மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை குறிப்பிடத்தக்கது.
திண்ணையில் எங்கள் பங்களிப்பின் நேர்மையை ஒருமுறை சாணைதீட்டிக் கொள்ள அது உதவியது.
நான்கூட ‘நகைச்சுவையும் வித்தியாசமானவையும்’ பகுதியில் ஆகக் குறைவான பங்களிப்பையே செய்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்தப் பகுதியை வாசிக்காமல் விட்டதில்லை. ‘gentle sarcasm’ என்று சொல்லப்பெறுகின்ற ‘பதமான நக்கலடிப்பு’ நம் எழுத்தில் கைவருவது, அருமை. ‘சொதப்பப்பா,’ …. பாரி ஆகியவர்களின் நகைச்சுவை நன்றாக இருக்கும். சொதப்பப்பா தமிழ்த்திரைப்படங்களைக் குறித்து எழுதியவையும் விடாது வாசித்துள்ளேன்.
பெர்ட்ராண்ட் ரஸ்ஸலை ஆங்கில உலகம் வரவேற்றது போலவும் ‘Betrand Russel’s Best’ புத்தகம் இன்றும் வரவேற்கப்படுவது போன்றும் தமிழில் திண்ணை நண்பருள் ஒருவர் வரவேற்கப்பெறும் நாளே, மதியழகன் சுப்பையா அவர்களின் நோக்கம் நிறைவேறப்போகும் நன்னாள்.
மற்றபடி திண்ணையின் இயங்கு தளங்கள் குறித்த அவரது பார்வைகள் கூரானவையே.
மாறுபட்ட கருத்தாடல்களுக்கு மதிப்புத் தரும் பெருந்தன்மையான பாங்கே திண்ணையின் வெற்றிக்கு மிக முதன்மையான காரணம் என்பேன்.
அன்புள்ள,
தேவமைந்தன்
(அ.பசுபதி)


pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்