வெளிநாடுவாழ் மயிலாடுதுறை பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்


வெளிநாடுவாழ் மயிலாடுதுறை பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியைச் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியே஡டு இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்காணும் கடிதத்தில் உள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டு உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய
கேட்டுக் கொள்கிறேன். கருத்துக்களை அல்லது கருத்துக்களின் நகல்களைக் கீழ்க்க஡ணும் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்
ஆசிரியர்,www.tamilthinai.com
e-mail :info@tamilthinai.com, tamilthinai@gmail.com

பெறுநர்
தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள்
புதுதில்லி.

ஐயா,
பொருள்: மயிலாடுதுறையின் பெருமை பேணப்படவும், புகழ் காக்கப்படவும் மயில஡டுதுறை என்னும் பெயரில் நாடாளுமன்றத் தொகுதி தொடர்ந்து தனித்தன்மையுடன் நீடிக்க வேண்டும் – பொதுமக்கள் வேண்டுதல் தொடர்பாக.
– – – – –

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி தொடர்ந்து இதே நிலையில் நீடிக்கவேண்டும் என்று மயிலாடுதுறை பொதுமக்கள் சார்பாக, தங்களுக்கு எங்கள் வாக்கர்ஸ் கிளப் வேண்டுகோளை முன்வைக்கின்றது. மயிலாடுதுறை நாடாளுமன்றம் தற்போது 1.பூ ம்புகார், 2.மயிலாடுதுறை, 3.குத்தலாம் 4.திருவிடைமருதூர் 5.கும்பகோணம் 6.சீர்காழி ஆகிய ஆறு தொகுதிகளை உள்ளடக்கியது. அவற்றுள் முதல் ஐந்து தொகுதிகள் காவிரி டெல்டா பாசனத்தில் அமைந்துள்ளன. மற்றும் சோழர் காலத்தில் அமைக்கப் பெற்ற கல்லணை முதல் பூம்புகார் வரை கரிகாலன் காலத்தில் அமைக்கப்பட்ட கல்லணை சாலையில் அமைந்துள்ளது என்பது வரலாற்றுப் பெருமையாகும்.

சிதம்பரம் தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் என்னும் இரு சட்டப்பேரவை தொகுதிகளோடு மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பூம்புகார்,மயிலாடுதுறை,சீர்காழி,
திருவிடைமருதூர் ஆகிய 4 தொகுதிகளை இணைத்து புதிய சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் நாடாளுமன்ற தொகுதிகள் தனித்தனி மாவட்டங்களாக மாறும் நிலை உள்ளது. இந்நிலையில் கடலூர் மா
வட்டம், நாகை மாவட்டம் இரண்டையும் பிரிக்கும் இயற்கை அரணான கொள்ளிடம் ஆறு கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மயிலாடுதுறை தனி மாவட்டமாக இருப்பதற்கு எல்லாவிதமான தகுதிகள் இருந்தும் நாகை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. இது எங்கள் பகுதி பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகும். மயிலாடுதுறை மக்கள் தலைமையிடமான நாக
ப்பட்டினம் செல்லவேண்டுமென்றால் சுமார் 3.00 மணி நேரம் பயணம் செல்ல஧வண்டியுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மயிலாடுதுறையின் வரலாறு தொன்மையானது மட்டுமல்ல, சமூகம் மற்றும் இலக்கியத்திலும் பின்னிப்பிணைந்தது என்பது சிறப்பான உண்மையாகும். 1800இல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கியபோது தஞ்சை நகரத்
தையும் மன்னார்குடி நகரத்தையும் மயிலாடுதுறை நகரத்தையும் ஒன்றிணைத்துதான் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் ஧வ.தி.செல்லம் குறிப்பிடுகின்றார். இன்றைக்கு மாநகராட்சி என்னும் அளவிற்கு உய
ர்ந்துவிட்ட திருச்சிராப்பள்ளி நகராட்சித் தகுதி பெறுவதற்குப் பல ஆண்டுக்களுக்கு முன்பே, அதாவது 1866இல் நகராட்சித் தகுதியைப் பெற்றது மயிலாடுதுறை என்பது மற்றோர் வரலாற்றுப் பெருமையாகும். தமிழின் முதல் நாவல் பிரதாபமுதலியார் சரி
த்திரம் என்பதாகும். இது 1876இல் எழுதப்பட்டது. இதனை எழுதியவர் மயிலாடுதுறை நீதிபதியாக இருந்து புகழ்பெற்ற வேதநாயகம் அவர்கள் என்பதை தமிழ் இலக்கிய வரலாறு சுட்டுகின்றது. சமூக வரலாற்றிலும் மயிலாடுதுறை சிறப்பானதொரு இடத்தைப் பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தகுந்தாதகும். 1925இல் மயிலாடுதுநறயில் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் அவர்கள் நடத்திய தேவதாசி ஒழிப்பு மாநாடு அந்நாளில் அகில இந்திய கவனத்தையும், அகில இந்திய தலைவர்களான மகாத்மா காந்தி, பண்டிட் நேரு போன்றவர்களின் கவனத்தையும் கவர்ந்தது என்பது தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு இல்லாத பெருமை மயிலாடுதுறைக்கு உண்டு.
பெண்ணியத்தின் இன்றையப் பெரும் எழுச்சிக்கு வித்தாக மயிலாடுதுறை இருந்தது என்பதை பெண்ணிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வரலாற்றுத் தொன்மையும், சமூக வரலாற்றில் பெருமையும் கொண்ட மயிலாடுதுநறயை சிதம்பரம் நாடாளுமன்றம் என்னும் பெயா஢ல் இணைப்பதன் வாயிலாக மயில஡டுதுறையின் பெருமையை உலகம் அறிந்துகொள்ளும் வாய்ப்பை இழக்கும். வரல
ற்றை அறிந்த இனங்களே உலகில் முன்னேறியிருக்கின்றன. இந்திய வரலாற்றில் அழியா புகழ் பெற்ற மயிலாடுதுறையின் புகழ் பேணப்படவும் பெருமை நிலைநாட்டப்படவும் மயிலாடுதுறை நாடாளுமன்றம் என்ற பெயா஢ல் நாடாளுமன்றத் தொகுதி
நீடிக்கவேண்டும் என்பது மயிலாடுதுறை மக்களின் பெருவிருப்பமாகும் என்பதுமட்டுமல்ல, வரலாற்றிக்கும் பெருமை சேர்க்கும் என்பதைத் தங்களின் கனிவான பார்வை க்கு வைக்க விரும்புகிறோம். தற்போதைய மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிந
யப் பிரித்து சிதம்பரம் நாடாளுமன்றம் என்ற பெயா஢ல் அமைப்பதால் எதிர்காலத்தில் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எங்களின் வேண்டுகோளை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்திட
அன்புடன் வேண்டுகிறோம்.

தங்கள் உண்மையுள்ள,


tamilthinai@gmail.com

Series Navigation

முனைவர் தி.நெடுஞ்செழியன்

முனைவர் தி.நெடுஞ்செழியன்