ஸ்ரீனி’யின் ‘அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…’

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
பெரியார் குறித்த என் கட்டுரையைச் சிறப்பாக வெளியிட்டதுடன், அதற்கான படத்தையும் தெரிவு செய்து வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

ஸ்ரீனி’யின் ‘அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…’– நகைச்சுவையோடு கூடிய வித்தியாசமான கட்டுரை, என்னையும் என் இளைய பருவத்துக்குக் கொண்டு சென்றது.

என்ன வியப்பு! அவர் தொலைநோக்குடையவர் போல… இன்று காலை, சன் தொ.கா. – செய்திகளை ஒளிபரப்பத் தொடங்கியபொழுது, தற்செயலாக கலைஞர் தொ.கா. என்ன பண்ணுகிறது என்று பார்க்க, அங்கே –“அப்புறம் வருவார் பாருங்க,கோடையிடிக்
குரலழகி (!) எல்.ஆர்.ஈஸ்வரி!அவர் மாரியம்மா என்று அழைப்பதே சொக்க வைக்கும்.அவரது குரலும், பாடும் பாணியும் இது வரையில் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை” என்று ஸ்ரீனி சித்தரித்த அதே எல்.ஆர்.ஈஸ்வரி நேர்காணல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தவிர, ஸ்ரீனி கட்டுரையில் சொல்லியிருந்த “மாரியம்மா”பாட்டையெல்லாம் பாடிவேறு காண்பிக்கிறார்.
தோசைத்தட்டு, தோசைக்கவர் என்றெல்லாம் ‘கிராமபோன் பிளேட்டு’ – எங்களூரில் சொல்லப்படவில்லை. தேள்கடி மருந்தாக அது எங்களூரில் மிகவும் மதிக்கப்பட்டது. தேள்கடிக்கு கடிவாயில் உரைத்துப் போடுவார்கள்!

கவனக்குறைவாக வெளியே வைக்கப்படும் ‘பிளேட்டு’ அவ்வளவுதான்… ‘His Master’s Voice’ இசைத்தட்டு விளம்பரத்தை மறக்க முடியுமா? பொன்னிறப் பீர்க்கம்பூ போலும் கிராமபோன் ஒலிபெருக்கி முன் ஒரு அழகான நாய் அமர்ந்து, தன் எஜமானின் குரலை விசுவாசாமாகக் கேட்பதுபோன்ற விளம்பரம்.. அப்புறம் கோவையிலிருந்து சென்னை மௌண்ட் ரோடு வந்து சரஸ்வதி எம்போரியத்தில் பாகவதர் இசைத்தட்டுகளை வாங்கிச் சென்ற ஞாபகம்…

ஸ்ரீனி ‘ரொம்பவும்தான்’ கிராமம், ‘சவுண்ட் செர்வீஸ்’ கிராமஃபோன் முதலான பழைய நினைவுகளைக் கிளறிவிட்டார்.
பாராட்டுகள்!
அன்புடன்,
தேவமைந்தன்


karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்