பாரதி -125 பன்னாட்டுக் கருத்தரங்கம்

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

அறிவிப்பு


ஐயா வணக்கம்.
பின்வரும் செய்தியைத் திண்ணையில் வெளியிட்டு உதவவும்.
மு.இளங்கோவன்,புதுச்சேரி

பாரதி -125 பன்னாட்டுக் கருத்தரங்கம்
புதுவைப் பல்கலைக்கழகச் சுப்பிரமணியபாரதியார் தமிழியற்புலமும்,
சென்னை வானவில் பண்பாட்டு மையமும் இணைந்து பாரதி -125 என்ற தலைப்பில்
மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கினை 2007 செப்டம்பர் 21,22,23 ஆகிய நாட்களில்
புதுவைப்பல்கலைக்கழகத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளன.
கட்டுரைச்சுருக்கம் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் அனுப்பவேண்டும்.
அறிஞர் குழு தேர்ந்தெடுக்கும் கட்டுரையாளர்க்குத் தகவல் 25.07.2007 நாளுக்குள் அனுப்பப்படும்.
அதன்பின் முழுக்கட்டுரையும்,பதிவுக்கட்டணமும் அனுப்பவேண்டும்.
கட்டுரை தமிழ் அல்லது ஆங்கில மொழியில் அமையலாம்.
கட்டுரைச்சுருக்கம் 10.07.2007 நாளுக்குள் அனுப்பவேண்டும்.

கட்டுரை வரைவதற்கான பொதுத்தலைப்புகள்:
பாரதியின் படைப்புகளில் மரபின் சுவடுகள்: இலக்கியம்,சமூகம்,ஆன்மீகம்
பாரதியின் தாக்கம்:இலக்கியம்,சமூகம்,ஆன்மீகம்
பாரதியின் உலக நோக்கு
பாரதியின் அறிவியல் அணுகுமுறை
பாரதியின் உயர்நோக்குக்கொள்கை
பாரதியின் படைப்புகளில் உணர்ச்சியின் உந்துசக்தி
பாரதியில் மரபும் புரட்சியும்
பாரதியின் மொழிப்பாங்கு: தொன்மையும் சமகாலத்தன்மையும்
இன்றைய சூழலில் பாரதியின் சிந்தனைகள் ஏற்புடைமை
பாரதி ஒரு திறனாய்வாளர்
பாரதியில் தெய்வீகமும் மானுடமும்
பாரதியின் அழகியற் கொள்கை
பாரதியின் ஆங்கிலப் படைப்புகள்
பாரதியியல் ஆய்வாளர்களின் பங்களிப்பு
பாரதியாருடன் தொடர்புடைய பிற கூறுகள்
அனைத்துத்தொடர்புகளுக்கும் :

முனைவர் அ.அறிவுநம்பி,
ஒருங்கிணைப்பாளர் பாரதி -125
தமிழியற்புலம்,புதுவைப்பல்கலைக்கழகம்,
புதுச்சேரி -605 014
இந்தியா
பேசி: + 9443117769
+0413 – 2654464
மின்னஞ்சல்: arivunambi@tamilid.com

செய்தி:
முனைவர் மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,
புதுச்சேரி -605003,இந்தியா


muelangovan@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு