனால்
– அழகிய , துவேஷமற்ற தெளிவான கருத்துக்களுடன் தமிழர் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டிய பணியையும் பாரதி தமிழ்ச் சங்கம் செய்ய வேண்டும்…
வாருங்கள் வாழ்த்துவோம், பாரதிய தமிழ் சங்கத்தினரை…..

கோவிந்த்


govind.karup@gmail.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்