நிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

மு.இளங்கோவன்


நிகழ்ச்சிகள்

தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும் என்னும் தலைப்பில் புதுச்சேரியில் அமைந்துள்ள
பிரெஞ்சு ஆய்வுநிறுவனத்தில் உலக அளவிலான கருத்தரங்கம் ஒன்று செப்டம்பர்12-14(மூன்று நாள்) நடைபெற்றது.இதனைப்
பெர்க்கிலியில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தெற்காசிய ஆய்வுத்துறையும் இணைந்து நடத்தியது.இக்கருத்தரங்கிற்கு உலகம் முழுவதும் இருந்தும் பேராசிரியர்கள் அழைக்கப்பட்டனர்.அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன்,இரா.நாகசாமி,பிரேமா நந்தகுமார்,விசயலெட்சுமி,கவிஞர் ஞானக்கூத்தன், அ.அ.மணவாளன்,வீ.அரசு,கிருட்டிணமூர்த்தி
சாத்திரி,இரா.கோதண்டராமன்,சுப்பராயலு,சுப்பிரமணியன்,கி.நாச்சிமுத்து முதலானவர்கள் தமிழகத்திலிருந்து கலந்துகொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அயல்நாட்டினருள் முல்லர்.குரோ,கெர்மன் டிக்கன்,அன்னே மோனியசு,சிறிலதாஇராமன் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

‘இக்கருத்தரங்கு தனித்துவமானது.தெற்காசியாவிலேயே முதன்முறையாக, இலக்கணம், மொழியியல், எழுத்தியல், தத்துவவியல், இலக்கியம் மற்றும் வரலாறு ஆகிய துறைகளில் இந்த இரு செவ்வியல் மொழிகளுக்கும் இடையிலான உறவை ஆராய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.தமிழ்ப்பண்பாட்டின் கூறுகள் இரு மூலங்களால் வரையறுக்கப்படுகின்றன.ஒன்று சமற்கிருதம்,மற்றது எந்த விதத்திலும் பழமை குன்றாத சங்க இலக்கியத்திலிருந்து தொடங்கக்கூடிய தமிழ். ஒரே பண்பாட்டிற்கு இரு செவ்வியல் மொழிகள்’ என்னும் நோக்கத்துடன் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மு.இளங்கோவன்
புதுச்சேரி


muelangovan@gmail.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்