ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
ஸ்ரீனி
தமிழகத்தில் சேது திட்டம் தமிழர்களுக்கான நெடுநாள் கனவு என்ற உணர்வையும், வடக்கில் மதவாத உணர்வையும் தூண்டி நமது ஓட்டு அரசியல் நடக்கிறது.ராமர் இருந்தாரா,அவர் எஞ்சீனீயரா,அவர் அருந்திய உணவு,மற்றும் பான வகைகள் என்ன என்று ஒரு புறம், ராமர் இங்கேதான் உட்கார்ந்தார்,இதுதான் அவர் நடந்த பாதை,இது அவர் போட்ட செருப்பு,இது அவரது அம்பு விழுந்த இடம் என்று மற்றோரு புறம்.கவைக்குதவாத உணர்வுகளைத் தூண்டும் வெட்டித்தனமான இப் பிராசரங்களினால், திட்டத்தின் முக்கியமான நோக்கங்களும்,அணமை மற்றும் தொலை நோக்கு சமூகப் பொருளாதார பலன்களும்,திட்ட மதிப்பீடுகளும், காற்றில் பறந்து விட்டன.கஹானி ராம்ஜிகி என்று மெகா ஷோதான் தெரிகிறது. வெட்டியும்,ஒட்டியும் ராமபிராபல்யம் முழங்குகிற முழக்கத்தில்,ஏதாவது உள்ளூர் அல்லது அயலூர் பல்கலை அவருக்கு விரைவில் முனைவர் பட்டம் கொடுக்க சாத்தியக்கூறுகள் தென்படுகிறது.இப்படியே போனால் எப்போது சேதுவை மேடுறுத்தி எந்த வீதியை சமைப்பது?
ராமர் பாலமும்,பாபர் மஸ்ஜித்தும் ஒப்பிடப்படுகின்றன.
அத்துடன் சோம்நாத்,மற்றும் ராமானுஜர் கால கர சேவைக்குள்ளான வழிபாட்டுத் தலங்களையும் சேர்த்து, பின்னர் நாவுக்கரசர்,ஞான சம்பந்தர் மடங்களை எதிர்த்து மார்வாடி,குஜராத்தி ஜெயின்களும் ஆர்ப்பாட்டம் செய்தால் நாடு
முன்னேறும்! இப்படியே நூறு,ஆயிரம் வருடங்கள் பின்னோக்கியே நம் வாதங்களை வைத்துக் கொண்டிருந்தால்,
“ஆக்கபூர்வமான” என்கிற பதம் நம்மிடையே அழிந்து விடும்.
வரலாறு கூறும் நமது விஞ்ஞான அறிவு,உலக அதியசங்களைத் தந்த கட்டுமானக்கலைகள், நிர்வாக, ராஜரீக முறை வழிகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பிரிட்டிஷார் தொடங்கி, இன்றைய அரசியல் வியாபாரிகள் வரை பலவிதமாக எழுதப்பட்டு விட்ட நமது சாதீய சரித்திரத்தை மட்டும் விடாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்.எதன் அடிப்படையில்,எந்த நம்பிக்கையில் நாம் அடித்துக் கொள்கிறோம் என்பது புரியவில்லை.
பாப்ரியை அரசியலாக்கி ஆட்சியையும் பிடித்தவர்களுடன் இரெண்டு திராவிடக் கட்சிகளும் ஆட்சியில் இடம் பெற்றனரே.என்ன கொள்கையில்?நாம ஆட்சியில் இருக்கும் போதே டெண்டர் விட்டு காசு பார்க்கணும்.ஆட்சியில் இல்லாத போது? ராமரையோ,பாபரையோ வைத்துக் கட்டை போட வேண்டும்.
இந்த temparamentதான் கோலோச்சுகிறது.சயின்ஸ்?அது எப்பவோ சமாதியாகி விட்டது.
ராமர்ன்னாலும் குண்டு!பாபர்ன்னாலும் குண்டு!எந்த குண்டு எப்போ வெடிக்குமோ என்கிற பயத்தில் வயிற்றுப் பிழைப்புக்கு தினசரி வாழ்வில் நசுக்கல்பட்டு பயணிக்கும் பாமரனுக்கு பாபராவது, ராமராவது.
ஸ்ரீனி
kmnsri@rediffmail.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 10 அத்தியாயம் பதின்மூன்று
- ஹெச்.ஜி.ரசூல் படைப்புலகம்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 31
- காதலினால் அல்ல
- மனசாட்சி
- கால நதிக்கரையில்……(நாவல்)-27
- நாய்கள் துரத்தும் போது…
- பனி விழும் இரவு
- தொடக்க நிலையிலுள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடராமல் இருப்பதே நலம்
- படித்ததும் புரிந்ததும்..(5) பதவிப் பிரமானம் (பதவிப் பரிமானம்
- பெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும்
- நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள்
- ஒலி இலக்கியச்செம்மல் திருவண்ணாமலை சி.மனோகரன்
- சவம் நிரம்பியபுத்தகபைகள்
- பாரத அணு மின்சக்தித் திட்டங்களும் அவற்றின் அமைப்புத் திறனும் – 6
- பட்டர் பிஸ்கட்
- டி.என். சேஷகோபாலன் என்ற புத்துணர்வு
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- பிரதாப சந்திர விலாசம் (தமிழின் முதல் இசை நாடகம்), புத்தக மதிப்புரை
- கொழும்பு புத்தகக் கண்காட்சி – ஒரு விசிட் !
- காதல் நாற்பது -42 என் எதிர்காலத்தை எழுது !
- ஈகைத் திருநாள்!
- Letter
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள் – கோட்டை பிரபுவின் கட்டுரை
- நவகாளியில் காந்திஜி
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் 17.
- தர்மசிறி பண்டாரநாயக்கவின் விவரணப் படவிழா
- பெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- சிங்கை வீதிகளில் பாரதி !!!
- “தொல்காப்பியச் செல்வர் கு சுந்தர மூர்த்தி” : முனைவர் மு இளங்கோவன் கட்டுரை
- தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு – கருத்தரங்கம்
- சோதிப்பிரகாசம் : திண்ணையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரை
- என் இசைப் பயணம்
- ஆயிரம் பொய்யைச்சொல்லி…….
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1 பாகம் 2