இலக்குகள் நோக்கிய பயணத்தில் பாரதி இளைஞர்அணி

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

நீ “தீ”



கடந்த மே 1ல் தனது 25வது ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடி உள்ளது பாரதி இளைஞர்அணி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தாஞ்சூர் கிராமம் கடந்த 25ஆண்டுகளாக பொதுப்பார்வையில் சமூகப்பணியாற்றி சாதனைபடைத்து வருகின்றது. எனது நண்பரும் பட்டிமன்றப்பேச்சாளருமான சிந்தனைச்செல்வன் திருஸ்டாலின் சொல்லித்தான் எனக்கு இந்த தகவல் அனைத்தும் தெரியவந்தது.

ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் விழாஎடுத்து கல்விப்பணியாற்றி வருகின்றனர். கடந்த 3ஆண்டுகளாக இவ்விழாவை உழைப்பாளர் தினத்திலே நடத்தி வருகின்றனர் ஆண்டுதோறும் கல்விப்பணிக்காக ரூபாய் 20000.00 க்கும் மேல் உதவி செய்துவருகின்றனர். குறிப்பிட்டு சொல்லவேண்டியஅம்சம் என்றால் இவ்வூரார் உயர்நிலைபள்ளி வருவதற்கு இரண்டு பேருந்து தடத்திற்கு நூலகம் வருவதற்கு என்று இன்னும் பல நிகழ்வுகளுக்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் சாதித்து உள்ளனர். மேலும் நன்கொடை திரட்டி பள்ளிக்கட்டிடம் கட்டித்தந்துள்ளனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏனக்கு ஆச்சர்யமான விசயங்கள் சில தென்பட்டன இதுபற்றி என் நண்பரிடமே விவாதித்தேன். 25ஆண்டுகள் ஒரு இயக்கத்தை தொடர்ந்து நடத்துவது என்பது எவ்வளவு கஷ்டமான விசயம். அதுவும் ஆரோக்யமா நடத்துவது என்பது? தாஞ்சூர் கிராமத்தில் இன்றுவரை எந்த ஒரு திரைப்பட ரசிகர் மன்றம் இல்லை. இதைச் சொன்னால் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும் அல்லவா. ஆனால் எனக்கு ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. காரணம் இன்றைய தாஞ்சூர் இளைஞர்களை பார்த்து நாளைய தாஞ்சூர் இளைஞர்கள் வருவதாலே! இதுதான் நிதர்சனம். நூன் என் நண்பரிடம் இப்படிச் சொன்னேன். உங்கள் ஊருக்கு இனி எந்த காலத்திலுமே ரசிகர் மன்றம் வராது என்றும் அப்படி எண்ணங்கள் எதுவும் தோன்றினாலும் அது உங்கள் ஊருக்கு வெளியே இருக்குமேயன்றி உங்கள் ஊருக்குள் வராது என்றேன்.

25ஆண்டுகளாக கல்விப்பணியில் எத்தனைபேரின் உழைப்பு இருந்திருக்கும். ஏத்தனை மாண்கர்கள் பயனடைந்திருக்ககூடும்! எண்ணிப்பாருங்கள். நூம் இன்னமும் பாரதி எங்கே விவேகானந்தர் எங்கே என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறோம். இங்கு ஒரு கிராமமே பாரதியாக உருவெடுத்துள்ளதே. தாஞ்சூர் கிராமத்தை எத்தனைபேர் பார்த்திருக்ககூடும்? எத்தனைபேரை பாதித்து இருக்ககூடும்?

உண்மையை சொல்லவேண்டும்மெனில் தாஞ்சூர் எனக்கு கிராமமாக தெரியவில்லை ஒரு குடும்பமாகத்தான் தெரிகிறது.

உங்களின் சிகரம்தொடும் பயணத்திற்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இப் பிரபஞ்சம் இருக்கும்வரை பாரதி இருப்பான்

தாஞ்சூர் கிராமமும் அப்படியே

பாரதி இளைஞர் அணியுடன்!


Series Navigation

நீ “தீ”

நீ “தீ”