ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள் – கோட்டை பிரபுவின் கட்டுரை

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

இரா.பிரவீன் குமார்



நண்பர் கோட்டை பிரபுவின் கட்டுரை மிகவும் அருமை. ரணங்களாக்கப்பட்ட மனங்களுக்கு அவருடைய மனக்குமுறல் நல்லதொரு மருந்து. தமிழகத்தை பிரிதிநிதித்து வரும் பெறும்பாலோர் செய்யும் செயலையே ஆச்சி அவர்களும் பின்பற்றி சென்றுள்ளார்.ஒரு சிலர் இதில் விதிவிலக்கு( இயக்குனர் சீமான்,பட்டிமன்ற பேச்சாளர் திரு. க. இராசாராம் …) சிங்கையில் தமிழ்மொழி சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகள் அதிகம், அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்காக தமிழகத்தில் நிகழ்ச்சிகள் நடப்பதில்லை என்றும், தமிழக ரசிகர்கள் ரசிப்பதில்லை என்றும் சொல்வது எந்தவகையில் நியாயம்? தமிழக ரசிகர்கள் ரசிக்காமலா, ஆச்சி அவர்கள் 1200 படத்தில் நடித்து,தற்பொழுதும் நடிக்க காத்துக்கொண்டு இருக்கிறார்? இதேப் பேச்சை தமிழக மேடையில் பேச ஆச்சி அவர்களால் இயலுமா?. ஆச்சி அவர்கள் அன்றய மேடையில் நல்ல பாடலை பாடினார்,புறநானூற்றில் இருந்து வசனங்களை வாசித்தார் வாழ்த்துக்கள்.

மயில்தூரிகை எழுத்துக்களால் மருந்திட்ட கோட்டை பிரபு அவர்களுக்கு பாராட்டுக்கள், அதை வெளியிட்ட தின்னைக்கு நெஞ்ஞார்ந்த நன்றிகள்.

இதமுடன்

இரா.பிரவீன் குமார்.

Series Navigation

இரா.பிரவீன் குமார்

இரா.பிரவீன் குமார்

ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

கோட்டை பிரபு


அயல் நாடுகளில் பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரபல கலைஞர்கள்,தலைவர்கள் அவரவர்தம் பிறந்த நாட்டின் பெருமை பேசவேண்டியவர்கள், அதைச்செய்யாவிட்டாலும் இகழ்ச்சியாக்காமல் இருக்கவேண்டும். அதற்கு மாறாக, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த கண்ணதாசன் முத்து விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா அவர்கள் பேசியபோது �இதுபோன்ற விழாக்கள் தமிழகத்தில் நடைபெறுவது இல்லையென்றும், நல்ல தனித்தமிழ்ப் பாடல்களை அவர்கள் இரசிப்பதில்லையென்றும்� மேடையில் அறிவிக்கும்போது, அச்சொற்கள் அங்கு அமர்ந்திருக்கும் உணர்வுள்ளவர்களின் மனங்களை ரணங்களாக்கும் என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை? .
ஒரு நிகழ்ச்சி நடத்துவதென்பதும் அதில் பங்கேற்பதென்பதும் பெரிய விசயம்தான். அது எங்கு நிகழ்வினும் பாராட்டப்படவேண்டியதே , ஆனால், தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியையும், தன்னை அழைத்து உபசரித்த அமைப்பையும் திருப்திப்படுத்துவதற்காக அந்நேரத்தில் அவர்களது � நா � அவ்வாறு பிறழ்கிறதா?
சிங்கையில் பிற இனத்தைக்காட்டிலும் தமிழர்களது மொழிசார்ந்த நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. உண்மையில் பெருமிதம்தான், அதற்காக ஒன்றைத் தாழ்த்தி மற்றதை உயர்த்தவேண்டுமா?.
ஒருநாட்டிலிருந்து சிறப்பு விருந்தினர் அழைக்கப்படும்போது ஏதோ ஒரு வகையில் அவர் அந்நாட்டின் பிரதிநிதியாகவே வந்திருக்கிறோம் என்பதை ஏன் எண்ண மறக்கிறார்கள்? வெறும் கைத்தட்டலுக்காக இதுபோன்ற சிறுமை விளம்பரங்கள் தேவையா?
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்துள்ளதே இன்றைய உலகம் என்பதை உணர்ந்தவர்கள் நாம். நம் நாட்டில் சில தரம் கெட்ட குழப்பவாதிகள் நிகழ்த்தும் சிறுமைச்செயல்களையும், எங்கோ நிகழும் ஒழுங்கீனங்களையும் இப்படித்தான் எங்கள் நாடு என்ற வகையில் மற்றநாடுகளில் போய் மேடையில் அம்பலப்படுத்த வேண்டியதன் அவசியம்தான் என்ன?
இதுபோன்ற அவமதிப்புகள் தேவையற்ற இனப்பூசல்களைத் தோற்றுவிக்கும் என்பதனை தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தும் சிங்கை அமைப்புகள் உணர்ந்துகொண்டு இனிமேல் வருகைதரும் விருந்தினரிடம் இதுபற்றி ஆலோசிப்பது ஒன்றே ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
மனக்குமுறலுடன்,
கோட்டை பிரபு


kottaiprabhu@yahoo.com

Series Navigation

கோட்டை பிரபு

கோட்டை பிரபு