சொன்னாலும் சொல்லுவார்கள்- மலர் மன்னன் கட்டுரை

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

பரகாலன்


அன்பார்ந்த ஐயா
வணக்கம் பல,

நமது தொல்லியல் துறை தொல்லை தரும் துறையாகத்தான் இருக்கிறது, ஏதாவது பழம் பெரும் நினைவுச் சின்னங்கள் இயற்கை மரணமடைய வேண்டுமானால் நமது தொல்லியல் துறையிடம் கொடுத்து விடலாம்.

ஜெயா தொலைக் காட்சியில் சுவடுகள் என்று ஒரு சிறு துண்டுப் படம் காட்டுவார்கள், அதில் ஒன்றிம் ஒரு ஆலயம் முற்றிலும் அழிந்து கிடப்பதையும் அதன் அருகில் இந்த ஆலயம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற அறிவுப்புப் பலகையும் கேட்பாரற்றுக் கிடக்கும்.

அழகர் கோயிலின் எதிரிலுள்ள ஒரு கல் மண்டபம் தொல்லியல் துறையின் கட்டுப் பாட்டில் இருக்கிறது, அதன் அழகைச் சென்று பார்க்க விடாமல் ஒரு அறிவுப்புப் பலகை தொங்கும், அதில் ‘இந்தக் கட்டடம் தொல்லியல் துறையின் கட்டுப் பாட்டில் இருக்கிறது, உள்ளே செல்ல அனுமதி இல்லை. ஆபத்தானது.

சரியான வாக்கியங்கள் நினைவில் இல்லை. ஆனால் பொருள் இது தான்.

முதுபெரும் எழுத்தாளர் மலர் மன்னனுக்கு என் நன்றிகள்
அன்புடன்
பரகாலன்


parakaalan@gmail.com

Series Navigation

பரகாலன்

பரகாலன்